பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


February 13, 2013

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?



















உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''


``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன். "பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?'' "உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.



"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?'' "ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.'' "இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' "இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''

"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''
"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''

"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?'' "18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''

"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?'' "ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி

முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''

"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''

"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''

"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''

"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''
"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''
"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.'' 1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.


1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.


உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை கல்லீரல் - 18 மணி நேரம் வரை இதயம் - 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை கணையம் - 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும் தோல் - 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.

February 10, 2013

பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!!!!




  அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.
 நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!.

நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து   பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. 

விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால் பயணிகளின் முழு விவரப் பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர்.அந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

அந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள்.
தயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள்.

மேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா (சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர்.நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது.

பாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள், நமது நாட்டின் காவல்நிளையங்களும், வழக்கடுமன்றங்களும் நம்மை அலைகளிப்பர்கள் என்பதை. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு மூன்று வருடங்களாகவே அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. யார் இதுபோன்ற கடவுச்சீட்டு வைத்திருக்கின்றார்களோ அவர்கள் விமான நிலையத்தை அடைந்தவுடன் அவர்களிடம் விசாரணை என்னும் ரீதியில் அவர்களை அளயவிடுகின்றனர், இதுபோன்ற சம்பவங்களை செய்வது சில குடிபுகல் அதிகாரிகள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.ஆகையால் நாம் அனைவரும் மிகவும் கவனமாக நமது கடவுச்சீட்டை சரிபார்த்துவிட்டு குடிபுகல் மேசையிலிருந்து அகலவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த செய்தியை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும்.

கிரெடிட்/டெபிட் கார்டு போலியானதா இல்லையா ? :மிக எளிமையான வழி



 நாம் வைத்திருக்கும் கிரெடிட்/டெபிட்  கார்டு அல்லது டெபிட் கார்டு உண்மையானதா இல்லையா என்பதை கண்டறிய ஒரு எளிமயான வழி ஒன்று உள்ளது.  

இப்பொழுது நம் கார்டு நம்பர்4000  0012  3456  7899 என்று வைத்து கொள்வோம்.

இதனை கண்டுபிடிக்கும் வழி இன்  பெயர் luhan  algorithim  ஆகும் .இதனை கண்டுபிடித்தவர் luhan  என்பவர்.இவர் IBM நிறுவனத்தில் பணிபுரிந்தவர் .இந்த கண்டுபிடிபுகாக patent வாங்கி வைத்துள்ளார்.

சரி எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்போம்




1 )கார்டில் உள்ள கடைசி என்னை தவிர ,மீதி எல்லா எங்களையும் ,எழுதிகொள்ளுங்கள்.

4
0
0
0
0
0
1
2
3
4
5
6
7
8
9
2 )ஒன்று விட்டு ஒரு எழுத்தை 2  ஆல் பெருகிகொள்ளுங்கள்.

4×2
0
0×2
0
0×2
0
1×2
2
3×2
4
5×2
6
7×2
8
9×2 
 இவ்வாறு கிடைக்கும்.

8
0
0
0
0
0
2
2
6
4
10
6
14
8
18
இவ்வாறு கிடைக்கும் எண்ணில் எதாவது ஒரு எண் 10  அல்லது 10  கு மேல் தாண்டி விட்டால் ,அதை 9  ஆல் கழித்து கொள்ளுங்கள் .
மேலே உள்ள எண்களில்,நமக்கு 10 ,14 ,18  ஆகியவை,10 தாண்டி விட்டது ,அதனால்,9 ஆல் கழித்து கொள்ள வேண்டும். கிழே உள்ளது போல் கிடைக்கும்.

8
0
0
0
0
0
2
2
6
4
1
6
5
8
9

இப்பொழுது மேலே எல்லா எண்களையும் கூட்டி கொள்ளுங்கள் .51 என்று வரும்.

