பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 11, 2013

பசுமையான நிணைவுகள்




'அந்தநாட்கள் மீண்டும் வந்திடாதோ?
" OLD IS GOLD "


'அந்தநாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

WE ARE AWESOME !!!!
OUR LIFE IS A LIVING PROOF

·        தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
·         எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
·         கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
·         புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
·         சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
·         பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
·         நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
·         தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
·         ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
·         அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
·         காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

·         சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
·         உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
·         எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
·         எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
·         அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
·         உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
·         எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை

 உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

·         எங்களிடம் செல்போன் டிவிடிப்ளை ஸ்டேஷன்எக்ஸ்பாக்ஸ்வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர்நெட்சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
·         வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

·         எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
·         உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
·         நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
·         இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
·         இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

கோபம் வந்தால் எப்படி கட்டுப்படுத்துவது...



இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..

அதற்கு பலவழிகள் உண்டு. அவை,

* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள். 

* சிறிது நேரம் மெளனமாக இருங்கள். 

* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள். 

* பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள். 

* அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள். 

* கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். 

* சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள். 

* செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள். 

* உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் சொல்லிப்பாருங்கள். 

* உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள். 

* எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 1000 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்..100 எண்ணிக்கையை கடந்த உடன் உங்கள் மனநிலை சற்று மாறுவதை காணலாம். 

* இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்....

வேலை தேட கைகொடுக்கும் இணையதள‌ம்.


. ·
வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!
அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.
நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன.இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ,குணா பட கமல் பாட்டு போல கொஞ்சம் மானே தேனே போட்டு கொள்ளுங்கள் என்று எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.
பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
நிற்க இந்த பதிவு நல்ல பயோடட்டாவை உருவாக்குவது எப்படி என்று வழிகாட்டுவதற்கானது அல்ல;அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான ரெஸ்யும் பேக்கிங்கை அறிமுகம் செய்வதற்கானது.
பக்காவான ,செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து.அதையும் சுலபமாக,உடனடியாக செய்து தருகிறது.
இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை.அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம் ,கல்வி தகுதி,பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான்.அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன.
பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம்.இது முதல் படி தான்.இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்.இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌
ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம்.வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும்.பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து.
வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி;http://www.resumebaking.com/

பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்:




முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்து போனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால்,  பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

ஆனால், இன்று -நாடு பொருளாதார வளர்ச்சி கண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில்- நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலோர் இரண்டு குழந்தைகள் மட்டுமே திட்டமிட்டுப் பெற்றுக்கொள்கின்றனர். சிலருக்கு ஒன்றே ஒன்று போதும் என்ற எண்ணம்.

பொருளாதார நெருக்கடி பற்றிய அச்சம், குழந்தை வளர்ப்பிலே முளைத்துள்ள அவநம்பிக்கை, வாழ்க்கையை அனுபவிக்க அதிகக் குழந்தைகள் தடையாகிவிடுவர் என்ற தவறான எண்ணம்,  பிரச்சினைகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள துணிவின்மை, எல்லாவற்றையும்விட உலகமயமாக்கல் பெற்றெடுத்த நுகர்வுக் கலாசாரம் முதலான பிற்போக்கு அம்சங்களே ஒற்றைக் குழந்தை நாகரிகத்திற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

வாரிசுகள் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாகச் சுருங்கிவிட்டதால் பெற்றோரின் மொத்தப் பாசமும் ஒன்றிரண்டு குழந்தைகள் மீது மழையாகப் பொழிகிறது. பெற்றோரின அன்பு மழையில் குழந்தைகள்  குளித்து, திக்குமுக்காடுகின்றனர். செல்லமோ செல்லம். கண்டிப்பு தேவைதான்; சிறிது பாசமும் காட்டுங்கள் என்று சமூக ஆர்வலர்கள் உபதேசித்த நிலை மாறி, பாசம் காட்ட வேண்டியதுதான்; கொஞ்சம்  கண்டிப்பும் தேவை என்று உபதேசிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

இளைய தலைமுறை பெற்றோர்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள்; பிள்ளைகள் கேட்பதையெல்லாம் தகுதிக்கு மீறி வாங்கிக்கொடுக்கிறார்கள். ஏன்? எதற்கு? என்று கேட்பதுகூட இல்லை. அல்லது அப்படி கேட்கத் தயங்குகிறார்கள். எங்கே மகன், அல்லது மகள் நம்மை மதிக்கமாட்டார்களோ! நம்மீது கோபப்பட்டுவிடுவார்களோ என்ற பயம்.

பிள்ளைகள் எங்கே போகிறார்கள்; யாருடன் பழகுகிறார்கள்; வீட்டில் சாப்பிடவோ நேரத்திற்கு உறங்கவோ வருவதில்லையே, ஏன்; ஒழுங்காகப் படிக்கிறார்களா? என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள்; அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் சண்டைபோட்டு வாங்கும் பாக்கெட் மணியை என்ன செய்கிறார்கள்... என்றெல்லாம் விசாரிப்பதை, இளைய தாய் அல்லது தந்தை அநாகரிகமாகக் கருதுகின்றனர்; பிள்ளைகள் இந்த  விசாரணையை அவமானமாகப் பார்க்கின்றனர்; தங்கள் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்று எண்ணுகின்றனர்.

இன்றைய பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுவதும் கொந்தளிப்பதும் பெற்றோர்களின் இந்தக் கண்டு கொள்ளாமைக்கு ஒரு காரணம். இன்றைய புதிய தலைமுறைக்கு அறிவுரை என்றாலே நஞ்சு. ஏன் மதிப்பெண் குறைந்து போய்விட்டது என்று கேட்டுவிட்டால், தற்கொலை முயற்சி, தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. ஆசிரியர் திட்டிவிட்டால் பழிவாங்கும் வெறி. நினைத்ததை அனுபவிக்க  முடியாவிட்டால், பார்ப்பவர்மீதெல்லாம் எரிச்சல். தவறான உறவுகள், நடத்தைகளைக்கூட யாரும் கண்டித்துவிடக் கூடாது என்ற இறுமாப்பு.முடிவு, பொறுப்பற்ற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. நிதானமோ விவேகமோ இல்லாத, வேகம், சுயநலம், கட்டுப்பாடற்ற போக்கு ஆகிய விரும்பத் தகாத குணங்கள் கொண்ட ஒரு படை வளர்ந்துவிட்டது.  மூத்தவர்கள் இவர்களின் நிலை கண்டு அஞ்சிக்கொண்டிருக்க,  இவர்களின் வாரிசுகன் எப்படியிருப்பார்களோ என்ற கலக்கம் சீர்திருத்தவாதிகளை வாட்டிக்கொண்டிருக்கிறது.

செலவினங்கள்

தேவைக்காகச் செலவு செய்வது ஒரு ரகம்; தகுதியை உயர்த்திக் காட்ட, நண்பர்களைத் திருப்திப்படுத்த செய்யப்படும் ஆடம்பர வீண்செலவு இன்னொரு ரகம். இன்றைய பிள்ளைகளின் செலவினங்கள் இரண்டாம் ரகம்.

அலைபேசி, அவசரத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி. அலைபேசியில் சாதாரணமானது முதல் சிறப்பம்சங்கள் நிறைந்த உயர்தரமானதுவரை தொகைக்கேற்ப பல ரகங்கள்  கிடைக்கத்தான் செய்கின்றன. அதற்காக 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள பிளாக்பெர்ரிதான் வேண்டும் என்று பிள்ளைகள் அடம்பிடிக்கலாமா?

அலைபேசியில், பேசப்பேச விநாடிக்கு விநாடி பணம் செலவாவதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. தேவையோ அவசியமோ இல்லாமல் அரட்டையடிப்பதற்கெல்லாம் அலைபேசியைப்  பயன்படுத்திவிட்டு, மாதந்தோறும் ரூ.800க்கும் 1000க்கும் ரீசார்ஜ் செய்யப் பெற்றோரிடம் பணம் கேட்பது என்ன நியாயம்? தவறான பயன்பாடுகள் வேறு.

வீட்டில் அறுசுவை உணவு காத்திருந்தாலும், உணவகங்களில் சாப்பிடுவதை விரும்பும் பிள்ளைகளை என்ன சொல்ல? அரும்பாடுபட்டுச் சமைத்து வைத்துவிட்டுப் பிள்ளையை எதிர்பார்த்திருக்கும் தாய்க்கு இவன் சொல்லும் பதில், நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டேன். ஏன்? என்று கேட்கக்கூடாது.  கேட்டுவிட்டால் வீட்டில் ஒரே களேபரம்.

