இப்படி ஃபேஸ்புக்கே வாழ்க்கை என்று ஆகிவிட்டது. நமக்கெல்லாம் நிறைய நண்பர்கள் இங்குதான் இருக்கிறார்கள்! அன்பாக பேசி மகிழவும், சண்டை போடவும் என எல்லாத்துக்குமே ஃபேஸ்புக் தான்!
கடந்தவாரம் ஒரு பெண், “ திங்கட்கிழமைக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை” :) அப்டீன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடிருந்தா. அதுக்கு 69 லைக்குகளும், 147 கமெண்ட்ஸும் வந்திருச்சு! அதுல சிலபேரு, அந்தப் பொண்ணு என்னமோ சீரியஸா பேசுறதா நினச்சுக்கிட்டு, “என்னங்க ஆச்சு? நான் வேணும்னா ஹெல்ப்புக்கு வரவா?” என்றெல்லாம் சமூக அக்கறை மிக்க கமெண்ட்ஸுகள் போட்டு, அது பெரிய கூத்து ஆகிவிட்டிருந்தது! அதுல ஒருத்தர் இது எவ்ளோ பெரிய பின்நவீனத்துவ சிந்தனை தெரியுமா? அப்டீன்னு ஒரு கமெண்டு போட்டிருந்தார் :)
இதை எழுதும் நீ, ஃபேஸ்புக்கிலே என்ன எழுதிக் கிழிக்குறே? என்று நீங்கள் கேட்பீர்கள்! ஹா ஹா நானும் இதைத்தான் பண்றேன்! ஆனா ஒண்ணு! நமக்கு ஆல்ரெடி கல்யாணமாகி, 7 குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பதால் :), காதல் அது இதுன்னு போறதில்ல - நம்பணும் சொல்லிட்டன்!
அப்புறம் ஒருவரின் எழுத்தைப் பார்த்து, மயங்கி, கிறங்கி மனசைப் பறி கொடுத்துவிட்டு, அப்புறம் ஃபேட்டோவைப் பார்த்த பின்னர் - ஏங்க இது நிஜமாவே நீங்கதானா?அப்டீன்னு 15 வாட்டி ரிப்பீட்டில் கேட்டு கேட்டு, மனம் சோர்ந்து போகவேண்டியும் வரலாம்! - பார்த்து சூதானமா பண்ணுங்க பாஸ்!
தனிமையில் வாடும் எத்தனையோ பேருக்கு, நல்ல பேச்சுத் துணையையும், அன்பான உறவுகளையும் ஃபேஸ்புக் தந்திருக்கு! இப்ப கல்யாணம் கூட இங்கேயே நிச்சயம் ஆகுது! கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுறதா, பெரியவர்கள் சொல்கிறார்கள்! - அந்த சொர்க்கம் ஃபேஸ்புக் தான் :)
No comments:
Post a Comment