இப்போது நாம் ,கிரெடிட் கார்டு நம்பர் இல் கடைசி எழுத்தை விட்டு வைத்து வந்தோமே அதை ,இந்த 51  உடன் சேர்த்து கொள்ளுங்கள்.
(eg : 4000  0012  3456  7899  இல் கடை எண் 9 .அதை 51  உடன் சேர்த்து கொண்டோம்.=60 
இப்போது நமக்கு கிடைத்த எண்ணை 10 ஆல் வகு பட்டால் (no  has  to  be  divisible by   10 )
நாம் வைத்திருக்கும் கார்டு ,சரியான கார்டு ஆகும்.
குறிப்பு: இவை பெரும்பாலான ,கார்டு கம்பனிகள் பயன் படுத்துகின்றன.(VISA ,MASTERCARD )எனினும் amex போன்ற வற்றில் மற்ற வழி முறை பின் பட்ட்றபடுகின்றன.
----------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு பிடித்திருந்தால் ,vote  செய்து ,உங்கள் நண்பர்களிடம் (face book,twitter) பகிர்ந்து கொள்ளுங்கள்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற , வலது பக்கத்தில் "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள்

தங்கம் வாங்குங்க



'தங்கம்' என்றாலே நமக்கு இனிக்கும்.காரணம் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாக ,ஏறுமுகத்தில் இருபதால் தான்.கிழே உள்ள ,தங்க விலை பட்டியல் ,நமக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

கிழே உள்ள வரை படம்,தங்கத்தின் அளவை ounce  இல் குறிபிட்டு இருகிறார்கள்.
ஒரு ounce  என்பது 28 .34  கிராம்.
 இந்த  வலைத்தளத்தில் (லிங்க் நுழைந்து  கொள்ளுங்கள் .இதில் "Enter  company  or  mutual  fund "
என்ற இடத்தில், "hdfc  gold etf" என்று type  செய்து ,go என்பதில் கிளிக் செய்யவும்.பிறகு ,"If  you  have  invested " என்ற இடத்தில்,உங்களுக்கு என்ன ,பண அளவு தேவையோ ,அதை தாருங்கள். பிறகு,1 
வாரத்திற்கு ,1  மாதத்திற்கு,வருடத்திற்கு  முன்பாக தங்கம் வாங்கி இருந்தால் ,அதன் மதிப்பு ,எவ்வளவு என்பதனை குறிக்கும்.அதே அளவு பணத்தை ,வெள்ளி இல் ,fixed  deposit  இல் ,NSE ,BSE  பங்குசந்தில் இல் முதலீடு செய்தால் ,இன்று என்ன விலை என்பதனையும் குறிக்கும்.


கிழே உள்ளது போல் வரும்.


இதன் மூலம்,நாம் எதில் முதலீடு செய்திருந்தால் ,எவ்வளவு லாபம் என்பதை கிடைக்கும். 


தங்கத்தை ,கட்டிகளாக வாங்காமல் ,paper  gold அதாவது online  தங்கம் ,இப்பொழுது பிரபலமாகி வருகிறது.online  இல் தங்கம் வாங்க ,DEMAT  அக்கௌன்ட் இருந்தால் சுலபம்.எப்படி என்று அடுத்த
பதிவில் விளக்குகிறேன்.


மாதம் ஒரு கிராம் ,தங்கம் வாங்கினாலே ,நமக்கு நல்ல முதலீடு கிடைக்கும்.


Tanishq போன்ற கடைகளில் தங்க சீட்டு முறை இருகிறதே ,அது சிறந்ததா இல்லை ,தங்கத்தை வாங்குவது சிறந்ததா ?


11 மாதம் பணம் கட்டினால் ,12  ஆவது மதத்திற்கு அவர்களே பணம் கட்டி,உங்களுக்கு நகை தருகிறார்கள்.அதாவது 10 -11  % வட்டி என்பது போல .ஆனால் ,நீங்கள் அதே 11 மாதம் பணத்தை ,உண்மையான தங்கம் வாங்கி இருந்திர்கள் என்றால்,அதன் மதிப்பு 30 -40  % ஆகி இருக்கும்.


ஆனால் தங்கத்தின் மதிப்பு குறைந்து விட்டால் ,நமக்கு நஷ்டம் தான்.இப்பொழுது தங்க சீட்டு முறை ,லாபத்தை தரும்.
ஆனால் ,ஒன்றை மட்டும் நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.இந்தியாவில் பெண்கள் இருக்கும் வரை ,தங்கத்தின் மதிப்பு என்பது என்றுமே குறையாது. :)

February 9, 2013

காதல் வந்தாலே கண்ணீரில் தான் வாழ்க்கை



அனைவரினதும் எதிர்ப்பிற்கு மத்தியில் காதலிக்கும் காதலர்களின் உண்மை சம்பவம்...(சுருக்கமாக...)