ஹோட்டல் உணவு பணத்திற்கு மட்டுமல்ல; உடல் நலத்திற்கும் கேடு.அங்கு உபயோகப்படுத்தப்படும் எண்ணெய், பொடிகள், தரமற்ற பொருட்கள் எல்லாம் சேர்ந்து இளமையிலேயே முதுமையை  உண்டாக்கிவிடும். இது தேவைதானா?

மேற்கத்திய உணவு வகைகளெல்லாம் நம் நாட்டு சுகாதார உணவுகளுக்கு முன்னால் நிற்காது. அந்த உணவுகளால் காசுதான் கரையுமே தவிர வயிறும் நிறையாது; ஊட்டமும் கிடைக்காது. போதாக்குறைக்கு, வயிற்றுக்குக் கேடுவேறு.

பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்தில் இல்லாத புதுப்பழக்கம்; மேற்கத்திய காலாசாரத்திற்குத் தவறான வழியில் பிறந்த சவலைக் குழந்தை. இன்று பிள்ளைகள் தங்களின் பிறந்தநாளை வெகு விமரிசையாகக் குடும்பத்துடன் கொண்டாடுவது மட்டுமன்றி, நண்பர்களின் பிறந்த நாளுக்காகச் சக்திக்கு மீறி பரிசுப் பொருட்களை அன்பளிக்கின்றனர்.

பரிசுப் பொருளாவது உபயோகமானதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. உயர்ரக மது பாட்டில்கள், கேமராக்கள், ஆபாச புத்தகங்கள் என மனிதனைக் கெடுக்கும் நச்சுப் பொருட்கள். பொதுவாக பிறந்தநாள்,  புத்தாண்டு தினம், காதலர் தினம் போன்ற களியாட்டங்களில் நண்பர்கள் ஒன்றுகூடிவிட்டாலே குடியும் கும்மாளமும்தான். இந்த அநியாயத்திற்கும் பெற்றோர் மறுக்காமல் பணம் தர வேண்டுமாம்!

POCKET MONEY

‘கைச்செலவுக்கு’ (Pocket Money) என்ற பெயரில் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தரும் பணம்தான் எல்லாத் தவறுகளுக்கும் பெரும்பாலும் காரணமாகிறது. பெற்றோரின் வருவாய்க்குச் சம்பந்தமில்லாத  தொகையைப் பிள்ளைகள் கேட்பதும் அதைப் பெற்றோர்கள் வழங்குவதற்காகக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் ஒரு பகுதியைச் செல்லமாக ஒதுக்குவதும் இப்போது நாகரிகமாகிவிட்டது.

ஏதோ மாத ஊதியம் வழங்குவதைப் போன்று ஐயாயிரம், பத்தாயிரம் என்று பாக்கெட் மணி தரக்கூடிய பெற்றோர்கள், பிள்ளைகளைத் தாங்களே படுகுழியில் தள்ளுகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்போது  நீங்கள் காட்டும் செல்லம், நாளை உங்கள் செல்வங்களை மீளாத் துயரத்தில் சிக்கவைத்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!

இவ்வாறு தகுதிக்கு மிஞ்சி செலவழித்துப் பழகிவிடும் பிள்ளைகள், ஒரு கட்டத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லி பணம் பறிக்கும் நிலைக்கு  வந்துவிடுகிறார்கள். பணம் கேட்க முடியாத நிலை ஏற்படும்போது,  சொந்த வீட்டிலேயே திருட ஆரம்பித்துவிடுகிறார்கள். தெரிந்தும் இதைக் கண்டிக்காத பெற்றோர்களும் இருக்கிறார்கள். நூறு, இருநூறு என்று ஆரம்பிக்கும் இத்திருட்டு ஆயிரக்கணக்கை எட்டிவிடுவதுண்டு.

பெற்றோரின் அனுமதியும் இசைவும் இன்றி வீட்டில் ஒரு ரூபாய் எடுத்தாலும் அது திருட்டுதான்; ஆயிரம் எடுத்தாலும் திருட்டுதான். சொந்த வீட்டில் குறைந்த தொகையில் தொடங்கும் திருட்டு உறவினர் வீடு, நண்பர்கள் வீடு, மாணவர் விடுதி என எல்லா இடங்களிலும் தொடர வாய்ப்பு உண்டு. பெற்றோர்கள் முளையிலேயே இப்பழக்கத்தைக் கிள்ளி எறிய வேண்டும்.

