பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 8, 2013

வளைகுடாவிலிருந்து இந்தியாவுக்கு செல்பவர்கள் 7500 ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல கூடாது


NRI’s. Gulfதுபாய் : வளைகுடாவில் பணி புரியும் இந்தியர்கள் விடுமுறைக்கு இந்தியா செல்லும் போது அதிக அளவு பணம் எடுத்து செல்ல வேண்டாம் என்று வளைகுடாவில் உள்ள இந்திய தூதகரங்கள் அறிவுறுத்தியுள்ளன.
ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு செல்லும் வளைகுடா வாழ் இந்தியர்கள் அதிக அளவு பணம் எடுத்து செல்வதால் சில சமயம் இந்திய விமான நிலையங்களில் பிரச்னை ஏற்படுகிறது என்றும் இதை தவிர்க்க அதிக பணம் எடுத்து செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வறிக்கையின் படி இந்திய குடிமக்கள் மாத்திரம் இந்தியாவுக்கு செல்லும் போதோ அல்லது இந்தியாவிலிருந்து திரும்பும் போதோ அதிகபட்சம் 7,500 ரூபாய்கள் எடுத்து செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களான NRIக்கள் சட்டப்படி இந்திய பணத்தை எடுத்து செல்ல கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்தியாவுக்கு செல்பவர்கள் அதிகபட்சம் 5,000 அமெரிக்க டாலர்களுக்கு இணையான அந்நிய செலவாணி (ஓமன் ரியால், அமீரக திர்ஹம், சவூதி ரியால், குவைத் திர்ஹம்) எடுத்து செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் செக், டிராப்ட் என எல்லாம் சேர்த்து அதிக பட்சம் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு இணையான வெளிநாட்டு கரன்சியை எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: