பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 13, 2013

உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவதுஎப்படி?




மனைவியிடம் நல்லபேர் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லீங்கோ! அதுக்கு அசாத்தியமான திறமை + பொறுமை இதெல்லாம் அவசியம்! ”ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுவது மாதிரி” அப்டீன்னு நீங்க கருதினால், இந்த ரிஸ்க்கை நீங்கள் எடுத்துப் பார்க்கலாம்! இல்லை இது கஷ்டம்னு தோணிச்சுதுன்னா, “ எனக்கு நல்லபேரே வாணாம்! ஆளைவிடுடா சாமி” அப்டீன்னு பேசாம கம்முன்னு இருக்கலாம்!

ஆனா ஒண்ணு “ உங்களைக் கட்டி நா என்ன சுகத்தைக் கண்டேன்” அப்டீங்கற வாக்கியத்த நீங்க மணிக்கொருமுறை கேட்டுக்கிட்டே இருக்கவேண்டியதிருக்கும்! ஹி ஹி ஹி ஹி ஹி அதற்குத் தயாராக இருங்கோ! :-)

01. உங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்க முதலில் என்ன செய்யணும் தெரியுமா? - கல்யாணம் பண்ணணும்! நீங்க கல்யாணம் பண்ணினாத்தான் உங்களுக்கு ஒரு மனைவி கெடைப்பாங்க! அப்புறம் தான் நீங்கள் நல்ல பேர் வாங்குவது பற்றி சிந்திக்க முடியும்! :-)

02. கல்யாணம் பண்ணின புதுசுல, உங்களுக்கு கண்டிப்பா நல்ல பேர் இருக்கும்! வேளாவேளைக்குச் சாப்பாடு கெடைக்கும்! லேசா தலைவலிக்குதுன்னு சொன்னாலே, “ அச்சச்சோ என்னங்க இப்புடி அசால்டா சொல்றீங்க? இந்தாங்க மாத்திரை எடுத்துக்கோங்க! இந்த காப்பிய குடியுங்க! அதெல்லாம் சரியாகிடும்” அப்டீன்னு தேன் சொட்டும் வார்த்தைகள் வந்து விழுகும்! ஹி ஹி ஹி ஹி ஹி !!

அன்பான ஆண்வர்க்கமே , நாம ஏமாந்து போகும் முக்கிய இடமே இதுதான்! இந்தக் கவனிப்பும் , அன்பும் உங்களுக்கும் காலம் முழுக்க நீடிக்கும் அப்டீன்னு கனவு காணாதீங்க! இந்த நிலைமை சட்டுன்னு மாறும்!  “ நீயெல்லாம் ஒரு ஆம்பளையாய்யா?” அப்டீங்கற கேள்வி, தூரத்துல லாரில வந்துகிட்டு இருக்கு அப்டீங்கறத மறக்க வாணாம்! :-))))))))))))


03. அப்புறம் முக்கிய விஷயம்! - உங்க மனைவிக்கு எது புடிக்கும்? எது புடிக்காது அப்டீன்னு நீங்க அறிஞ்சு வைச்சிருக்கணும்கற அவசியமே கெடையாதுங்க! ஆனா, எதிர்வீடு, பக்கத்து வீடு, பின் வீடு இந்த மூன்று வீடுகளையும் அடிக்கடி கவனிச்சுக்கணும்! எதிர்த்தவீட்டுல புதுஷா ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கியிருக்காய்ங்களா? அதை நீங்க பார்த்துட்டீங்களா? உடனே நீங்க வாலண்டரியா உங்க சம்சாரம்கிட்ட போயி, “ தோ பாரு நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே, இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நம்மளும் ஸ்கூட்டி பெப் வாங்கிடலாம்” அப்டீன்னு அட்வாஸா சொல்லிடணும்! நல்ல பேர் கண்டிப்பா கெடைக்கும்! 

“ ஏங்க நா உங்ககிட்ட பைக் வாங்கிக் குடுங்கன்னு கேட்கவே இல்லையே?”அப்டீன்னு அவ கேட்கத்தான் செய்வா! பட் நீங்க அதுக்கெல்லாம் ஏமாந்து போகக்கூடாது! 

 ” இல்ல மா உனக்கும் ஒரு பைக் இருந்தா சௌரியமா இருக்கும்ல” அப்டீன்னுதான் சொல்லணுமே தவிர,

 “ சரி சரி உனக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடலாம்” அப்டீன்னு முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்பட்டு சொன்னீங்க, அவ்ளோதான்! ஏன்னா அவங்க ஒரு அஸ்திரம் வைச்சிருப்பாங்க 

“ சரி நீங்க இவ்ளோதூரம் கெஞ்சினதுக்கு அப்புறமும் பைக் வாங்கலைன்னா உங்க மனசு சங்கடப்படும்” அப்டீன்னு அவங்க சொல்லுவாங்க!  

“ என்னது நா கெஞ்சினேனா? “ அப்டீன்னு உங்களுக்கு கேட்கத் தோணும்! ஆனா அதை ஓபனால்லாம் கேட்கப்படாது! வேணும்னா மனசுக்குள்ள மட்டும் கேளுங்கோ! :-))))))))

04. இந்த பைக் தத்துவத்தை நீங்க சேலை, நகைகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற ஏனைய பொருட்களிலும் கடைப்பிடிக்கணும்! மறுபடியும் சொல்றேன்! உங்களுக்கு மிகப்பெரிய வில்லன்களே இந்த பக்கத்து வீட்டுக்காரங்கதான்! அவங்க வீடு பாசி புடிச்சுப் போயி, மங்கலா இருந்தா நீங்க உங்கவீட்டுல நிம்மதியா இருக்கலாம்! மாறாக அவங்க வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்குறாங்கன்னு வைச்சுக்கோங்க! அப்புறம் என்ன அடுத்த 15 நாளில உங்க வீட்டுக்கும் பெயிண்ட் அடிக்கணும்! இல்லைன்னா, உங்க வீட்டு சுவர் மங்கிப்போகுதோ இல்லையோ,  உங்க நல்ல பேர் மங்கிப் போய்டும் சொல்லிட்டன்!


05. உங்க மனைவி தன்னோட உறவுக்காரங்க பத்தி, உங்கிட்ட குறை நிறைகள் சொன்னா, அதெல்லாத்தையும் கேட்டுட்டு கம்முன்னு கெடக்கணும்! மாறாக, வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்காமல் 

“ ஆமா, இவ்ளோவிஷயம் நடந்திருக்காக? ஏன் உன்னோட சித்தப்பாக்காரன் இப்புடி இருக்கான்?” அப்டீன்னு கேட்டீங்க! அவ்ளோதான்! உங்க நல்ல பேரு டேமேஜ் ஆகிடும்! 

“ எதுக்கு இப்ப அவர தப்பா பேசுறிங்க? என்ன இருந்தாலும் அவரு குடும்பத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறார் தெரியுமா?” அப்டீன்னு பிட்ட மாத்திடுவாங்க! - அதாக்கப்பட்டது, அவங்களோட உறவுக்காரங்க பத்தி அவங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க! ஆனா நீங்க ஒரு வார்த்தைகூட சொல்லிடக் கூடாது! இதுதான் ஒரு நல்ல புருஷனுக்கு அழகு! ஓகே வா? 

06. ஹி ஹி ஹி ஹி ஹி இதே தத்துவத்தை நீங்களும் கடைப்பிடிக்கலாம்னு நெனைக்காதீங்க! கண்டிப்பா ஏமாந்துடுவீங்க! இப்போ உங்க சைடு உறவினர்களோட குறை நிறைகள் பத்தி, உங்க மனைவிகிட்ட ரெண்டு வார்த்தை சொல்லிப் பாருங்க!

“ ஆமா உங்க சொந்தக்காரங்கல்ல! அப்புடித்தான் இருப்பாய்ங்க! அதான் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே” அப்டீன்னுதான் பதில் வரும்! ஹி ஹி ஹி ஹி ஹி உடனே இந்த இடத்தில், அப்பாவிக் கணவர்களாகிய நீங்கள் 

“ இப்ப எதுக்கு அவங்கள பத்தி தப்பா பேசுறே” அப்டீன்னு கேட்டுத் தொலைச்சுடாதீங்க! உடனே, 

“ ஆமா, நா எது பேசினாலும் இவருக்கு தப்பாத்தான் தெரியுது! நானும் கொஞ்ச நாளா நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன்! உங்க போக்கே சரியில்ல” அப்டீன்னு விஷயம் வேற பக்கம் டைவர்ட் ஆகிடும்! இத கேட்டு உங்களுக்கு செம அதிர்ச்சியாவும், கடுப்பாகவும் இருக்கும்! ஆனா என்ன பண்ண முடியும்? “ ஆணாகப் பொறந்து தொலைச்சுட்டோமே” அப்டீன்னு நெனைச்சுக்கிட்டு பேசாம கம்முன்னு கெடக்கணும்!

மறுபடியும் சொல்றேன்! பல விஷயங்கள மனசுக்குள்ளாரதான் நினைக்கணுமே தவிர, வாயத்தொறந்து வெளியே கொட்டக் கூடாது!  :-)))


07. அப்புறம் பள்ளிக்கால நினைவுகள், பழைய கதைகள் பேசிட்டு இருக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! அவங்க பள்ளிக்கால நினைவுகள் பத்தி பேசும் போது,“ தெரியுமா என்னோட சயன்ஸ் மாஸ்டர் ரொம்ப கெட்டிக்காரர்! பிசிக்ஸ் மாஸ்டர் ரொம்ப ஜாலியா பேசுவாரு! மேத்ஸ் மாஸ்டர் ரொம்ப நல்லா ஜோக் அடிப்பாரு”அப்டீன்னு மாஸ்டர்கள் பத்தியே பேசிட்டு இருப்பாய்ங்க! 

“ ஏண்டி, உன்னோட கிளாஸ்ல டீச்சர்களே கெடையாதா? பூரா ஆம்பளை மாஸ்டர்களா?’ அப்டீன்னு உங்களுக்குக் கேட்கத் தோணும்! ஆனா நான்தான் சொன்னேனே வாயே தொறக்க கூடாதுன்னு! :-))))

னா இதுல நிஜமான ஒரு விஷயம் இருக்கு! - இந்தமாதிரி உங்க மனைவி, தன்னோட வாழ்க்கைல சந்திச்ச ஆண்கள் பத்தி வெளிப்படையாவும், சிலாகிச்சும் பேசுறான்னா, அவ உங்கள 100 வீதம் நம்புறான்னு அர்த்தம்! அதுமட்டும் இல்ல அவங்க மனசுல துளியளவுகூட வஞ்சகமோ, கெட்ட எண்ணங்களோ இல்லைன்னும் அர்த்தம்!