தீர்வுகள்

பிள்ளைகள் புரிந்துகொள்ளாமலும் விவரமில்லாமலும்  நடந்துகொள்வதற்கு ஒருவகையில் பெற்றோர்களே காரணம். சிறுவயதிலிருந்தே குழுந்தைகளுக்குச் சில ஒழுக்க நடைமுறைகளைச் சொல்லி வளர்க்க வேண்டும்.

இதனால்தான், நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருவருக்கு இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்:

உன் பிள்ளைக்கு ஒழுக்கம் கற்பிப்பாயாக! அவனுக்கு என்ன ஒழுக்கம் சொல்லிக்கொடுத்தாய்; என்ன கல்வி கொடுத்தாய் என உன்னிடம்  (மறுமையில்) விசாரிக்கப்படும். அவ்வாறே, உன் பிள்ளை உன்னிடம்  எப்படி நடந்துகொண்டான்; உனக்கு என்ன நன்மை செய்தான் என்று அவனிடம் விசாரிக்கப்படும். (பைஹகீ)

முதலில் பணத்தின் அருமையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.  தந்தை பிள்ளையிடம் நட்போடு பழகி, ஒரு பத்து ரூபாய் சம்பாதிக்கத் தான் படும் பாட்டைச் சொல்லிக் காட்ட வேண்டும்; அப்பணம் வீணடிக்கப்படும்போது தனக்கு ஏற்படும் வலியைப் புரிய வைக்க வேண்டும். நம் கஷ்டம் நம்மோடு போகட்டும்; குழந்தைகளுக்குத் தெரிய வேண்டாம் என்று பெற்றோர்கள் நினைப்பதுதான் முதல் தவறே.  திட்டாமல், சபிக்காமல், பக்குவமாக, நளினமாக எடுத்துச்சொல்லும்போது எந்தப் பிள்ளையும் புரிந்துகொள்வான்.

பணத்தைத் தேவைக்குமேல் செலவழிப்பது -அதாவது விரயம் செய்வது- எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்கிக் கூற வேண்டும். அவ்வாறே, சிக்கனத்தின் சிறப்பையும் சேமிப்பின் அவசியத்தையும் உள்ளத்தில் பதிக்க வேண்டும்.

நல்லடியார்களின் நற்பண்பு குறித்துத் தெரிவிக்கும்போது பின்வருமாறு அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

அவர்கள் செலவு செய்தால் விரயம் செய்யமாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள்; அதற்கு இடைப்பட்ட (நடு)நிலையாகவே அ(வர்களின் செலவான)து இருக்கும். (25:67)

மற்றொரு வசனம் இவ்வாறு கூறுகின்றது:

உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை (இறைவன்) நேசிப்பதில்லை. (7:31) 

நிச்சயமாக விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். (17:27) 

சேமிப்பின் அவசியம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த வீட்டாரிடம் பேரீச்சம்பழம் (சேமித்து) வைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் பட்டினி கிடக்கமாட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பணம் கையாளும் முறை

அடுத்து நிதியைக் கையாளும் முறையையும் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் செலவு செய்து அழித்துவிடுவது பெரிதன்று; வேண்டிய தேவைகளுக்கு மட்டுமே செலவழிப்பதும் வேண்டாதவற்றைத் தவிர்த்து விடுவதும்தான் பெரிய சாதனை ஆகும்.

பெருமைக்காகச் செலவழிக்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. நண்பர்களும் உறவினர்களும் ஆச்சரியப்படும் அளவுக்குச் செலவு செய்வதால் யாருக்கு என்ன நன்மை? வீண் பிதற்றலுக்குத்தான் இது உதவுமே தவிர, உருப்படியான எந்தப் பயனும் இதனால் விளையப்போவதில்லை. அதே நண்பர்களும் உறவினர்களும் முன்னால் போகவிட்டுப் பின்னால் என்ன விமர்சனம் செய்வார்கள், தெரியுமா? தலைக்கனம் பிடித்தவன்; ஊதாரி; உருப்படாதவன் என்றுதான் உங்களை அவர்கள் எடைபோடுவார்கள்.