இருவரும் ஒரே வேலைத்தளத்தில் தான் பணி புரிகிறார்கள்... இருந்தும் இருவரும் காதலர்களென்பது சக பணியாளர்களுக்கு தெரியாது...! அவள் அவனிடம் ஒரு சின்ன விடயத்தை கூட மறைக்காமல் பகிர்ந்து விடுவாள்...ஆனால் அவனோ ஒரு சின்ன விடயத்தை கூட பகிர்ந்து கொள்ள மாட்டான்... எனினும் காதலன் அவளுக்கு பிடிக்காத விடயங்களை தான் செய்ய மாட்டேன் என அவளின் தலையில் அடித்து சத்தியம் வேறு செய்து கொண்டான்...!

இந்நிலையில் தன் காதலி தன் மேல் எவ்வளவு அக்கறை உடையவள் என்பதை அறிவதற்காக விளையாட்டு தனமாக அவளுக்கு பிடிக்காத விடயங்களை செய்யத்தொடங்கினான்...! இது அவளை மிகவும் புண்படுத்தியது...! எத்தனையோ தடவைகள் சொல்லியும் அவன் அவள் முன் தலையாட்டி விட்டு மறு நிமிடமே தன் விளையாட்டு தனத்தை தொடங்கினான்...! அதே போல் சக பெண்களுடனும் மிக நெருக்கமாக பழகினான்...! 

தன் முன் தமது காதலனோ காதலியோ அவ்வாறு நடந்து கொள்வதை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..இது உலகறிந்த உண்மை... யாரும் மறுக்கவும் முடியாது. 

இது விளையாட்டாக இருந்தாலும் அவனுக்கு அவளை தினமும் அழவைப்பதே வாடிக்கையாகி விட்டது...காரணம் இன்றி கோவிப்பதும், சண்டை போடுவதும் அவளை மிகவும் காயப்படுத்தியது...
இந்த விளையாட்டே ஒரு நாள் வினையாக மாறி விட்டது...!

அது அவ்வாறு இருக்க அங்கு பணி புரியும் சக பெண் அவனை நேசிக்க தொடங்கி விட்டாள்... அப்பெண் தன் காதலை வெளிப்படுத்துவதற்காக அவனின் Diaryன்  முன் பக்கத்தில் அவன் பெயரையும் தன் பெயரையும் சேர்த்து எழுதியிருந்தாள்.... இதனை அவன் கவனிக்கவே இல்லை...

விளையாட்டாக இருந்தாலும் சத்தியத்திற்கு சக்தி அதிகமென்பது ஒரு நாள் தெரிந்து விட்டது...!

ஒரு நாள் அவனின் Diary யை பார்த்த காதலி அதிர்ந்து போனாள்... தன்னை அவன் விட்டு விலத்துவதற்காகவே அவ்வாறெல்லாம் நடந்து கொண்டான் என எண்ணி அவனுக்கு ஒரு கடிதத்தில் நீ தேர்ந்தெடுத்திருப்பவள் உனக்கு மிகவும் பொருத்தமானவள் என வாழ்த்து சொல்லி அதே Diaryல் வைத்து விட்டு அழுது கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றாள்...! 

அவள் அழுது அழுது ஏதோ ஒன்றை தன் டயரியில் வைத்ததை கண்ட காதலன் உடனே சென்று அதனை வாசித்தான்... தன் விளையாட்டுக்கள் அனைத்தையும் சொல்லுவதற்காக தன் காதலியை அண்மிக்கும்போது அவன் கண் முன்னாடியே வீதியை கடக்கும் போது அவளின் உடல் வேகமாக வந்த‌ லொறியின் முன் சில்லில் நசுங்கியது....!
சிதறிய தன் காதலியை கண்டு துடித்தான் குளறினான்...! இருந்தும் என்ன பயன்...? 

அவள் ஆசையாக கேட்ட முத்த சின்னங்களை சிதறிய உடலின் எந்த பாகத்தில் பதிப்பான்....?
யாரென்று இனி அழைப்பது...? அழைத்தாலும் அவள் தான் வர போகிறாளா...? 
இனி அவனின் விளையாட்டு தனத்தை யாருடன் விளையாடுவான்...? யாருடன் சண்டை போடுவான்...? யாருடன் கோவிப்பான்...? 

