பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


January 28, 2013

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ டயட் சார்ட்...



       
        உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை  சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.

சேர்க்க வேண்டிய உணவுகள்: 
6.00 AM
GREEN TEA - யை  பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10  நிமிடம் கழித்து பருக வேண்டும்.

8.00 AM
வேக  வைத்த பாசிப்பயிறு (அ) கொண்டைகடலை, சுண்டல் (அ) காணப்பயிறு + ஒரு கப் பச்சை காய்கறிகள்.

11.00 AM
முட்டைகோஸ் சூப்  (அ) காய்கறி சூப்.


1.00 PM
ஒரு கப் சாதம் + ஒரு கப் காய்கறிகள் + ஒரு கப் கீரை.

4.00 PM
GREEN TEA + ஒரு  ஆப்பிள் (அ)  ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.

7.30 PM
கம்பு (அ) கேப்பை (அ) கேழ்வரகு தோசை (2 NOS) + தக்காளி சட்டினி மட்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:

 

        கோதுமை, ஓட்ஸ், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகள், மற்றும் கிழங்குகள், இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள், பொறித்த உணவுகள், தேங்காய், மட்டன், முட்டை, சிக்கன், மீன், பால் பொருட்கள், இனிப்பு வகையான பழங்கள் ( வாழை, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், பலாப்பழம்), பேரிட்சை, பருப்பு ( முந்திரி, பாதாம், பிஸ்தா), கூல்ட்ரிங்க்ஸ், சாக்கலேட்ஸ், பிஸ்கட்ஸ், ஐஸ்கிரீம், பார்லி, எண்ணெய் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள்.

எளிமையான உடற்பயிற்சிகள்:


            ரொம்ப கடினமான உடற்பயிற்சிகள்  தேவையில்லை. வெறும் கயிற்றை வைத்தே உடற்பயிற்சி செய்யலாம். அதுதான் POCKET ROPE GYM வெறும் 250 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கிறது. அதோடு, உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.  அதில் கொடுத்துள்ள உடற்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது.
           கண்டிப்பாக இரண்டே வாரத்தில் சுமார் மூன்று கிலோ எடையை குறைத்து விடலாம்.

          மேற்கண்ட உணவு கட்டுப்பாடும், உடற்பயிசியும் கடைபிடிப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும் மிக மிக அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக OBESITY DOCTOR மூலம் ஆலோசனை செய்த பின்னர் இம்முறைகளை கடைபிடிக்கவும். ஏனெனில் அவர்களுக்கு அதிகப்படியான எடையை குறைக்க மாத்திரைகளும், மருந்துகளும் கொடுப்பார்கள்.


        உடல் எடையை குறைத்த பின்னர் சரிவிகித உணவும், சீரான உடற்பயிசியும் அவசியம் தேவை. அப்பொழுது தான் குறைத்த எடையை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும்.

January 23, 2013

வியக்க வைக்கும் பறவைகள்


 மிக அருமையான புகைப்படங்களை இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த புகைப்படங்கள் தாய்லாந்தில் கிளிக் பண்ணப்பட்டவை  இதை நான் ஒரு இணையத் தளத்திலிருந்து  தான் பெற்றேன். இந்த புகைப்படங்களை பார்க்கும் போது புகைப்படம் எடுப்பதில் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன் என எனக்கு வியக்கத்தோன்றுகின்றது.

#242 白耳還降

#385 青背藍桐 Back Track

#425 小翠插覓 (Air To Sea Missile)
#595 白鷺藤櫺 Bird Circus
#689 小綠三玩
#638 小翠騰獲
#18 黃腹過貓 Step by Step
#599 藍鵲黯凌
#350 藪鳥唅珠 (Take easy, Don't choke!)
#658 東環幻漾 Colorful Reflex!
#647 黃腹襟扇
#417 小綠紅揚 (ComeOn! Follow Me!)
#696 白耳暮舞 Dusk Dance
#528 黃鴝芋展 (Wingspan on the Foliage)
#289 鳳鷗翔弋
#458 黃腹蝶舞

பொண்ணுங்க எல்லாம் நம்ம ப்ளாக் பக்கம் ஓடி வாங்க.....