ஆனா உங்க மேல நம்பிக்கை கெட்டுடுச்சுன்னா, அவ வாழ்க்கைல வாயே தொறக்க மாட்டா! ஸோ, உங்க மனைவி, இந்தமாதிரியெல்லாம் வெளிப்படையாகப் பேசும் போது,  உங்களுக்கு எரிச்சலாக இருந்தாலும், பொறுமையா கேட்டுக்கிட்டு இருங்க! மாறாக “ யோ, மூடிக்கிட்டு இரு பார்க்கலாம்! எப்ப பாரு ஆம்பளைங்க பத்தியே பேச்சு”அப்டீன்னு ஒரு வார்த்தை விட்டீங்க, ஜென்மத்துக்கும் அந்த வார்த்தைய உங்களால மீளப் பெறமுடியாது” உங்க மனைவியோட வாய நீங்க அடைச்சா, உங்க வாழ்க்கையே இருண்டு போய்டும்! அவ்ளோதான்! 

ஸோ, பெண்களின் மனதினைப் புரிந்துகொண்டு நடப்பதென்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதுமான விஷயமும் ஆகும்! - இந்தப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாத ஆம்பளைங்கதான் “ பெண் ஒரு புதிர் என்றும், பெண்ணின் மனசு ஆழம் என்றும்”புலம்பிக்கொண்டு திரிவாய்ங்க! ஆனால் கொஞ்சம் உளவியல் + வாழ்வியல் தெரிஞ்சா, பெண்களைப் புரிந்துகொள்வது சிரமமே அல்ல! 
ஆனா ஒண்ணு “ உங்களைக் கட்டி நா என்ன சுகத்தைக் கண்டேன்” அப்டீங்கற வாக்கியத்த நீங்க மணிக்கொருமுறை கேட்டுக்கிட்டே இருக்கவேண்டியதிருக்கும்! ஹி ஹி ஹி ஹி ஹி அதற்குத் தயாராக இருங்கோ! :-)

ஃபேஸ்புக்கில் காதல் டூ கல்யாணம் : நடுவுல கொஞ்சம் அக்கவுண்ட காணோம் :)