இக்கதையை வாசிக்கும் நண்பர்களே....
 இனியாவது யாரும் உங்களின் அன்பானவர்களை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்...! காதலிக்கும் இதயங்கள் அக்கறையின்றி இருப்பதும் இல்லை...உங்களின் ஆசைகளை நிறைவேற்றாமல் இருப்பதும் இல்லை...!நீங்கள் உங்களின் அன்பானவர்களை சோதியுங்கள்... ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்திருங்கள்...!
அனைவரினதும் எதிர்ப்பிற்கு மத்தியில் காதலிக்கும் காதலர்களின் உண்மை சம்பவம்...(சுருக்கமாக...)

இருவரும் ஒரே வேலைத்தளத்தில் தான் பணி புரிகிறார்கள்... இருந்தும் இருவரும் காதலர்களென்பது சக பணியாளர்களுக்கு தெரியாது...! அவள் அவனிடம் ஒரு சின்ன விடயத்தை கூட மறைக்காமல் பகிர்ந்து விடுவாள்...ஆனால் அவனோ ஒரு சின்ன விடயத்தை கூட பகிர்ந்து கொள்ள மாட்டான்... எனினும் காதலன் அவளுக்கு பிடிக்காத விடயங்களை தான் செய்ய மாட்டேன் என அவளின் தலையில் அடித்து சத்தியம் வேறு செய்து கொண்டான்...!

இந்நிலையில் தன் காதலி தன் மேல் எவ்வளவு அக்கறை உடையவள் என்பதை அறிவதற்காக விளையாட்டு தனமாக அவளுக்கு பிடிக்காத விடயங்களை செய்யத்தொடங்கினான்...! இது அவளை மிகவும் புண்படுத்தியது...! எத்தனையோ தடவைகள் சொல்லியும் அவன் அவள் முன் தலையாட்டி விட்டு மறு நிமிடமே தன் விளையாட்டு தனத்தை தொடங்கினான்...! அதே போல் சக பெண்களுடனும் மிக நெருக்கமாக பழகினான்...!

தன் முன் தமது காதலனோ காதலியோ அவ்வாறு நடந்து கொள்வதை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..இது உலகறிந்த உண்மை... யாரும் மறுக்கவும் முடியாது.

இது விளையாட்டாக இருந்தாலும் அவனுக்கு அவளை தினமும் அழவைப்பதே வாடிக்கையாகி விட்டது...காரணம் இன்றி கோவிப்பதும், சண்டை போடுவதும் அவளை மிகவும் காயப்படுத்தியது...
இந்த விளையாட்டே ஒரு நாள் வினையாக மாறி விட்டது...!

அது அவ்வாறு இருக்க அங்கு பணி புரியும் சக பெண் அவனை நேசிக்க தொடங்கி விட்டாள்... அப்பெண் தன் காதலை வெளிப்படுத்துவதற்காக அவனின் Diaryன் முன் பக்கத்தில் அவன் பெயரையும் தன் பெயரையும் சேர்த்து எழுதியிருந்தாள்.... இதனை அவன் கவனிக்கவே இல்லை...

விளையாட்டாக இருந்தாலும் சத்தியத்திற்கு சக்தி அதிகமென்பது ஒரு நாள் தெரிந்து விட்டது...!

ஒரு நாள் அவனின் Diary யை பார்த்த காதலி அதிர்ந்து போனாள்... தன்னை அவன் விட்டு விலத்துவதற்காகவே அவ்வாறெல்லாம் நடந்து கொண்டான் என எண்ணி அவனுக்கு ஒரு கடிதத்தில் நீ தேர்ந்தெடுத்திருப்பவள் உனக்கு மிகவும் பொருத்தமானவள் என வாழ்த்து சொல்லி அதே Diaryல் வைத்து விட்டு அழுது கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றாள்...!

அவள் அழுது அழுது ஏதோ ஒன்றை தன் டயரியில் வைத்ததை கண்ட காதலன் உடனே சென்று அதனை வாசித்தான்... தன் விளையாட்டுக்கள் அனைத்தையும் சொல்லுவதற்காக தன் காதலியை அண்மிக்கும்போது அவன் கண் முன்னாடியே வீதியை கடக்கும் போது அவளின் உடல் வேகமாக வந்த‌ லொறியின் முன் சில்லில் நசுங்கியது....!
சிதறிய தன் காதலியை கண்டு துடித்தான் குளறினான்...! இருந்தும் என்ன பயன்...?