 தலைப்பப் பார்த்து ஓடி வந்திட்டீங்களா...? அப்ப கொஞ்சம் கீழுக்குப் போய் பாருங்க.....

என் இனிய பெண் குலமே....(பாரதிராஜா ஸ்டைல் போல இருக்கா....) உங்களுக்காக இந்த சிட்டுக்குருவி மிக தொலைதூரம்....
அது ரொம்பதூரம்...அத சொல்ல வார்த்தையே இல்ல...அப்படிப்பட்ட தூரத்துக்குப்  பறந்து போய் கொஞ்சம் போல அழகான மருதானி போட்ட கைகள படம் புடிச்சு வந்திருக்கு காரணம் உங்கள் மீது கொண்ட அக்கறை என்று நீங்க நெனச்சி எனக்கு அவார்ட்டு குடுக்க வேனாம்

 ...........நீங்க போர்ர மருதாணிகள.....பார்த்து சகிக்க முடியல்ல... அதனாலதான் இந்த டிசைன எல்லாம் கொண்டு வந்திருக்குறன் இதப் பார்த்தாவது மருதானி எப்படி போர்ர என்னு பழகிக்கோங்க......

இந்த படம் போதாது என்னா சொல்லுங்க எங்கிட்ட இருக்குறது எல்லாத்தையும் எடுத்து விடுரன்....

சரியா அப்ப நான் போயிட்டு வரட்டா....

வந்ததும் தான் வந்தீங்க...அப்பிடியே என்னையும் கவனிச்சுட்டு போங்க...





















காதலர்கள் தொலைபேசியில் இப்பிடித்தானோ?



இரண்டு காதலர்கள் (அதாவது ஒரு காதலன், ஒரு காதலி ) தொலைபேசியில என்னத்தத்தான் அப்பிடிக் கதைப்பாங்கள் எண்டு மண்டையப் போட்டு பிசையுறாக்களுக்காக….

