பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 23, 2013

பேரீச்சம்பழத்தில் என்ன பயன்?


தினமும் சாப்பிடக்கூடிய பேரீச்சம்பழத்தில் என்ன பயன் இருக்குதுன்னு உங்களுக்குதெரியும்?. சாதாரணமா நினைச்சிடாதீங்க பேரீச்சம்பழத்தைபேரீச்சம்பழம்இரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்த விருத்தி செய்யும்எலும்புகளை பலப்படுத்தும்,இளைப்பு நோயைக் குணப்படுத்தும் மேலும் இதயநோய் வராமல் தடுக்கும். 


மலச்சிக்கல்: 
பேரீச்சம் பழம் மலச்சிக்களை போக்கக்கூடிய சிறந்த உணவாகும்மலச்சிக்களால்அவதிபடுபவர்கள் பேரீட்சைபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கள்பிரச்சனைகள் தீரும்மலச்சிக்களை போக்ககூடிய பேரீட்சைபழத்தை சாப்பிடவிரும்பினால் தண்ணீரீல் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து விட்டு பின்னர்பேரீச்சம் பழத்தை சாப்பிடவேண்டும்ஒரு நாள் ஊற வைத்துவிட்டு சாப்பிடும்போதுதான் பேரீச்சம் பழத்தின் முழுபலனையும் பெறமுடியும்அதிக நார்ச்சத்துகொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும்.
குடல் நோய்கள்:
எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம்உடலை சக்தியுடன்வைத்துக்கொள்ள உதவும் சிறந்த உணவாகும்தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டுவருபவர்கள் புத்துணர்வுடன் இருப்பதை காணலாம்தொடர்ந்து பேரீச்சம் பழம்உண்பவர்களுக்கு குடல் நோய்கள் மற்றும் இதயம் சம்பந்தமான அனைத்துநோய்களும் குணமடையும்வயிறு மற்றும் குடல் சம்பந்தமான அனைத்து நுண்கிருமிகளும் வெளியேறும். 
பெண்களுக்கு:
பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும்இரத்தசோகையை தவிர்த்திடும்நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதைநீக்கி உண்பது நல்லதுபழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம்.பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரிஇரவு உண்ணலாம்பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களைஅரைத்து கலந்து உபயோகிக்கலாம்பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வரஎடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
சளி மற்றும் இருமல்: 
பேரீச்சம் பழம் சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்தாக குழந்தைகளுக்குபயன்படுகிறதுபேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சிஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளிஇருமல் குணமாகும்.நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் அதிக பலம் இழந்துகாணப்படும்இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவைஇவர்கள் தினமும்ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையானசத்துக்கள் கிடைப்பதோடு எலும்பும் பலப்படும்.

Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு!




சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது . அவர்வைத்திருக்கும் மொபைல்க்கு தேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள்வந்துள்ளதுஇவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது.வீட்டில் சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள்என பயந்து இவர் வேறு எண் மாற்றி விட்டார் . ஆனால் சில நாட்கள் கழித்துமீண்டும் அதே என்னில் இருந்து பிரச்னை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால்,SMS வருகிறது என குழம்பி போனார்என்னிடம் வந்து என்ன செய்யலாம் எனகேட்டார் . அவருக்காக எனது நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சிதகவல்கள் கிடைத்தது.
இவர் வழக்கமாக ரீசார்ஜ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை குடுத்து விட்டு E.Cபண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர்செய்த செயல்தான் இது .இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சிலவழிமுறைகள் .
முடிந்த வரை ரீ-சார்ஜ் கார்ட் வாங்கி ரீ –சார்ஜ் செய்யுங்கள் .
E.C 
செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில்மட்டும் செய்யவும் .
இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்யசொல்லவும்
பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரைசொல்லாதிர்கள்.
தெரியாத நபர்களிடம் நம்பர் தராதீர்கள்.
உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் குடுக்ககூடாது என சொல்லுங்கள்.
தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் . அப்படி அனுப்பினால்அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.
WRONG CALL 
வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள் . அடிகடி வந்தால் வீட்டில்உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையான ஆண்களை பேச சொல்லுங்கள்
பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள்நீங்கள்அனுப்பும் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது.
மொபைலை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM கார்டு மற்றும் Memory Cardஇரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும்.
மெமெரி கார்ட்களில் பாடல் பதிவு செய்ய கொடுப்பதாக இருந்தால் நன்றாக தெரிந்தஇடத்தில் மட்டும் கொடுக்கவும் . இல்லை எனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள்,வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள் .
இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்............

நீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா ? வாங்க பழகுவோம்


http://communitycollegesusa.com/article_images/dreamstime_630080_CC_main.jpg


எல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம் என்று சொல்வார்கள்  .ஆனால் நாம் எல்லோரும் அதை ஊக்கத்துடன் கற்றுக் கொள்கிறோமா ? என்றால் .............

சிலருக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியாது . இன்னும் சிலருக்கு எழுத தெரியும் அதன் அர்த்தம் புரியாது . இன்னுமக் சிலருக்கு ஆங்கிலத்தில் உரையாட தெரியும் எழுதத்தெரியாது . இப்படி சிலருக்கு இந்த பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன . என்னதான் செய்யலாம் இதுக்கு என்று புலம்புவது எனக்கு விளங்குகிறது .
நீங்கள் ஆங்கிலத்தில் உங்களுக்கு சிலவற்றுக்கு கருத்து தெரியாத விடத்து ஒரு டிக்சநெரியை எடுத்து பாருங்கள் . இணையத்தில் ஆங்கில வார்த்தைகளை எப்படி சொல்வது , மற்றவர்களுடன் எப்படி உரையாடலாம் என்று எல்லாம் பல இணையத்தளங்கள் இருக்கின்றன . அவற்றை நீங்கள் கேட்டு கேட்டு பழகுங்கள் .


http://www.studydiscussions.com/wp-content/uploads/2009/12/Study-English-Language.gif


ஆங்கிலத்தில் முக்கியம் காலங்கள் .அதாவது tense என்று சொல்வார்கள் . அவற்றையும் என்ன காலத்துக்கு எப்படி பயன்படுத்துவது . எப்படியான வாக்கியங்களை அமைப்பது என்று எல்லாம் இணையத்தில் தளங்கள் இருக்கின்றன . சரி எனக்கு தெரிந்த தளங்களை நான் சொல்கிறேன் . நீங்களும் பயன்படுத்தி பயன் பெறுங்கள் . எனக்கு தெரியாத எத்தனையோ தளங்கள் இருக்கின்றன . அப்படி உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் அறியத்தாருங்கள் . எல்லோரும் பயன் பெறுவார்கள் .


http://learnenglishireland-swan.com/images/Fotolia_4713529_M.jpg


ஆங்கிலத்தில் வாசிப்பது , எழுதுவது , கேட்பது 


எப்படி ஆங்கில சொல்களை வாசிப்பது என்பது பற்றி . ஆங்கில சொற்களில் வைத்து கிளிக் செய்தால் நாம் எப்படி ஆங்கில வார்த்தைகளை சொல்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் 


ஆங்கிலத்தில் நன்றாக பேச 

                                                         http://www.talkenglish.com/
                                                         http://www.englishclub.com/speaking/small-talk_conversation-starters.htm
                                                        http://englishspeakingtips.net/

                                    http://www.eclecticenglish.com/grammar/PresentPerfect1B.html
                                    http://www.englishpage.com/verbpage/presentperfect.html
                                   http://www.kinglishschool.com/Grammar/present-perfect-tense.htm
                                   http://www.englisch-hilfen.de/en/grammar/pres_perf.htm
                                   http://www.english-grammar-revolution.com/future-perfect-tense.html

வாக்கியங்களை எப்படி பேசுவது http://www.perfect-english-grammar.com/future-perfect.html

இணையத்தில் ஆங்கில சொற்களை படிக்க http://www.learn-english-online.org/Lesson1/Lesson1.htm

இணையத்தில் ஆங்கில புத்தகங்களை படிக்க http://books.google.com/books?id=es8qFWDektIC&source=gbs_similarbooks
                                                                                            

பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி?


பெண்கள் ஓரளவு கவனமாக இருந்தால் இந்த 
ரகசிய கேமிராக்களை கண்டு 

பிடித்துலாம். - புதிய இடங்களிலோ, ஓட்டல் அறைகளிலோ உடை மாற்ற 

வேண்டிய நிலை ஏற்படும் போது முதலில் அந்த இடத்தை சுற்றிலும் 

போலீஸ் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பாருங்கள். வழக்கமாக அந்த 

அறையில் இருக்கும் பொருட்கள்தானே என்று நினைத்து 

விடவேண்டாம்.


அந்த வழக்கமான பொருளோடு இணைத்துதான் கேமிராக்கள் 

பொருத்தப்பட்டிருக்கும் என்பதை உணருங்கள். அறையின் வண்ணத்திற்கும், 

உள்ளறை அலங்காரத்திற்கும் பொருத்தம் இல்லாமல் சுவர் கடிகாரம், 

பொம்மை, சிறிய பெட்டி போன்ற ஏதாவது ஒன்றில் கேமிரா 

இணைக்கப்பட்டிருக்கலாம்.


மின்சார பிளக்குகள், பின்பாயிண்ட்டுகளில் கூட இருக்கலாம். சில வகை 

கேமிராக்களுக்கு மின்சாரம் அவசியமாகிறது. குளியல் அறைகளில் '0' வடிவ 

துவாரம் இருந்தாலும் கவனியுங்கள். - பெரும்பாலான குட்டி கேமிராக்களில் 

இருந்து சிவப்பு நிற எல்.ஈ.டி. வெளிச்சம் வெளிப்படும். அந்த வெளிச்சம் பகல் 

நேரத்தில் கண்ணில்படுவது சிரமம்.