அவள் ஆசையாக கேட்ட முத்த சின்னங்களை சிதறிய உடலின் எந்த பாகத்தில் பதிப்பான்....?
யாரென்று இனி அழைப்பது...? அழைத்தாலும் அவள் தான் வர போகிறாளா...?
இனி அவனின் விளையாட்டு தனத்தை யாருடன் விளையாடுவான்...? யாருடன் சண்டை போடுவான்...? யாருடன் கோவிப்பான்...?

இக்கதையை வாசிக்கும் நண்பர்களே....
இனியாவது யாரும் உங்களின் அன்பானவர்களை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்...! காதலிக்கும் இதயங்கள் அக்கறையின்றி இருப்பதும் இல்லை...உங்களின் ஆசைகளை நிறைவேற்றாமல் இருப்பதும் இல்லை...!நீங்கள் உங்களின் அன்பானவர்களை சோதியுங்கள்... ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்திருங்கள்...!

தன் வீட்டு குடும்ப பெண்களை பாதுகாத்துக் கொண்டே அடுத்த வீட்டு குடும்ப பெண்களை திருட முயலும் பொறுக்கிகளுக்கு இந்த வீடியோ ஒரு பாடம்.







தன் வீட்டு குடும்ப பெண்களை பாதுகாத்துக் கொண்டே அடுத்த வீட்டு குடும்ப பெண்களை திருட முயலும் பொறுக்கிகளுக்கு இந்த வீடியோ ஒரு பாடம்.

"நரகத்தை நோக்கி .....காதல் என்ற பெயரில் மோசடி செய்யப்படும் பெண்கள் பற்றிய குறும்படம்.

இப்படம் அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் .காதல் என்ற பெயரில் மோசடி செய்யப்படும் பெண்கள் பற்றிய குறும்படம்.

February 6, 2013

என்ன ஒரு சுகம் .! (8+ வயது வந்தவர்கள் மட்டும் )


என்ன ஒரு வேகம் . கொஞ்சம் பொறுமையாக படியுங்க . நான் "8+" என்றுதான் போட்டுள்ளேன் .."18+" அல்ல . அதனால இந்த பதிவை எல்லாரும் படிக்கலாம் (டேய் , நீ எங்கடா இருக்க #$$%%% )..


 ரொம்ப சின்ன விஷயம் தான் .
 ஒவ்வொரு தடவை பண்ணும்போதும் ரொம்ப இனிமையாக இருக்குது .
 அடச் ச்சே ..என்ன வேற மாதிரி , பதிவு போகுது .
நேர விசயத்துக்கு வரேன் . இந்த வாரம் , முடி வெட்டிகொள்வதர்க்காக சலூனுக்கு போனேன் . அட .அட .. முடிக்கு கூட வலிக்காம , என்னமாய் வெட்டுறாங்க ..
 ஒவ்வொரு தடவை இந்தமாதிரி பீல் பண்ணி கிட்டு இருக்கும் போதே ,
ஒரு சின்ன தூக்கம் கண்ணை கட்டும் பாருங்க .. ஆஹா ...ஆஹா ... 
அது என்னவோ நல்லத்தான் இருக்கு (ஏய் ,என்னமா பீல் பண்ணி கூவுற ..)
 என்ன மாதிரி நீங்க யாராவது பீல் பண்ணி இருக்கீங்களா .?.
 பொண்ணுங்க எல்லாம் பாவம் , இந்த விசயத்தை பொறுத்தவரை
 (என்ன ஒரு ஆணாதிக்கம் ??? !!!!) .. 

ஒவ்வொரு தடவை முடிவெட்டிக்கொள்ள போகும் போதும் ஒவ்வொரு அனுபவம் (கொஞ்சம் அடங்குடா ..) அந்த தண்ணியை தலையில கொஞ்சம் அப்படி , அப்புறம் இப்படி அடிக்கும் போது ஜிலு ஜிலுன்னு ஒரு A.C பீலிங் .

 அப்புறம் எல்லாம் முடிந்தபின்னாடி , ஆயில் மசாஜ் கொஞ்சம் பண்ணுவாங்க பாருங்க .. அப்படியே போய், வீட்டுல சுடுத்தண்ணியில ஒரு முக்கு ... அவ்வளோதான் .. அவ்வளோதான் ..