காதலி மிஸ்ட் கோல் குடுக்கிறா….
உடன இவர் பதறிவிழுந்து அழைப்பெடுக்கிறார்…
அவா: ஹலோ…
இவர்: ஹாய்டா…. சொல்லு…
அவா: இல்ல… சும்மா தான் கோல் பண்ணினன்…
இவர்: (மனதுக்குள்) எப்படீ நீ கோல் பண்ணினாய்… எப்பயுமே மிஸ்ட் கோல் தானே…
இவர்: ஓ! என்ன பண்றாய்?
அவா: இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன். சேர் என்ன பண்றீங்க?
இவர்: நானும் இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன்… இப்ப சுட்டும் விழிச்சுடரே பாட்டுக் கேக்கிறன்…
அவா: நல்ல பாட்டு…
(இப்பிடியே சொல்லிக் கொண்டு ‘மழை அழகா வெயில் அழகா உன் கண்ணில் நான் கண்டேன்…’ எண்ட வரிய மெல்லிய குரலில பாடுறா…)
இவர்: (மனதுக்குள்) அங்க என்ன எலி கத்துது?
இவர்: ஹேய்… நீ இவ்ளோ நல்லாப் பாடுவியா?
அவா: சீ… போடா….
இவர்: இன்னொரு தரம் பாடன்….
அவா: என் றூம் மேற்ஸ் (room mates) எல்லாம் படுத்திற்றாங்க… எழும்பிடப் போறாங்க….
இவர்: (மனதுக்குள்) உண்மைதான்…. பேய் கீய் வந்திற்றோ எண்டு பயப்பிட்டிருங்கள்…
இவர்: கமோன் டா…. பிளீஸ்….
அவா: போ…….டா…… நான் அந்தளவு நல்லாப் பாடமாட்டன்….
இவர்: (மனதுக்குள்) அது ஊருக்கே தெரியுமே…
இவர்: ஹேய்… நீ பாடினது நல்லா இருந்திச்சுடா…. பிளீஸ் பாடேன்….
அவா: எனக்கு ஒருமாதிரி இருக்குடா….
இவர்: இதில என்னம்மா இருக்கு…. நீ நல்லாத்தானே பாடுறாய்….?
அவா: அத நீ தான் சொல்லணும்… எனக்கெப்பிடித்தெரியும்?
இவர்: (மனதுக்குள்) ஏதோ வேற வழியில்ல… சொல்லிற்றன்…
இவர்: இப்ப பாடுவியா மாட்டியா?
அவா: ஏன்டா படுத்திறாய்….
இவர்: ஓகே… விடு…. (விருப்பின்றி)
அவா: எனக்கு அந்தளவுக்கு நல்ல குரல் இல்ல…..லடா…..
இவர்: (மனதுக்குள்) கழுதைக் குரல எப்பிடி ஸ்ரைலா சொல்லுது பார்…
இவர்: ம்… ம்…
அவா: சரி…. இவ்வளவு கேக்கிறாய்…. உனக்காக ஒரே ஒரு பந்தி மட்டும் பாடுறன்….
இவர்: (மனதுக்குள்) என் கஷ்ர காலம்….
இவர்: கிரேட்…
அவா: எந்தப் பாட்டுப் பாடட்டும்?
இவர்: (மனதுக்குள்) நீ எது பாடினாலும் இண்டைக்கு நித்திரை போச்சு…. பிறகென்ன எந்தப்பாட்டா இருந்தா என்ன….
