ஜி தொலைக்காட்சி (தமிழ்) -ல் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை இணையத்தில் கண்டேன். சற்று என் மனம் கனத்து போனது. 7 ஆண்டுகாலமாக தனது மகள் ஒருவனை காதலிக்கிறா ள் என்ப தை இவளது பெற்றோர் தெரிந்திருந்தும், இவளை இவள து விருப்ப த்திற்கு மாறாக வேறு ஒருவனுடன் கட்டாயப்படுத்தி பதிவுத் திருமணம் செய்து வைத் துள்ளனர். பெண்ணை பெற்றோ ரே! கொஞ்சம் உங்களது கோப தாபங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, விதை 2விருட்சம் (நான்) கீழே குறிப்பிட்டுள்ள வரிகளை சற்று கவனமாக படித்தும், வீடியோ வை பார்த்து சிந்திப்பீர்! என்ற நம்பிக்கையில், எனது பதிவினை தொடர்கிறேன்.
பெண்ணை பெற்றோரே!
உங்கள் பெண் ஒருவனை காதலிக்கிறான் என்று உங்களுக்கு தெரிய வரும்போது, அவளது காத லை அங்கீகரியுங்கள். உங்கள் பெண் காதலிக்கும் அந்த காதலனை அழைத்து பேசி, அவனது குண நலன்கள் மற்றும் குடும்பத்தின் பின்னணி போன்றவற்றை விசாரித்து, நல்ல குடும்பம் நல்ல பையன் என்று தெரிந்தால், உங்கள் பெண் காதலிக்கும் அந்த பைய னையே உங்களது பெண்ணு க்கு மணம் முடித்து வையுங்கள்.
பெண்ணுக்கு கல்யாணம் செய்ய, அவளது ஜாதகத்தை எடுத்துக்
கொண்டு ஊர் ஊராக திரிந்து ஜோதி டர்களை தேடி அலைந்து, அவ ளுக்கு விரும்பம் இல்லாத திருமணத்தை நீங்கள் செய்து வைத்து, திருமணத்தி ற்குப்பின் பழையகாதலனை மறக்க முடியாமலும், கணவனுடனுன் ஒத் துப் போக முடியாமலும், உங்கள் பெண்ணின் மனம் குமுறிக் கொண் டே இருக்கும் அச்சமயத்தில் உங்கள து பெண் ணின் பழைய காதலனை பார்க்க நேரும்போது, திருமணத் திற்கும முன்பு இருந்த அந்தக் காத ல் கள்ளக்காதலாக உருமாறி, குடும்பத்தையே சீர்குலைக்கும் என் பதை நினைவில் கொள்ளுங்கள்.
சரி! உங்கள் பெண் காதலிக்கும் அந்த பையனை உங்களுக்கு பிடிக்க
வில்லையென்றால், குறைந்த பட்சம் 1 முதல் 2 ஆண்டுகள் வரையா வது அந்த திருமணத்தையாவது தள்ளிப்போடுங் கள். அதுவரை உங்கள் பெண் மாறுகிற ளா? அல்லது உங்களால் அவளை மாற் ற முடியுமா? என்பதை முயற்சித்துப் பாருங்கள்.
உங்கள் பெண் காதலிக்கும் அப்பையன் ஒரு அயோக்கியனாக இருந்து, அவனது பிடியில் இருந்து, உங்கள் பெண் விடுப ட்டு, தனது காதலையும் புதைத்து தனது மனதை மாற்றிக் கொள்ளு ம் பட்சத்தில், தாராள மாக நீங்கள் பார்க்கும் பையனை
யே (அந்த பையன் உங்கள் பெண்ணுக்கும் பிடித்திருக் க வேண்டும்) திருமணம் செய்து வையுங் கள். அப்பொழுது அவளது காதல் முழுவ தையும் தனது கணவன் மீதே செலுத்தி, இல்லறத்தை நல்லறமாக கொண்டு செல் வாள்.
அல்லது
உங்கள் பெண், அவளது காதலில் அழுத்த மாக இருந்து காதலனின் கரம்பிடித்தே தீருவேன் என்று இருக்கும் பட்சத்தில் அவளது காதலை ஏற்று, திருமணம் செய்து வைப்பதை
தவிர உங்களுக்கு வேறு வழி யேதுமி ல்லை.
அதைவிடுத்து,
அவளுக்கு விருப்பம் இல்லாத (நீங் கள் பார்க்கும் பையனுடன்) திரு மண த்தை, நடத்தி, ஏதும் அறியாத யாரோ ஒரு அப்பாவியி (பையனி) ன் வாழ்க் கையை பலிகொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?
தயவுசெய்து கீழே உள்ள வீடியோவை பாருங்கள்! உங்களுக்கே புரியும்.
சும்மா மேலோட்டமாக படித்துவிட்டு போகாமல் சற்று ஆழ்ந்து சிந்தி யுங்கள்.உங்கள் பெண்ணின் காதலுக்கு நீங்களே மெருகேற்றி அவ
ளை குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்தி, நல்ல தொரு பெண்ணாக சமுதாயத்தில் அடையாளம் காட்டப் போகிறீர்களா?
அல்லது
இல்லை இல்லை எனக்கு ஜாதி மதம் இனம் தான் முக்கியம். எனது பெண் காதலிக்கும் அந்த பையனை எங்களுக்கு பிடிக்க வில் லை போன்ற அற்பக் காரணங்களை கூறி, வறட்டுக்கௌரவத்திற்காக அவளுக்கு விரும்பம் இல்லாத திரும ணத்தை நீங்கள் செய்து வைத் து, அவளை கள்ளக்காதலியாகவும், கொலைக்காரியாகவு இந்த சமுதாயத்தை விட்டே ஒதுக்கி வைக்க ப்போகிறீர்களா?
எதுவாகினும் உங்கள் முடிவு உங்கள் கையில்
இது ஆண்பிள்ளையை பெற்றோருக்கும் பொருந்தும் வரிகளே!
No comments:
Post a Comment