         ஃபேஸ்புக் வந்தாலும் வந்திச்சு - நம்ம வாழ்க்கையே மாறிப் போய்ச்சு! காலை எழுந்து பாத்ரூம் போனால், கையில் மொபைல் ஃபோனுடனோ, ஐ பேட் போன்ற சாதனங்களுடனோதான் போகிறோம்! அங்கிருந்தே ஃபேஸ்புக் பார்க்கிறது, லைக் பண்றது, கமெண்ட் பண்றது, அப்புறம் காரிலோ, பைக்கிலோ வேலைக்குப் போகும் போது, சிக்னலில் நின்றாலும், அந்த சில விநாடி கேப்பிலும், கையில் மொபைலும், ஃபேஸ்புக்கும் தான்!
இப்படி ஃபேஸ்புக்கே வாழ்க்கை என்று  ஆகிவிட்டது. நமக்கெல்லாம் நிறைய நண்பர்கள் இங்குதான் இருக்கிறார்கள்! அன்பாக பேசி மகிழவும், சண்டை போடவும் என எல்லாத்துக்குமே ஃபேஸ்புக் தான்!
சரி இந்த ஃபேஸ்புக் வந்ததால் - முக்கியமான ஒரு தொழில் கெட்டுப் போய்ச்சு தெரியுமா? அது என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்! அட, கல்யாண புரோக்கர் தொழில் தாங்க! இனி கால் செருப்பு தேய நடக்கவும் வேண்டாம்! சுளையாக புரோக்கர் கமிஷன் தரவும் வேண்டாம்! எல்லாமே ஃபேஸ்புக்கில் பார்த்துக் கொள்ளலாம்!
ஃபேஸ்புக்கில் நண்பர்களாகப் பழகி, காதலர்களாக மாறி, கல்யாணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகுது! எனக்குத் தெரிஞ்சு இதுவரை 7 கலியாணம் - ஃபேஸ்புக் கலியாணமாக நடந்துள்ளது - நம்புங்கப்பா!
நேரில் என்றால் ஒரு பெண்ணைப் பார்த்து, பின்னால நாயா பேயா அலைஞ்சு, காதலைச் சொல்லி, அவளிடம் ஏச்சு வாங்கி....... அப்பப்பா எவ்வளவு கஷ்டம்? அதை விட கஷ்டம் பெண்களுக்கு! ஊரிலே ஒரு ஆணைப் பிடித்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம்! அவனிடம் போய் நேரடியாக காதலைச் சொல்லும் தைரியத்தை நாம் இன்னும் பெண்களுக்கு வழங்கவில்லை :) அதையும் மீறி, ஒரு பெண் வலிய வந்து நம்மிடம் காதலைச் சொன்னால், அவளை அருவெறுப்பான ஒரு பார்வை பார்ப்போம்! ஏன்னா, பெண் காதலைச் சொன்னால், அவளை மட்டமாக எடைபோடும் ஒரு வகை மனோநிலை நமக்கு உண்டு! அதிலிருந்து எப்போது விடுபடப் போகிறோம் என்று தெரியவில்லை!
சரி, ஃபேஸ்புக், பெண்களுக்கு எப்படியான வசதியைக் கொடுத்துள்ளது என்றால், பொதுவாகவே பெண்கள் பேரில் இருந்து ஒரு கமெண்டு போட்டால் போதும்! அங்கே ஆண்கள் கூட்டம் மொய்க்கும்!
டந்தவாரம் ஒரு பெண், “ திங்கட்கிழமைக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை” :) அப்டீன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடிருந்தா. அதுக்கு 69 லைக்குகளும், 147 கமெண்ட்ஸும் வந்திருச்சு! அதுல சிலபேரு, அந்தப் பொண்ணு என்னமோ சீரியஸா பேசுறதா நினச்சுக்கிட்டு, “என்னங்க ஆச்சு? நான் வேணும்னா ஹெல்ப்புக்கு வரவா?” என்றெல்லாம்  சமூக அக்கறை மிக்க கமெண்ட்ஸுகள் போட்டு, அது பெரிய கூத்து ஆகிவிட்டிருந்தது! அதுல ஒருத்தர் இது எவ்ளோ பெரிய பின்நவீனத்துவ சிந்தனை தெரியுமா? அப்டீன்னு ஒரு கமெண்டு போட்டிருந்தார்  :)
இப்படி வெட்டியாக எதையாவது பேசிக்கொண்டு இருக்கும் போதுதான் ஒவ்வொருவருக்கும் உரிய ஜோடிகள் வந்து சிக்குகிறார்கள்! உங்களுக்கு ஒரு காதலனோ / காதலியோ தேவை என்றால், இட்ஸ் வெரி சிம்பிள்! ஃபேஸ்புக்கிலே சோகம் சோகமா கவிதை போட்டுக்கொண்டு வாங்க! ஒருமாசம் இடைவிடாமல் தொடர்ச்சியா, சலிக்காம போடணும்! அப்புறம் பாருங்க... உங்க கவிதை ரொம்ப சோகமாக இருக்கே? அப்டீன்னு கேட்டு மெஸ்ஸெஜ் வரும்! உடனே நீங்கள் பதில் சொல்லணும் ஆமா என்னோட மனசுல இருக்குறத தானே கொட்டியிருக்கேன் என்று! பின்னர் அது அனுதாபமாகி, காதலாகி, எல்லாம் சரியாக வரும்!
இதை எழுதும் நீ, ஃபேஸ்புக்கிலே என்ன எழுதிக் கிழிக்குறே? என்று நீங்கள் கேட்பீர்கள்! ஹா ஹா நானும் இதைத்தான் பண்றேன்! ஆனா ஒண்ணு! நமக்கு ஆல்ரெடி கல்யாணமாகி, 7 குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பதால்  :), காதல் அது இதுன்னு போறதில்ல - நம்பணும் சொல்லிட்டன்!
நம்மூர்ல, ஒரு கிராமத்துல உள்ள ஒரு பொண்ணுக்கு வரன் பார்க்கச் சொல்லி, கல்யாண புரோக்கர்கிட்ட சொன்னா, அவரு என்ன பண்ணுவாரு ? அந்த சுற்று வட்டாரத்துல உள்ள 18 பட்டியில சுத்தி திரிஞ்சுதானே பொண்ணு பார்ப்பார்! ஆனா ஃபேஸ்புக்குல அப்டி இல்லைங்க! நீங்க ஆண்டிப்பட்டியில இருந்தாலும் உங்களுக்கு காதலனோ / காதலியோ அமெரிக்காவில் கிடைப்பார்கள்!
ஃபேஸ்புக்கிலே பேசி, பழகி காதலிப்பதையோ, கல்யாணம் பண்ணுவதையோ நான் பிழை என்று சொல்லமாட்டேன்! அது ஒரு சோஷியல் நெட்வேர்க் தானே! கல்யாணம்ங்கறதும் ஒரு சோஷியல் அம்சம் என்பதால் - ஃபேஸ்புக் காதல் அங்கீகரிக்கப்பட வேண்டியதே!
அப்புறம் ஒருவரின் எழுத்தைப் பார்த்து, மயங்கி, கிறங்கி மனசைப் பறி கொடுத்துவிட்டு, அப்புறம் ஃபேட்டோவைப் பார்த்த பின்னர் - ஏங்க இது நிஜமாவே நீங்கதானா?அப்டீன்னு 15 வாட்டி ரிப்பீட்டில் கேட்டு கேட்டு, மனம் சோர்ந்து போகவேண்டியும் வரலாம்! - பார்த்து சூதானமா பண்ணுங்க பாஸ்!
அதுபோக, உங்க கூட பேசுறது பொண்ணுதான்னு நம்பி, நீங்க பாட்டுக்கு அத இத அள்ளிவிடுவீங்க! ஆனா மறுபக்கம் இருந்து சிரிச்சு, சிரிச்சு உங்கள் நண்பன் ஒருவன் உங்களுடன் கடலை போடும், கண்கொள்ளா காட்சியும் நடக்கும்! அதுக்கும் எச்சரிக்கையாக இருங்க!
அதுமட்டுமில்லைங்க! சாதாரணமா குழாயடியில் நடக்கும், குடும்பி பிடி சண்டை கூட ஃபேஸ்புக்குல நடக்கும்க! “ நீ எதுக்கு அவள் போட்ட ஸ்டேட்டஸுக்கு லைக்கு போட்டே? கமெண்டு போட்டே? என்னை விட அவளா உனக்கு முக்கியம்”மாதிரியான அனல் பறக்கும் வசனங்கள் பலரது சாட்டிங்கில் அடிக்கடி பரிமாறப்படுவதாகக் கேள்வி!
இன்னொரு சுவையான விஷயம்! நீங்க பாட்டுக்கு ஒருத்தர செட் பண்ணி, கதைச்சுப் பேசி, அடுத்தநாள் ஐ லவ் யூ சொல்ற அளவுக்கு டெவலப்பாகி வந்திருப்பீங்க! மறுநாள் எந்திரிச்சு - ஐ லவ் யூ சொல்லலாம்னு ஃபேஸ்புக்கைத் திறந்தா - அங்கே உங்க வரும் கால ஜோடியின் புரோஃபைல் காணாமல் போயிருக்கும்! ஸோ, எல்லாத்தையும் மனசுல வைச்சுக்கிட்டு, காரியத்துல இறங்குங்க!
தனிமையில் வாடும் எத்தனையோ பேருக்கு, நல்ல பேச்சுத் துணையையும், அன்பான உறவுகளையும் ஃபேஸ்புக் தந்திருக்கு! இப்ப கல்யாணம் கூட இங்கேயே நிச்சயம் ஆகுது! கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுறதா, பெரியவர்கள் சொல்கிறார்கள்! - அந்த சொர்க்கம் ஃபேஸ்புக் தான் :)
ஸோ, ஃபேஸ்புக் காதலர்கள், ஃபேஸ்புக் தம்பதிகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! நீங்களும் நல்லா இருக்கணும்! ஃபேஸ்புக்கும் நல்லா இருக்கணும் :)