இவர்: ம்ம்ம்ம்ம்ம்…. உன் பேரைச் சொல்லும் போதே’ from அங்காடித் தெரு?
அவா: நைஸ் சோங்…. பட் எனக்கு லிறிக்ஸ் தெரியாதேடா….
இவர்: (மனதுக்குள்) உனக்கு எழுதப்படிக்கவே தெரியாது…. பிறகு பாட்டுவரி என்னெண்டு ஞாபகம் இருக்கும்?
இவர்: அப்ப ‘சின்னச் சின்ன ஆசை’?
அவா: இல்ல… உன் பேரைச் சொல்லும் போதேயே பாடுறன்…
இவர்: (மனதுக்குள்) எதக் கத்தினா எனக்கென்ன…
இவர்: கூல்…
(க்ம்ம்… எண்டு தொண்டையைச் செருகி குரலை சரியாக்கிறா… பிறகு ஒரு வரி பாடுறா… பிறகு…)
அவா: இல்ல வேணாம்… நான் shy ஆ பீல் பண்றன்டா….
இவர்: பாடு (காதலியின் பெயர்) நீ பாடு…. உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாமே…. பாடு பாடு…
அவா: பாத்தியா… நக்கலடிக்கிறாய் பாத்தியா?
இவர்: (மனதுக்குள்) தெரியுதெல்லே…. பிறகென்ன….
இவர்: இல்லடா…. நீ shy ஆ பீல் பண்றாய் எண்டாய் தானே… அதுதான் உன்ன normal ஆக்கப் பாத்தன்….
அவா: ம்… ம்…
இவர்: பிளீஸ் பாடன்….
அவா: நாளைக்கு பாடட்டுமா?
இவர்: (மனதுக்குள்) அப்பாடா… தப்பிச்சன்….
இவர்: சரிம்மா… உனக்கு எப்ப தோணுதோ அப்பவே பாடு….
அவா: ம்.. ம்…
இவர்: குட் நைட் டா…
அவா: குட் நைட் டா…
இவர்: ஸ்வீற் ட்றீம்ஸ்…
அவா: ஸ்வீற் ட்றீம்ஸ்…. பாய்…
இவர்: (மனதுக்குள்) தொல்லை தீர்ந்திச்சு…
சிறிது நேரத்தில், வழமையைப் போல அவா மிஸ்ட் கோல் குடுக்க இவர் எடுக்கிறார்…
அவா: ஏய்… நித்திரை கொண்டிற்றியா?
இவர்: (மனதுக்குள்) இல்ல…. 2012 இல உலகம் அழியுமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்…
இவர்: இல்லம்மா…
அவா: அப்ப என்ன பண்றாய்?
இவர்: (மனதுக்குள்) ராத்திரியில ஓடிப்பிடிச்சா விளையாடுவாங்கள்… என்ன கொடுமை இது…
இவர்: இல்ல… மட்ச் பாத்திற்று இருந்தன்…
அவா: சரி அப்ப நீ மட்ச் பாரு… நான் படுக்கிறன்…
அவா: ஹேய்… நான் பாடாததப் பற்றி ஏதும் நினைக்கிறியா? உண்மையா வெக்கமா இருந்திச்சு டா…
இவர்: (மனதுக்குள்) தப்பிச்சன்டா சாமி…
இவர்: இல்லடா…. ஒண்டும் இல்லடா…
அவா: ஐ ஆம் சொறிடா…
இவர்: இற்ஸ் ஓகே டா….
(பிறகு வழமையைப் போல குட் நைட், ஸ்வீற் ட்றீம்ஸ் சொல்லி சொல்லி படுத்திருவாங்கள்…..)

