அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக்க வேண்டும்! அவர்கள் விரும்பாத மாதிரிதான் நம் நடவடிக்கைகள் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது அவசியம்.
பெண்கள் ஆண்களிடம் விரும்பாதவை என்ன என்று தெரிந்துகொண்டால் அவர்கள் விரும்புவது என்ன என்று எளிமையாகக் கண்டுபிடித்துவிடலாம். எப்படி!! சுருக்கு வழியாக இருக்கிறது அல்லவா? பார்ப்போமே..
1. நேரத்தை எப்படி சரியாக கணக்கிட்டு அந்த நேர வேலைகளை சரியாக முடிக்கவேண்டும்!! அப்படியில்லாமல் உங்கள் மனம் கவர்ந்த பெண்ணை எப்போதும் காக்க வைக்கிறீர்களா? நிச்சயம் இது சந்தோசத்தைத் தராது..அதன் பின் கேள்விகளும்.. விளக்கங்களும் ...சண்டைகளும்.. சரியா வராது. நீங்கள் ஏதோ முக்கிய வேலையைக் காரணமாகச் சொல்ல என்னைவிட அது முக்கியமா? என்று அம்மணி கேட்க .. இதுக்குப் பிறகு நாம என்னத்தை சந்தோசமாக இருப்பது?
இதே பிரச்சினை அலுவலகத்தில்,நண்பர்களிடம் என்று பரவினால் எந்த இடத்திலும் நல்லபடியா சந்தோசமா இருக்கமுடியாது. மொத்த விசயங்களும் கொலாப்ஸ் ஆகி விடும்.
2.சும்மா சாக்குப் போக்கு சொல்லியே காலத்தை ஓட்டுபவரா.. ஒரு வேலையைச் செய்யாமல் ”மறந்து விட்டேன்” என்று நிற்பவரா? கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். சின்னச்சின்ன விசயங்களில் ஆரம்பிக்கும் மறதி மிகப்பெரிய பிரச்சினைகளில் உங்களை மாட்டிவைக்கும். சிலபேர் அவர்கள் வேலைகளை மறக்காமல் செய்துவிட்டு மனைவியுடன் சினிமா செல்ல வேண்டியதையோ அல்லது மனைவி சம்பந்தமான முக்கிய விசயங்களையோ மறந்துவிடுவார்கள். இது அவர்கள் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையின்மை, அலட்சியப்போக்கு என்றே கருதப்படும்!!
உங்கள் காதலியின் பிறந்த நாளை மறப்பது போன்றவை மன்னிக்க முடியாத குற்றங்கள்!!
3.சூழ்நிலைக்கேற்றவாறு இருக்கவேண்டும். காதலியுடன் கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்த பொழுதை மிகுந்த சந்தோசத்துடன் கழிக்கவேண்டும்! பிரச்சினைகள் எல்லோருக்கும் உள்ளதுதான். இது பெண்களுக்கும் தெரியும். ஆனாலும் சந்தோசமான, மகிழ்ச்சியான தருணங்களையே அவர்கள் விரும்புவார்கள். அதுவும் முன்னேற்பாடுடன் ஜோக்குகள், விளையாட்டுக்கள் என்று அசத்தினீர்களென்றால் அவ்வளவுதான். ஆள் ஃபிளாட் ஆகிவிடுவார்கள்!!
4.உடை அணிவது முடிஅலங்காரம் ஆகியவற்றில் நாம் அக்கறையுடன்இருக்கவேண்டும். காதலியின் தாத்தாவின் பிறந்த நாள் என்று வைத்துக்கொள்வோம். அப்போதும் அவருக்கு ஒரு பரிசு வாங்கிச்செல்வது, (முடிந்தால் உங்க ஆளுக்கும் ஒன்று.. சும்மா ஒரு சாக்குத்தானே...) நல்ல உடை அணிந்து செல்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். தாத்தாதானே என்று ஏனோதானோ என்று உடையணிந்தோ, பரிசுப்பொருள் இல்லாமலோ செல்லக்கூடாது. அது அங்குள்ளோர்களுக்கு முக்கியமாக உங்கள் காதலிக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்!! நீங்கள் உங்கள் காதலியால் பெரிதும் ரசிக்கப்படும் முக்கிய நபர் என்பதை மறக்கவேண்டாம்.
5.விசயங்களை அனாவசியமாக மறைப்பது, அப்போதைக்கப்போது சொல்லாமல் மறைப்பது மிகவும் பிரச்சினையை உண்டு பண்ணும். உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது. நீங்கள் நிறைய விசயங்களை மறைத்துவைத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நம் சொந்தக்காரர்கள்( கோள் சொல்வதற்கென்றே இதில் சிலர் இருப்பர்) , நண்பர்கள் மூலம் தெரியும்போது நீங்கள் எந்தச்சமாதானமும் சொல்ல முடியாது. முழுப்பொய்யராகக் காட்சியளிக்கும் நிலைக்குத் தள்ளப் படுவீர்கள்!! அப்புறம் நாம் சொல்லும் சமாதானங்கள் எடுபடுமா என்ன!!” நீங்கள் அவ்வளவு பெரிய விசயத்தையே மறத்தவர்... உங்களை எப்படி நம்புவது?” என்றுதான் கேட்பார்கள்.
6.மிக முக்கியமானது. நாம் நமது பக்கவாட்டிலோ, பின்புறமோ ஒரு பொருள் அசைந்தால்கூட சட்டெனத் திரும்பிப் பார்ப்போம். அவ்வளவு கூரிய திறன் நமக்கு. ஆனால் காதலி/மனைவி அதைத் தவறாக( மிகப்பெரிய தவறாகக்) கருதுகிறார்கள்... அந்த அசையும் ஆசாமி நிறைய நேரங்களில் ஒரு பெண்ணாக அமைந்து விடுவதால்!!!..ஹி.. ஹி...ஹி..இதை உடனே சொல்ல மாட்டர்கள். கவனித்துக்கொண்டே இருப்பார்கள். நல்லா ருசுவானவுடன் கேட்பார்கள். நாம முழிக்கவேண்டியதுதான். ”ஒரு பொண்ணைக்கூட விடாம சைட் அடிக்கிறீங்க.. அதுவும் நான் பக்கத்தில் இருக்கும்போதே...” என்று கேட்கும் கேள்விக்கு நாம் ஒரு பதிலும் சொல்ல முடியாது. அதுவும் காதலியென்றால் .... அவ்வளவுதான்!!!
பார்ப்பதற்கே இப்படியென்றால் பிற பெண்களைப் பாராட்டிப் பேசினீர்களென்றால் சங்குதான்.........

No comments:
Post a Comment