ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைப்போல வேலை வாய்ப்பை பொருத்தவரை திறமை பாதி ரெஸ்யூம் மீதி என்றே சொல்ல வேண்டும்.ஒரு நல்ல ரெஸ்யூம் என்பது வேலைக்கான தகுதி,திறமைகள் இத்யாதிகளை பட்டியலிடுவதோடு தோற்றம் மற்றும் வடிவமைப்பிலும் நேர்த்தியானதாக இருக்க வேண்டும்.
அப்படி,பார்த்தும் சூப்பர் என்று சொல்லக்கூடிய ரெஸ்யூமை உருவாக்குவது என்பது ஒரு கலை.அதற்காக மெனக்கெட வேண்டும்.ஆனால் எல்லோருக்கும் அதற்கான நேரமே ஆர்வமே இருப்பதில்லை.இருப்பினும் உள்ளபடியே அசத்தலான ரெஸ்யூமை உருவாக்க சுலபமான வழி உள்ளது.ஜாப்ஸ்பைஸ் இணையதளம் இதற்கு உதவுகிறது.

மிக எளிமையான தோற்றதை கொண்டுள்ள இந்த தளத்தில் உள்ள அட்டகாசமான ரெஸ்யூம் மாதிரிகளில் இருந்து பிடித்தமானதை தேர்வு செய்து கொண்டு அதில் உங்கள் விவரங்களை இடம்பெறச்செய்ய வேன்டியது தான்.ரெஸ்யூமில் உங்களுக்கு ஏற்ற பிரத்யோக மாறுதல்களையும் சுலபாமாக செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு பிடிஎப் கோப்பு வடிவிலோ அல்லது அச்சு வடிவிலோ மாற்றிக்கொள்ளலாம்.
மிகவும் எளிமையான தளம்.வளவளவென்று ஆலோசனைகளோ குறிப்புகளோ கிடையாது.வேர்ட் கோப்பை போன்ற பக்கத்தில் நீங்கள் பாட்டுக்கு விவரங்களை சேர்த்துக்கொண்டே போகலாம்.ரெஸ்யூம் எப்படி காட்சி அளிக்கும் என்று முன்னோட்டம் பார்த்தபடி திருத்தங்களை செய்து தனித்துவம் வாய்ந்த செஸ்யூமை உருவாக்கி கொள்ளலாம்.
நீங்கள் வேலை தேடுபவர் என்றால் ஆல் த பெஸ்ட்.

No comments:
Post a Comment