நில்,கவனி ,யோசிங்க மக்களே



என்னை ரொம்ப பாதிச்ச ஒரு(நேறய்யயயய) விஷயம்...
நேத்து காலைல 6 மணிக்கு வாக்கிங் போன ஒருத்தர் போனவர் தான்...வரவே இல்ல திரும்ப... பேருந்து நிறுத்தம்ல(பஸ் ஸ்டாப்...) வந்து பயணிகளை எறக்கி விட்டுட்டு ஸ்டார்ட் பண்ணி இருக்காரு..அப்போ இவரு ஒரமா தான் நடந்து போய்ருக்காரு..விதினு சொல்ரதா என்னனே தெரியல..அவருமேல பஸ் இடிச்சு அதே எடதுல அவர் கீழ விழுந்து அதே எடத்துல இறந்து போய்ட்டாரு..இதை நான் ஏன் சொல்ரேன்னா ஓரமா போனவருக்கே இந்த கதி...அதுவும் காலங்கார்தாலே..அவ்வளவா ட்ராபிக் இல்லாத நேரம் அது..
நாம எல்லாரும் எத்தன தடவ பாத்துருக்கோம்...செம ட்ராபிக்...அதுலயும் யாரு அந்த வெள்ளை கோட தாண்டி முதல்ல போரொம்னு போட்டி பொடுரது...ரோடுல எத்தன வண்டி நிக்குது....நாம முதல்ல நிக்கரோமா...எப்டியாவது ஒவர் டேக் பண்ணி பொகனுமே...வேலைக்கு நேரம் ஆச்சே...இதெல்லாம் யாரவது யோசிச்சுருக்கொமா?? ஏன் நானே அப்டித்தான்..8.40 கு பொகணும்..கெளம்புரதே 8.40கு தான்...
ஒழுங்கா ட்ராபிக் ரூல்ஸ் மதிச்சு பொ..ஸ்பீடா பொகாதே .இதெல்லாம் சொன்னா அம்பி,ரூல்ஸ் ராமானுஜம் அது இதுனு கிண்டல் பன்னியே ஒழிச்சுடுவொம்....இனிமேல தயவு செய்து யாரும் வேகமா பொரதோ,செல் போன் ல பெசிக்கிட்டே பொரதோ வேணாம்..இது மாதிரி விபத்து பக்கத்து வீட்லயோ இல்ல எதிர் வீட்லயோ நடந்தா பாவபட்டுட்ட்டு
விட்டுடுவோம்..நம்ம வீட்ல அப்டி ஒன்னு நடக்க வேனாம்னு தான் எல்லாருமே ஆசைப்படுவொம்..அப்டி நடக்காம இருக்கனும்னா ரோடுல பொகும்பொது தயவு செய்து வேகமா போகாதிங்க...நம்ம அப்பா போட்டு வெச்சுருக்கர ரோடுங்கர மாதிரி போரது..
செல்லுல பேசிக்கிட்டே பொரது
அக்கம் பக்கம் வேடிக்கை பாகுரது
இன்னும் எத்தனை விதம் இருக்கோ அத்தனையும்
இதெல்லாம் இனிமே வாணாம்...எப்பவுமே வாணாம்...
சரி...ரொம்ப பேசிட்டனோ??
கீழே சில படங்கள் குடுத்துருக்கேன்..சிரிங்க நல்லா
எப்பிடி பாக்கராய்ங்க எடுபட்ட பயலுங்க...
உயிரே உயிரே தப்பிச்சு எப்டியவது ஓடிவிடு.....
ஐயய்யோ..