 கட்டையை சாய்த்து, விட்டத்தை பார்த்து தூங்குனா என்ன ஒரு சுகம் ..

 இது எல்லாம் ஒரு மேட்டர், அப்படின்னு பதிவு போடனும்மான்னு ஒரு தயக்கம் .
 ஆனால் ஒரு மயக்கத்துல பதிவை போட்டுட்டேன் .(என்ன , T.R வாசம் வீசுது ..?!!)

சூப்பர் ரெஸ்யூம் ரெடி செய்ய ஒரு இணையதள‌ம்.


ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைப்போல வேலை வாய்ப்பை பொருத்தவரை திறமை பாதி ரெஸ்யூம் மீதி என்றே சொல்ல வேண்டும்.ஒரு நல்ல ரெஸ்யூம் என்பது வேலைக்கான தகுதி,திறமைகள் இத்யாதிகளை பட்டியலிடுவதோடு தோற்றம் மற்றும் வடிவமைப்பிலும் நேர்த்தியானதாக இருக்க வேண்டும்.
அப்படி,பார்த்தும் சூப்பர் என்று சொல்லக்கூடிய ரெஸ்யூமை உருவாக்குவது என்பது ஒரு கலை.அதற்காக மெனக்கெட வேண்டும்.ஆனால் எல்லோருக்கும் அதற்கான நேரமே ஆர்வமே இருப்பதில்லை.இருப்பினும் உள்ளபடியே அசத்தலான ரெஸ்யூமை உருவாக்க சுலபமான வழி உள்ளது.ஜாப்ஸ்பைஸ் இணையதளம் இதற்கு உதவுகிற‌து.
மிக‌ எளிமையான‌ தோற்ற‌தை கொண்டுள்ள‌ இந்த‌ த‌ள‌த்தில் உள்ள‌ அட்ட‌காச‌மான‌ ரெஸ்யூம் மாதிரிக‌ளில் இருந்து பிடித்த‌மான‌தை தேர்வு செய்து கொண்டு அதில் உங்க‌ள் விவ‌ர‌ங்க‌ளை இட‌ம்பெற‌ச்செய்ய‌ வேன்டிய‌து தான்.ரெஸ்யூமில் உங்க‌ளுக்கு ஏற்ற‌ பிர‌த்யோக மாறுத‌ல்க‌ளையும் சுல‌பாமாக செய்து கொள்ள‌லாம்.
அத‌ன் பிற‌கு பிடிஎப் கோப்பு வ‌டிவிலோ அல்ல‌து அச்சு வ‌டிவிலோ மாற்றிக்கொள்ள‌லாம்.
மிக‌வும் எளிமையான‌ த‌ள‌ம்.வ‌ள‌வ‌ள‌வென்று ஆலோச‌னைக‌ளோ குறிப்புக‌ளோ கிடையாது.வேர்ட் கோப்பை போன்ற‌ ப‌க்க‌த்தில் நீங்க‌ள் பாட்டுக்கு விவ‌ர‌ங்க‌ளை சேர்த்துக்கொண்டே போக‌லாம்.ரெஸ்யூம் எப்ப‌டி காட்சி அளிக்கும் என்று முன்னோட்ட‌ம் பார்த்தப‌டி திருத்த‌ங்க‌ளை செய்து த‌னித்துவ‌ம் வாய்ந்த‌ செஸ்யூமை உருவாக்கி கொள்ள‌லாம்.
நீங்க‌ள் வேலை தேடுப‌வ‌ர் என்றால் ஆல் த‌ பெஸ்ட்.

கையில் பல கோடி ! ஏமாற ஆர் யூ ரெடி ?


சமீபத்துல அண்ணன் ஒருத்தரு போன் பண்ணி சாயங்காலம் வீட்டுக்கு வா, ரொம்ப முக்கியமான விசயம், கண்டிப்பா வந்துடுன்னு போன் பண்ணுனார், சரின்னு நானும் கிளம்பி அவர் வீட்டுக்கு போனேன், என்னை பாத்ததும் டக்குன்னு சிறை நிரப்பும் போராட்டத்திற்கு போய் ஜெயிலுக்கு போகாம எஸ்கேப் ஆன உடன்பிறப்பு கணக்கா வா அந்தபக்கம் போயிடுவோம்னு ரகசியமா கூட்டிட்டு போனாரு, ஓ பயங்கர ரகசியம் போலருக்கேன்னு நானும் சைலண்டா போனேன்.

தனியா ஒரு இடத்துக்கு போய் நின்னவரு, டேய் உன்கிட்ட ஒரு விசயம் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லக்கூடாது, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னாரு, சரின்னா என்ன விசயம்னு சொல்லுங்க, யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சொன்னேன், இரண்டு மூணுதடவை சத்தியம் மேட்டர ரீபிட் பண்ணி கன்பர்மேசன் பண்ணிகிட்டு விசயத்தை சொன்னாரு மனுசன், ச்சீன்னு போயிடுச்சு.

வேற ஒன்னும் இல்லீங்க, இவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்கு இவரோட நம்பருக்கு ஏழுகோடி ரூபா பரிசு விழுந்திருக்கறதா, அதுக்கு வீட்டு அட்ரஸ், போன் நம்பர், எல்லாம் மெயில் பண்ண சொல்லி எஸ்.எம்.எஸ் பண்ணி இருக்காங்க, அதைத்தான் உண்மைன்னு நம்பி என்ன மெயில் பண்ண சொல்லி கேட்கறதுக்காக கூப்பிட்டு இருந்தாரு, நானும் அண்ணா இது எல்லாம் சும்மா, டுபாகூரு மேட்டரு, இதையெல்லாம் பெருசா நினைக்காம விட்டுடுங்கன்னு சொன்னா ஆளு கேட்கவே இல்லை, டேய் நோக்கியா கம்பெனில இருந்து மெசேஜ் அனுப்பி இருக்காங்கடா? ஒருவேளை நிசமா இருந்தா ஏழு கோடிடா மெயில் அனுப்புடான்னு ஒரே தொல்லை.


நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன் அண்ணன் கேட்கற மாதிரி இல்லை, சரி அனுப்பித்தான் தொலைவோம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு எஸ்.எம்.எஸ் வாங்கி பாத்தாMDNOKIA@GMAIL.COM அப்படிங்கற மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லி இருந்தது, அடப்பாவி நோக்கியா கம்பெனி எம்,டிக்கு சொந்தமா ஒரு டொமைன் வாங்கக்கூடவா காசிருக்காது, ஜிமெயில் ஐடிய வச்சிருக்கானே? 1100 மாடல்லயே 2ஜி அளவுக்கு சம்பாதிச்சிருப்பானேன்னு இதையும் சொன்னேன், எங்கண்ணந்தான் அடைந்தால் ஏழுகோடி இல்லையேல் தெருக்கோடின்னு உறுதியா நின்னதால வேற வழி இல்லாம இதுக்குன்னே ஒரு மெயில் ஐடிய ஓப்பன் பண்ணி பேரு, அட்ரஸ், போன் நம்பருன்னு எல்லாத்தையும் அனுப்பி வச்சேன்.

எவண்டா சிக்குவான்னு போர்வைய போத்திட்டு காத்திகிட்டு இருக்கானுகளே கம்முனாட்டி பசங்க மெயில் அனுப்புன ஒருமணி நேரத்துல ரிப்ளை வந்திருச்சு, அது என்னன்னா, இந்தமாதிரி ஏழுகோடியே நாற்பது லட்சம் ரூபா பரிசுத்தொகை உங்களுக்கு விழுந்திருக்கு, அதுக்கு வாழ்த்துக்கள், அப்புறம் இந்த பணம் உங்க கைக்கு கிடைக்கற வரைக்கும் யாருகிட்டயும் சொல்லக்கூடாது, ஏன்னா சட்டசிக்கல் வந்துரும், டேக்ஸ் கட்ட சொல்லுவாங்க, பணத்த நாளைக்கு விமானத்துல அனுப்பி வைக்கிறோம், எங்க ஆபீசரு ஜேக்கப் ஆண்டர்சன் கூடவே வருவாரு, உங்களோட கிப்ட் பாக்ச கஸ்டம்சுல இருந்து ஈசியா வாங்கித்தருவாரு, அப்படி இப்படின்னு, கடைசியா மேட்டருக்கு வந்தானுக அதாவது உங்களோட ஐடி, ப்ரூப் ஒன்னும், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் சார்ஜ் 15500 ரூபாயும் கொண்டு வாங்கன்னு.