January 22, 2013

இந்தப் பதிவுக்கு நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்க..




இது திமிரா? கொழுப்பா? ஆர்வக்கோளாறா? எப்படி சொல்றதுனு தெரில.
இணைக்கப்பட்டிருக்குற வீடியோ காட்சிய பாத்துட்டு அதற்கேற்ற தலைப்ப நீங்களே சொல்லுங்க..


 .

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரைக் கண்டறிய..




மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம்.
மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க... தொகுதி 1
A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98
மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )
பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.
பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.
பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை  வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக. உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள். 100 சதவீதம் உண்மையானது...
A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49
என்ன??? கண்டுபிடிச்சாச்சா???

இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்





வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க.
அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க..
1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்?
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சிடாதீங்க..)
2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்?
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல்லணும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)
3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?
அனுபவம்ங்குறது பெரும்பாலான நிறுவனங்கள்ல அவசியமானதா மாறிடுச்சு. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு. (இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக்கணும்..)
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
தூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்தனமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க்க்கூடாது. ஏன்னா கேள்விகள் அதப்பத்தியும் வரக்கூடும்.
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொம்ம்ம்ம்ப நேர்மையா பதில் சொல்லக்கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்னு நெனைக்கிற மாதிரியான காரணத்தை சொல்லணும்.
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொடுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல்லிட்டு பம்மிடலாம்..)
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
இது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சிருக்கீங்கங்குறத காட்ட உதவும். அதுமட்டுமில்லாம, உங்களோட நடத்தையை எடைபோட உதவும்.. ஜாஆஆஆஆக்கிரதை. (அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தியெல்லாம் ஓப்பனா சொல்லப்படாது..)
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பத்தியும் தெளிவா தெரிஞ்சுவச்சுக்குறது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளை பண்ணேன், தட்ஸ் ஆல்“னு தெனாவெட்டா பதில் சொல்லி ஆப்பு வாங்காதீங்க..)
10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?
வேலை காரணமா, சில நாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதுக்கு நீங்க தயாரா இருக்கிங்களானு முன்னாடியே தீர்மானிச்சு வச்சுக்குறது அவசியம். (கூட வேலைபாக்குற பொண்ணை துணைக்கு அனுப்புவீங்களானு கேட்றாதீங்க...)
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா?
வேற நிறுவனத்துல வேலைபார்த்த அனுபவம் இருந்துச்சுனா, இந்தக் கேள்விக்கான பதில், நம்மளோட திறமையை யூகிக்கச் செய்யும். (ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு சமாளிச்ச அனுபவத்த சொல்லி வச்சுடாதீங்க..)
12. தனித்து செயல்பட விருப்பமா? அல்லது குழுவாக செயல்பட விருப்பமா?
இது அவங்கவங்க, தன்மேல வச்சிருக்குற நம்பிக்கையப் பொறுத்து பதிலளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..)
13. இங்கு வேலை கிடைக்காதபட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன்“னு சொல்லத் தோணும். ஆனா சொல்லிடாதீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக்கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வேலை கிடைக்கலாம்.
14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்“னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எதுவும் சொல்லாம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்லணும். தொடர்ந்து வேலைசெய்ய முன்வரும்பட்சத்துல வாய்ப்புகள் தரப்படலாம்.
15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?
இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும். (இங்க எத்தன பொண்ணுங்க வேலை பாக்குறாங்க“னு கேட்டுறாதீங்க...)
**********************************************
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கேள்விகள் எதுவாகயிருந்தாலும் தைரியமா, தடுமாற்றமில்லாமல நாம கூறும் பதில்கள் ரொம்பவே அவசியம். நம்மகிட்டயிருந்து வெளிப்படும் பதில்கள், சம்பந்தப்பட்டவர்க்கு திருப்தியளிக்கும் பட்சத்துல, அதற்கான பலன் நிச்சயம் பாசிடிவ்வாக அமையும்.
வாழ்த்துக்கள்.