நபிமொழி ஒன்றைப் பாருங்கள்:

உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள்; அதில் விரயமோ பெருமையோ (பகட்டோ) கலந்துவிடாமல் இருக்கும்வரை. (இப்னுமாஜா) 

இருவரின் உணவு மூவருக்குப் போதும்; மூவரின் உணவு நால்வருக்குப் போதும் (மனம் இருந்தால்). (புகாரீ)

இந்தியாவில் நுகர்பொருள் செலவின புள்ளி விவரக் கணக்கு (2007-08) ஒன்று கூறுவதைப் பாருங்கள்:

இந்தியர் ஒருவர் செலவழிக்கும் 100 ரூபாயில் 22 ரூபாய் மட்டுமே அத்தியாவசிய செலவாகும்; 48 ரூபாய் பகட்டுச் செலவுகள் ஆகும். கல்விக்கு ரூ. 2.60; மருத்துவம் ரூ. 5.70 செலவிடப்படுகிறதாம்; பகட்டுச் செலவுகளில் ஐஸ்கிரீம் வகைகளுக்கு மட்டும் ரூ. 10.50 செலவு செய்கின்றனராம்!

நுகர்வுக் கலாசாரம், மேலைநாடுகளைப் பின்பற்றி அநியாயத்திற்குப் பிள்ளைகளை அலைக்கழித்து வருகிறது. ஊடகங்களில் செய்யப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து இளைய தலைமுறை சொக்கிப்போகிறது; ஏமாந்துபோகிறது. விளைவு பெற்றோரின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது.

விளம்பரத்தில் எதைக் காட்டினாலும் அதை உண்மை என்று நம்பும் பேதமைதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடே. அவர்கள் கோடிகோடியாய் சம்பாதிப்பதற்காகச் சாமானிய மக்களை விளம்பரத்தால் கிறங்கவைக்கிறார்கள். விளம்பரங்கள் போலியானவை என்பதைப் புரியாத மக்கள் பணத்தை விரயம் செய்கிறார்கள்.

ஆக, பணத்தின் அருமை, அதைச் சம்பாதிப்பதில் சிந்தும் வியர்வை, அதைக் கையாளும் முறை, சிக்கனத்தின் தேவை, சேமிப்பின் அவசியம், விரயத்தின் விளைவு, பகட்டின் படுதோல்வி போன்ற எதார்த்தங்களைச் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்; செய்முறைப் பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்படும் நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்.

ஏன், பையன் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுகூட, அவனின் வரவு-செலவு கணக்கைப் பெற்றோரிடம் அவன் ஒப்படைப்பதே அவனது எதிர்காலத்திற்கு நல்லது.

தயவு செய்து இதையெல்லாம் தாழ்வு என்று கருதாதீர்கள். பிள்ளைகளே! நிச்சயம் இதுதான் உயர்வுக்கு வழிவகுக்கும்.

March 9, 2013

சில எளிய தியானப் பயிற்சிகள்



தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.

ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.



முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.

முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். 
முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.

3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.

4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........

5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.

6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.

7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.

8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.

இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம். இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். 

மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். 

மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.

March 8, 2013

வளைகுடாவிலிருந்து இந்தியாவுக்கு செல்பவர்கள் 7500 ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல கூடாது


NRI’s. Gulfதுபாய் : வளைகுடாவில் பணி புரியும் இந்தியர்கள் விடுமுறைக்கு இந்தியா செல்லும் போது அதிக அளவு பணம் எடுத்து செல்ல வேண்டாம் என்று வளைகுடாவில் உள்ள இந்திய தூதகரங்கள் அறிவுறுத்தியுள்ளன.
ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு செல்லும் வளைகுடா வாழ் இந்தியர்கள் அதிக அளவு பணம் எடுத்து செல்வதால் சில சமயம் இந்திய விமான நிலையங்களில் பிரச்னை ஏற்படுகிறது என்றும் இதை தவிர்க்க அதிக பணம் எடுத்து செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வறிக்கையின் படி இந்திய குடிமக்கள் மாத்திரம் இந்தியாவுக்கு செல்லும் போதோ அல்லது இந்தியாவிலிருந்து திரும்பும் போதோ அதிகபட்சம் 7,500 ரூபாய்கள் எடுத்து செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களான NRIக்கள் சட்டப்படி இந்திய பணத்தை எடுத்து செல்ல கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்தியாவுக்கு செல்பவர்கள் அதிகபட்சம் 5,000 அமெரிக்க டாலர்களுக்கு இணையான அந்நிய செலவாணி (ஓமன் ரியால், அமீரக திர்ஹம், சவூதி ரியால், குவைத் திர்ஹம்) எடுத்து செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் செக், டிராப்ட் என எல்லாம் சேர்த்து அதிக பட்சம் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு இணையான வெளிநாட்டு கரன்சியை எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்