வேனாம்...அழுதுடுவேன்...



ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே..




பிஸ்கோத்து வாங்கலயோ பிஸ்கோத்து..
ஐய்யா வாங்க அம்மா வாங்க...




ஏய் நில்லு ...ஸ்டாப்...
அசிங்கபடுத்தாதே..



மம்மி ஷிக்கரம் ஷாப்பாடு குடுக்கல..மத்த ரெண்டயும் ஷாப்ட்றுவேன்



பி.கு:இதை படித்து வோட்டு குத்தும் வாக்காளப்பெருமக்களே..
உங்க அடுத்த பதிவுக்கு நான் 1 வோட்டு பொடுரேன்..
இதை படித்து கருத்துகளை கும்மாங்குத்தாக குத்திட்டு போர வாசக பெருமக்களே

நன்றி..மீண்டும் வருக...
ஏன்னா உங்களுக்கு பெருசா ஒண்ணு இருக்கு...போக போக தெரியும்

March 12, 2013

திகைப்பூட்டும் புகைப்படங்கள்....நகைப்பும் ஊட்டும்..



புகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் 

கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய 

அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட 

சிறந்த சில புகைப்படங்கள்.

முத்தமா.....மோகமா.....


பறந்த களைப்பு.....கொஞ்சம் ஓய்வு....


அப்பிடியும் ஒரு ஆசை....

பார்த்தியா.....குளத்தை நிரப்பீட்டன்....


பிழையாகப் போனதால் சரியான தகவல் சொல்கிறது

மெல்லக் கை போடு....

என்கிட்டே வைச்சுக்காதா....ஆமா சொல்லிப்புட்டேன்

நீ என்ன பெரிய கொம்பா?????

karate girl

தேகம் யாவும் தீயின் தாகம்.....

no.1 in the world

ஏன் இப்படி ஒரு ஆசை

என்ன கொடுமை இது?

மனிதரில் எத்தனை நிறங்கள்....

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

உன்னைக் கட்டிய நேரம் ஒரு குதிரையைக் கட்டியிருக்கலாம்.
ஆச்சிக்கு ஆசை போகவில்லை

நான் ஊதினன் எண்டால் ஊரே....

எரிமலை எப்படிப் பொறுக்கும்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே....

பென்சிலால் கைதுசெய்

அப்படி நானும் செய்வேன்...
அடுத்த மூவ் யாருடையது?

என் கையில் நீ ஒரு....

மவனே முழுங்கடா.....

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா....

போகுமிடம் எதுவென்று தெரியவில்ல..போகவேண்டிய இடமும் எதுவென்று புரியவில்லை மொத்தத்தில் என் நிலை ஈழத் தமிழர்கள் மாதிரி

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

லாப்டாப் இனி மெல்லச் சாகும்.



‘Why should it be like this’. அப்பப்போ என்னையே நான் கேட்டுக்கற கேள்விகள்ல லேட்டஸ்ட் இதுதான்.
ஒரு Laptopல ஏன் LCD ஸ்க்ரீன் இருக்கணும்? இல்லாம ஏன் இப்படி இருக்கக்கூடாது?
Laptop
Laptop
அடுத்த கேள்வி, Key Board-ம் Touch Pad Mouse-ம் மட்டும் மேல இருந்தா நல்லா இருக்காதே!! அழுக்கு அதிகமா சேராது? Blue Tooth Key Board and Mouse போட்டுக்க கூடாதா?
இதுமாதிரி?
Laptop2
Laptop2
Key Board and Mouse இல்லன்னா வெறும் Processor-க்கும் Hard disk-க்கும் மட்டும் இவ்ளோ பெரிய பாக்ஸ் தேவைப்படாதுல்ல?
Lap top mini
Lap top mini
Cloud Computing-ன்னு வந்துடுச்சுன்னா Processor-ம் Hard disk-ம்கூட Cloud-ல இருக்கும்-ங்கறாங்களே.. அப்டின்னா அந்த க்ளவுட் கம்யூட்டருக்கு கனெக்ட் பண்ணினா மட்டும் போதுமா??
அப்போ Processor, Hard disk கூட இல்லாம Laptop-என்னதான் இருக்கும். ஒரு Mini Processor Wifi-யோட. ஒரு மினி ப்ராசஸர ஃபோன்லயே போட்டுடலாமே!! இல்ல?
Phone computing
Phone computing
Wait Wait.. Camera??
அதான் ஃபோன்லயே இருக்கே!! வேற?
வேலை பார்த்துகிட்டு இருக்கறப்போவே கால் வந்தா?
Blue tooth Head set-இருக்கே!!
அட என்ட போனே இல்லப்பா!!
அப்போ, Wifi, Blue Tooth, 6G, Projector, Camera, Surround Speakers- எல்லாம் இருக்கற ஒரு Thumb வாங்கிக்கணும்!!
Thumb
Thumb
ஆமா.. இங்க ஒரு Laptop இருந்துச்சே அது எங்க? :)

பிரபஞ்ச சக்தியின் மூலமாக வாழ்க்கையை விரும்பிய வகையில் வடிவமைத்துக் கொள்ள ஓர் அற்புதப் பயிற்சி!