January 21, 2013

பெண்ணை பெற்றோரே! இதைக் கொஞ்சம் பாருங்கள் – வீடியோ

ஜி தொலைக்காட்சி (தமிழ்) -ல் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை இணையத்தில் கண்டேன். சற்று என் மனம் கனத்து போனது. 7 ஆண்டுகால‌மாக தனது மகள் ஒருவனை காதலிக்கிறா ள் என்ப தை இவளது பெற்றோர் தெரிந்திருந்தும், இவளை இவள து விருப்ப த்திற்கு மாறாக வேறு ஒருவனுடன் கட்டாயப்படுத்தி பதிவுத் திருமணம் செய்து வைத் துள்ள‍னர். பெண்ணை பெற்றோ ரே! கொஞ்சம் உங்களது கோப தாபங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, விதை 2விருட்சம் (நான்) கீழே குறிப்பிட்டுள்ள‍ வரிகளை  சற்று கவனமாக படித்தும், வீடியோ வை பார்த்து சிந்திப்பீர்! என்ற நம்பிக்கையில், எனது பதிவினை தொடர்கிறேன்.

பெண்ணை பெற்றோரே! உங்கள் பெண் ஒருவனை காதலிக்கிறான் என்று      உங்களுக்கு தெரிய வரும்போது, அவளது காத லை அங்கீகரியுங்கள். உங்கள் பெண் காதலிக்கும் அந்த காதலனை அழைத்து  பேசி, அவனது குண நலன்கள் மற்றும் குடும்பத்தின் பின்ன‍ணி போன்றவற்றை விசாரித்து, நல்ல குடும்பம்  நல்ல‍ பையன் என்று தெரிந்தால், உங்கள் பெண் காதலிக்கும் அந்த பைய னையே உங்களது பெண்ணு க்கு மணம் முடித்து வையுங்கள்.
பெண்ணுக்கு கல்யாணம் செய்ய‍, அவளது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக திரிந்து ஜோதி டர்களை தேடி அலைந்து, அவ ளுக்கு விரும்பம் இல்லாத திருமணத்தை நீங்கள் செய்து வைத்து, திருமணத்தி ற்குப்பின் பழையகாதலனை மறக்க‍ முடியாமலும், கணவனுடனுன் ஒத் துப் போக முடியாமலும், உங்கள் பெண்ணின் மனம் குமுறிக் கொண் டே இருக்கும் அச்ச‍மயத்தில் உங்கள து பெண் ணின் பழைய காதலனை பார்க்க‍ நேரும்போது, திருமணத் திற்கும முன்பு இருந்த அந்தக் காத ல் கள்ள‍க்காதலாக உருமாறி, குடும்பத்தையே சீர்குலைக்கும் என் பதை நினைவில் கொள்ளுங்கள்.
சரி! உங்கள் பெண் காதலிக்கும் அந்த பையனை உங்களுக்கு பிடிக்க‍வில்லையென்றால், குறைந்த பட்சம் 1 முதல் 2 ஆண்டுகள் வரையா வது அந்த திருமணத்தையாவது தள்ளிப்போடுங் கள். அதுவரை உங்கள் பெண்  மாறுகிற ளா? அல்ல‍து உங்களால் அவளை மாற் ற‍ முடியுமா? என்பதை முயற்சித்துப் பாருங்கள்.
உங்கள் பெண் காதலிக்கும் அப்பையன் ஒரு அயோக்கியனாக இருந்து, அவனது பிடியில் இருந்து, உங்கள் பெண் விடுப ட்டு, தனது காதலையும் புதைத்து தனது மனதை மாற்றிக் கொள்ளு ம் பட்சத்தில், தாராள மாக நீங்கள் பார்க்கும் பையனையே (அந்த பையன் உங்கள் பெண்ணுக்கும் பிடித்திருக் க வேண்டும்)  திருமணம் செய்து வையுங் கள். அப்பொழுது அவளது காதல் முழுவ தையும் தனது கணவன் மீதே செலுத்தி, இல்ல‍றத்தை  நல்ல‍றமாக கொண்டு செல் வாள்.
அல்ல‍து
உங்கள் பெண், அவளது காதலில் அழுத்த‍ மாக இருந்து காதலனின் கரம்பிடித்தே தீருவேன் என்று இருக்கும் பட்சத்தில் அவளது காதலை ஏற்று, திருமணம் செய்து வைப்ப‍தைதவிர உங்களுக்கு வேறு வழி யேதுமி ல்லை.
அதைவிடுத்து,
அவளுக்கு விருப்பம் இல்லாத (நீங் கள் பார்க்கும் பையனுடன்) திரு மண த்தை, நடத்தி, ஏதும் அறியாத யாரோ ஒரு அப்பாவியி (பையனி) ன் வாழ்க் கையை பலிகொடுப்ப‍து எந்த விதத்தில் நியாயம்?
த‌யவுசெய்து கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள்! உங்களுக்கே புரியும்.
சும்மா மேலோட்ட‍மாக படித்துவிட்டு போகாமல் சற்று ஆழ்ந்து சிந்தி யுங்கள்.உங்கள் பெண்ணின் காதலுக்கு நீங்களே மெருகேற்றி அவளை குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்தி, நல்ல‍ தொரு பெண்ணாக சமுதாயத்தில் அடையாளம் காட்டப் போகிறீர்களா?
அல்ல‍து
இல்லை இல்லை எனக்கு ஜாதி மதம் இனம் தான் முக்கியம். எனது பெண் காதலிக்கும் அந்த பையனை எங்களுக்கு பிடிக்க‍ வில் லை போன்ற அற்பக் காரணங்களை கூறி, வறட்டுக்கௌரவத்திற்காக அவளுக்கு விரும்பம் இல்லாத திரும ணத்தை நீங்கள் செய்து வைத் து, அவளை கள்ள‍க்காதலியாகவும், கொலைக்காரியாகவு இந்த சமுதாயத்தை விட்டே ஒதுக்கி வைக்க‍ ப்போகிறீர்களா?
எதுவாகினும் உங்கள் முடிவு உங்கள் கையில்

இது ஆண்பிள்ளையை பெற்றோருக்கும் பொருந்தும் வரிகளே!


January 20, 2013