உலக மகளிர் தின நல்வாழ்த்துகள் 

இவள் எனக்கு தாய், 
இளம் வயதில் தோழியானால் 
பருவ வயதில் காதலியானால்-பிறகு 
துணைவியானால், மீண்டும் 
என் குழந்தைக்குத் தாய் - பிறகோ 
என்னைத் தாங்கும் தாயாக 
என்னிடம் சில நேரங்களில் 
குழந்தையாக, இப்படி 
பல பரிமாணங்களில் நம்முடன் வாழும் 
இந்த "பெண்மையைப் போற்றுவோம் " <3

<3 @[100002143090351:2048:Ragz] <3

















இவள் எனக்கு தாய்,
இளம் வயதில் தோழியானால்
பருவ வயதில் காதலியானால்-பிறகு

துணைவியானால், மீண்டும் 

என் குழந்தைக்குத் தாய் - பிறகோ
என்னைத் தாங்கும் தாயாக
என்னிடம் சில நேரங்களில்
குழந்தையாக, இப்படி
பல பரிமாணங்களில் நம்முடன் வாழும்
இந்த "பெண்மையைப் போற்றுவோம் " ♥

March 7, 2013

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்



அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. 


2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான். 


3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை. 


4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும். 


5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும். 


6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார். 


7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும். 


8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.


9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும். 


10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள். 


11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.


12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது. 


13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். 


14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு 
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும். 


15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.


16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.


17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். 


18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.


19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.


20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது. 


21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.


22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான். 


23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.


24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும். 


25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான். 


26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.


27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.


28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள். 


29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.


30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது. 


31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.


32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.


33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை. 


34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும். 


35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.


36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.


37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்

. 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.


39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள். 


40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.


41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.


42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.


43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.


44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும். 


45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.


46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.


47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன். 


48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான். 


49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும். 


50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும். 


51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான். 


52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும். 


53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான். 


54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும் 


55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.


56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.


57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.


58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.


59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.


60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்












1.செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ 
பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் 
பார்க்கின்றான்.3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் 
ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை 
நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை 
அரவணைக்கும் வீடேயாகும்.

5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் 
ஷெய்த்தானின் தன்மையாகும்.

6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை 
அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, 
அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் 
குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை 
இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.

9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் 
இறைவனின் சாபம் உண்டாகட்டும். 

10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை 
கொடுத்துவிடுங்கள்.

11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.

12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது 
அவர்களுக்கு 
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் 
ஆகும். 

15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை 
நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் 
நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் 
இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.

16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, 
தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற 
நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.

17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை 
கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.

20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் 
மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க 
முடியாது.


21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது 
மிகச்சிறந்த தர்மமாகும்.


22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை 
தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.


23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.


24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். 
எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் 
அதனை அவர் நீக்கி விடட்டும்.


25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து 
விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது 
ஒளியை போக்கி விடுவான்.


26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் 
மீதிருக்கிறது.


27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.


28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து 
கொள்ளுங்கள்.


29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.


30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். 
ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் 
இருக்கக் கூடாது.


31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக 
இருக்கும்.


32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. 
மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே 
வீரன் ஆவான்.


33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.


34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.


35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.


36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை 
நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.

37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து 
கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் 
பொறுப்பேற்றுக் கொள்கிறேன்
38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.


39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.


40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.


41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.


42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.


43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை 
விடச் சிறந்தது.


44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. 
உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.


45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் 
என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் 
முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.


47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க 
வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.


48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் 
கொடுப்பது தான்.


49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.


50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.


51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.


52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.


53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு 
இறைவன் அருள் செய்கிறான். 

54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்


55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு 
தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான 
நற்குணமும்தான்.


56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை 
குறைக்கும்.


57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. 
போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.


58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் 
விளக்கத்தை அளிப்பான்.


59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு 
மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.


60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை 
வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை 
துன்பத்தில் ஆழ்த்திடுவான்