வாழ்க்கை இலகுவாக இருப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? இந்தக் கேள்வி ஓடாத மனிதரே இல்லை எனலாம். உடல் நலம் என்பதற்கு மட்டுமான முக்கியத்துவம் இன்று மாறி வாழ்வு நலம் என்று விரிவடைந்திருப்பது இதற்கு நல்ல சான்று. 

யோகா, தியானம், ஆயுர்வேதா போன்ற பல்வேறு கீழை நாட்டு நல்வாழ்வு முறைகளை மேலை நாட்டினர் வெகுவாகப் பயன்படுத்திப் பயன்பெறும் அதே நேரத்தில் மேலை நாட்டிலும் புதுப் புது வழி முறைகள் தோன்றாமலில்லை.

கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வரும் நிலா இப்படிப்பட்ட 30க்கும் மேலான சுகமளிக்கும் வழிமுறைகளை அறிந்தவர். தாம் அறிந்தவற்றை இணையம் வழியாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தம் எழுத்து மூலமாகப் பரப்பிவருவதோடு நேரடி வகுப்புகளும் நடத்தி வருகிறார். இது குறித்து ஜெயா டிவியின் காலைமலர் நிகழ்ச்சியில் விரிவாகப் பேசி இருக்கிறார்:


தாம் கற்றவற்றில் 'ஆக்ஸஸ் பார்ஸ்' என்ற வழிமுறையைக் குறித்து சிலாகித்துப் பேசும் நிலா, ஆக்ஸஸ் பார்ஸ் பலருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். தாம் கற்றுக் கொண்ட சுகமளிக்கும் வழிமுறைகளிலேயே இந்த வழிமுறை மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று கூறுகிறார்.

ஆக்ஸஸ் பார்ஸின் 32 புள்ளிகளும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துடன் தொடர்புகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, படைப்புத் திறன், சுகம் பெறுதல், மன அமைதி, பணவரவு போன்றவற்றைச் சொல்லலாம். 

உங்களுக்கு ஓவியம் வரைவதில் விருப்பம் இருக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதை செயல்படுத்த போதுமான ஏதோ ஒன்று தடைக்கல்லாக இருக்கிறது என்பதை உணர்வீர்களேயானால் கிரியேட்டிவிட்டிக்கான சக்திப் பட்டையைத் தொட்டு அதில் முடக்கப்பட்டுள்ள ஆற்றலை விடுவித்தால் போதுமானது. படைப்புத் திறன் பொங்கி வருவதை உணரமுடியும். இதே முறையில் பணவரவினையும் அதிகரிக்கலாம். இப்படி 32 புள்ளிகளுக்கும் ஒவ்வொருவிதமான பயன்பாட்டினை உணரலாம்.

தன்னுடைய பல்வேறு அனுபவங்களையும் தன்னுடைய சுவையான நடையில் மடை திறந்து நிலாச்சாரலில் பகிர்ந்து வருகிறார் நிலா. வாசகரிடையே பெரிதும் விரும்பப்பெற்ற பகுதியாக வலம் வந்த 'மடை திறந்து' தொடரின் தொடர்ச்சியாக, தனது அனுபவங்களை முடிவிலா சாத்தியங்கள் எனும் தலைப்பில் தற்போது பதிந்து வருகிறார்.

அண்மையில், தனது உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்திருந்த நிலா சில ஆக்சஸ் பார்ஸ் வகுப்புகளை நுங்கம்பாக்கம் பகுதியில் நடத்தியிருந்தார். சுமார் முப்பதிற்கும் மேற்பட்டோர் சுகமளித்தல் சிகிச்சையினை எடுத்துக்கொண்டனர். அவர்களில் பலர் வகுப்புகளில் பங்கேற்று தாமும் இப்பயிற்சியினைக் கற்றுக்கொண்டு மக்களிடையே கொண்டு சென்று வருகின்றனர். மக்களிடையே நல்வரவேற்பு பெற்ற இந்நிகழ்வின் தொடர்ச்சியாகவும் ஜெயாடிவி நேயர்களிடமிருந்து தொடர்ந்து வந்த வண்ணமிருக்கும் விருப்ப அழைப்புகள் காரணமாகவும், மீண்டும் சில வகுப்புகளை ஏப்ரல், மே மாதங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்திலும் எடுக்க விழைந்திருக்கிறார் நிலா.

ஆக்ஸஸ் பாரினால் கிடைக்கக்கூடிய நன்மைகளுள் சில :

• மன நிம்மதியும், அமைதியும்
• மனத் தெளிவு நிலை
• நல்ல அதிர்வலைகளுடன் கூடிய ஆரோக்கிய உடல்நிலை
• மேம்பட்ட சக்தி நிலை
• சிக்கிய பழக்கங்களிலிருந்து விடுபடுதல்
• வலி குறைதல் அல்லது முற்றிலும் நீங்கிய நிலை
• அமைதியான, ஆழ்ந்த உறக்க நிலை
• எப்பேர்ப்பட்ட சூழல்களுக்கும் பொருந்திப் போதல்

ஆக்ஸஸ் மூலம் தான் பெற்ற பலன்கள் குறித்து ஆஸ்திரேலிவாயைச் சேர்ந்த ஜூலி ஸ்மித் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
 

புலியா எலியா??