[ அந்த மெயில்ல வந்திருந்தது கீழ இருக்கற டாக்குமெண்ட்ஸ்தான்]


நானும் உடனடியா ரிப்ளை எதுவும் பண்ணாம ஒரு ரெண்டுநாள் சும்மா விட்டுட்டேன், அடுத்தடுத்த நாள் மெயில் அனுப்பிட்டே இருந்தானுக, நாளைக்கு ப்ளைட் லேண்டிங் லேண்டிங்னு நான் ரிப்ளையே அனுப்பல, அண்ணன் வீட்டு பக்கமும் போகல, சரின்னு மூணாவது நாள் இதையெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு அண்ணன் வீட்டுக்கு போனா அவனுங்க அடுத்தநாளே போன் பண்ணி பேசியிருக்கானுக, 15500 ரூபாய் அமவுண்டை நாங்க சொல்ர அக்கவுண்ட் நம்பர்ல போடுங்கன்னு

நம்ம அண்ணன் ஏற்கனவே வயித்துக்கு கஞ்சி வாய்க்கு பீடின்னு வாழுற ஆளு, என்கிட்ட முன்னூரு ரூபாதான் இருக்குது, சனிக்கிழமை சம்பளம் வாங்குனா ஆயிரம் கிடைக்கும் மொத்தமா 1300 இப்ப வச்சுக்கங்க, அப்புறம் ஏழுகோடி கிடைச்சதும் மீதிய கொடுத்துடறேன்னு சொல்லி இருக்காரு, அவனுங்க அதெல்லாம் முடியாது மொத்தமா 15500 வேணும் இல்லைன்னா பணம் கிடைக்காதுன்னு சொல்லிட்டானுக

இப்படியே அடுத்தநாளும் போன் பண்ணி இருக்கானுக, நம்மண்ணன்னும் லேசுபட்ட ஆளா 15500 க்கு பதினைஞ்சு லட்சமா நீங்களே எடுத்துட்டு மீதிப்பணத்தை எனக்கு கொடுங்கன்னு கேட்டுருக்கார், அவன் கடுப்பாயி நாளைக்குள்ள பணம் கட்டல உனக்கு கிப்ட் கிட்டலன்னு கறாரா சொல்லி இருக்கான், அடுத்தநாள் நம்மாளு சரி உனக்கும் வேணாம் எனக்கு வேணாம் ஏழுகோடியில இரண்டு கோடிய நீயே வச்சுக்க, எனக்கு பேலன்ஸ் அஞ்சு மட்டும் போதும், டீலா? நோ டீலா?ன்னு கேட்க அவன் விவேக்கு ஒருபடத்துல சொல்லுவாரே அந்த ஒத்தவார்த்தை அத சொல்லிட்டு போன கட் பண்ணிட்டானாம்.

அன்னைக்கு சாயங்காலம் அவரு வீட்டுக்கு போயிருந்தேன், குவாட்டர ஊத்திட்டு பொலம்பிட்டு இருந்தாரு, அய்யோ போச்சே ஏழு கோடி போச்சே, இனி சூர்யாகிட்டத்தான் போயிதான் ஹாட் சீட்டுல உட்காரணுமா அவன் கேணத்தனமா கேள்வியெல்லாம் கேட்பானே, ஈசியா வந்தது மிஸ்ஸாயிடுச்சேன்னு, அட ஏண்ணா நீங்கவேற அவனுகளே பிராடு பசங்க, நாந்தான் அப்பவே சொன்னன்ல பணம் கேட்பானுகன்னு, நீங்கதான் கேட்கலன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.

சாப்பிட்டுட்டு படுத்து தூங்கலாம்னு படுக்கும் போது என்னோட செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது, உங்களுக்கு ஏழுகோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு, உங்க அட்ரஸ், போன் நம்பர் இந்த மெயில் ஐடிக்கு அனுப்புங்க

MDHONDA@GMAIL.COM அடப்பாவிகளா மறுபடியும் மொதல்ல இருந்தா? அவ்வ்வ்வ்!!!!   

டிஸ்கி : நிறைய பேருக்கு இந்தமாதிரி எஸ்.எம்.எஸ் வந்திருக்கும், இந்த எஸ்.எம்.எஸ்களுக்கு ரிப்ளை பண்ணுனா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது, தெரிஞ்சுகட்டுமேன்னுதான் இந்த பதிவு.