மனைவிக்கு கணவன் பயப்படுவது ஏன், எதற்கு?`வெளியே புலி. வீட்டில் எலி' - என்று சில ஆண்களை குறிப்பிடுவார்கள். வெளியே வீர சாகசம் செய்வார்கள், எதையும் தட்டிக்கேட்கும் ஆற்றலும் கொண்டவர்களாக சில கணவர்கள் இருப்பார்கள். ஆனால் வீட்டில் மனைவி சொல்வதற் கெல்லாம் ``ஆமாம்...'' போடுவார்கள். மனைவி செய்வது தவறு என்று தெரிந் தால் கூட வாயைத் திறக்காமலே இருந்து விடுவார்கள். சிலரோ இதைவிட எல்லாம் பல படி மேலே சென்று, மனைவியைப் பார்த்தாலே பயத்தில் உதறல் எடுக்கத் தொடங்கி விடுவார்கள். யார் யாருக்கெல்லாம் `மனைவி பயம்' ஏற்படும்? பெண் பார்க்கும்போதே, மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் ஜோடி பொருத்தம் பார்ப்பார்கள். ஜோடி பொருத்தத்தில் இருவரது உடல்வாகு மட்டுமின்றி அழகையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். சுமாரான அழகு கூட இல்லாத கணவனுக்கு, மிக அழகான மனைவி வாய்த்து விடும்போது அங்கே சிக்கல் தோன்றி விடும் வாய்ப்பு அதிகம். ``தனது அழகான மனைவியை தட்டிக்கேட்டால், அவள் தன் மீது கோபித்துக்கொண்டு தன்னை பிரிந்து சென்று விடுவாள்' என்று பயந்து இப்படிப்பட்ட கணவன்மார், மனைவி சொல்லே மந்திரம் என்று தலையாட்டி பொம்மைகளாக இருப்பார்கள். சில நேரங்களில் மனைவி செய்யும் தவறை தட்டிக்கேட்கக்கூட இவர்களுக்கு தைரியம் இருக்காது. இப்படிப் பட்டவர்களில் பலர், திரு மணத்திற்கு முன்பு குடிகாரர்களாய் இருந்து, பின்பு திருந்தி இருக்கிறார்கள். அழகான மனைவி வாய்க்கும் போது, பயந்து காணப்படுவதைப்போல அதிகமான வரதட்சணை வாங்கிக்கொண்டு பயப்படும் கணவன் மார்களும் உண்டு. இவர்களும் மனைவிக்கு அடங்கியே நடப்பார்கள். மனைவியிடம் வாக்குவாதம் செய்தாலோ, சண்டை போட்டாலோ மனைவி மூலம் கிடைக்கும் சுகபோகமும், செல்வமும் கையை விட்டு போய்விடும் என்று பயம் கொள்வார்கள். சில வகை வெளியே தெரியாத ஊனங்களை கொண்டவர்களும் மனைவிக்கு மனதளவில் பயப்படுவார்கள். மனைவியை பகைத்துக்கொண்டால், தனது பல கீனங்களை எல்லாம் வெளியே சொல்லி விடுவாள் என்று அவர்கள் பயப்படு வார்கள். இந்த பலகீனங்களில் செக்ஸ் பலகீனம் கூட இடம்பெறலாம். எல்லா விஷயங்களைப் பற்றியும் கணவனும் மனைவியும் மனந்திறந்து பேச வேண்டும். அதற்குரிய பக்குவம் இருவருக்குமே தேவை. `மனைவியிடம் பேசினாலே சண்டைதான் வரும்' என்று சில ஆண்கள் சொல்வார்கள். இப்படிச் சொல்பவர்களில் பலரும் மனைவிக்கு பயந்தவர்களாகவே இருப்பார்கள். சிலர் தனது சொந் தக்காரர்களிடம், குடும்பத்தினரிடம் மோசமாக நடந்து கொள்வார்கள். உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்வார்கள். அப்படிப் பட்டவர்களின் செயல், மனை விக்கு தெரிந்திருக்கும். அந்த குற்றத்தை மனைவி உற் றார் உறவினர்களிடம் சொல்லக் கூடாது என்பதற்காக, மனைவிக்கு பயந்து நடுங் குகிறவர்களும் உண்டு. ஆண்களில் சிலருக்கு தன் சுய நலத்தைவிட குழந்தைகள் நலம் முக்கியமாகத் தெரியும். மனைவி தவறு செய்கிறாள் என்பது தெரிந்தும், அந்த தவறை சுட்டிக்காட்டினால் குடும்பத்தில் பெரும் பிளவு ஏற்பட்டு, அது குழந் தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்ற பயத்துடன் வாழ்க்கையை கழிப்பவர்களும் உண்டு. சில பெண்கள் வன்முறை எண்ணம் கொண் டவர்களாக இருப்பார்கள். கணவர் நல்லது சொன்னால் கூட சுவரில் முட்டுவது, நெஞ்சில் குத்துவது, ஓ...வென்று அழுது ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். மனைவிக்கு காயமும், தனக்கு பணச் செலவும் ஆகி விடக் கூடாதே என்ற பயத்துடன் வாழும் கணவர்களும்இருக்கிறார்கள்.

March 11, 2013

சித்த மருத்துவம் - பழங்களின் மருத்துவ குணங்கள்







மாம்பழம்


மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்


சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி



வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை
.

அன்னாசி



அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்



விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்



மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்



மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்



ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்



எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்



தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்



அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.
பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.