அதனால் அறையின் அத்தனை கதவு, ஜன்னல்களை அடைத்து, அனைத்து 

லைட்களையும் அணைத்துவிட்டு, ஸ்கிரீன்களை இழுத்து 

இருட்டாக்கிவிட்டு, அந்த சிவப்பு நிற வெளிச்சம் எங்கிருந்தாவது 

தென்படுகிறதா என்று உற்றுப்பாருங்கள். அந்த வெளிச்சம் வந்தால், அங்கே 

கேமிரா இருப்பதாக அர்த்தம்.


நீங்கள் பிரபலமான பெண்ணாக இருந்து, உங்களை ரகசிய கேமிராக்கள் 

பின்தொடர்வதாக அறிந்தால், 'ஸ்பை கேமிரா டிக்டக்ஷன் டிவைஸ்' வாங்க 

முன்வாருங்கள். குட்டி கேமிராக்களை விற்கும் இணையதள ஷாப்பிங்கிலே, 

அதை கண்டறியும் கருவியும் விற்கப்படுகிறது. ஒளி மூலமும், ஒலி 

மூலமும் அவைகளை கண்டறிய முடியும்.

கேமிரா போன்று சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதையாவது 

கண்டுபிடித்தால் நெருக்கமானவர்களை செல்போனில் அழையுங்கள். 

அப்போது சரியாக பேச முடியாமல், விட்டுவிட்டு பேச்சு ஒலித்தால், நீங்கள் 

கண்டுபிடித்த பொருளில் இருந்து காந்த அலைகள் வெளியேறுகிறது என்று 

தெரிந்துகொள்ளலாம்.


நீங்கள் சந்தேகப்படும் அந்த பொருள், காட்சியை படம் பிடிக்கும் 

கேமிராவாகவோ அல்லது உங்கள் பேச்சை பதிவு செய்யும் கருவியாகவோ 

இருக்கலாம். அது கேமிராதான் என்பதை கண்டறிந்தால் 

சம்பந்தப்பட்டவருக்கு உடனே தகவல் கொடுங்கள். புகார் செய்ய 

தயங்காதீர்கள்.

March 19, 2013

திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்க வேண்டுமா?


















இந்த உலகில் அனைத்து உறவுகளும் முதலில் நட்பிலேயே தொடங்கும். ஏனெனில் நட்புக்கு எந்த ஒரு முடிவும் இல்லை.உதாரணமாக, ஒரு ஆண் மற்றும் பெண் உறவை எடுத்துக் கொள்வோம். அதில் ஆணும் பெண்ணும் முதலில் சாதரணமாக பேசவார்கள், பின்பு அது நட்பாக மாறும், அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறும். 
 
இறுதியில் அது திருமணத்தில் முடியும். ஆனால் இவ்வாறு நட்புறவில் இருந்தவர்களுக்குத் திருமணம் ஆன பின்பும் அந்த நட்புறவு இருக்கிறதா? என்று கேட்டால், அது மிகவும் அதிசயம் தான். ஆனால் திருமணம் ஆன தொடக்கத்தில் நட்பானது இருக்கும். 
 
அதுவே சில நாட்கள் கழித்து, அதிக குடும்ப சுமையின் காரணமாக சிலருக்கு அந்த நட்புறவானது சில சமயங்களில் போய்விடும். அதனால் குடும்பத்தில் பல சண்டைகள் வரக்கூடும். அவர்கள் நண்பர்களாக இருக்க முதலில் அவர்கள் கணவன் மற்றும் மனைவி என்று உருவாக்கப்பட்டதை மனதளவில் மறக்க வேண்டும். 
 
அதனை மறந்து வாழ்க்கையை நடத்தினால், குடும்ப வாழ்க்கை நன்றாக, ஒரு நட்புறவோடு இருக்கும். எதையும் அதிகமாக எதிர் பார்க்காமல் இருக்க வேண்டும். அதற்காக எல்லா விஷயங்களிலும் அப்படி இருக்க சொல்லவில்லை, ஒரு சில விஷயங்களுக்கே. 
 
உதாரணமாக, வெளியே செல்ல வேண்டும் என்று கூப்பிடும் போது கொஞ்சம் வேலை இருக்கிறது என்று கூறினால், சரி என்று அதனை பெரியதாக எண்ணக் கூடாது. அவ்வாறு செய்யாமல் வந்தாக வேண்டும் என்று கூறி அவர்களை கோபப்படுத்தினால், தேவையில்லாத சண்டைகள் தான் வரும். ஆகவே அதனை தவிர்க்க வேண்டும். 
 
அதுவே ஒரு நண்பர்களுக்கு அடையாளம். திருமணத்திற்குப் பிறகு அனைத்து செயல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது படுக்கை அறையானாலும் சரி, சமையலறையானாலும் சரி, எதுவானாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 
 
எப்படி ஹாஸ்டலில் தங்கும் போது நண்பர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோமோ, அதேப்போல் ஒரு ரூம் மேட் போல் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால், உங்கள் கணவனோ/மனைவியோ உங்களுக்கு ஒரு நல்ல உயிர் நண்பர்களாக இருப்பார்கள். மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

சந்தோஷமான திருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்!!!






















திருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள் புகைப்பிடித்தலுக்கு சமமானவை. ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால், உடல் மெதுவாகவும் அமைதியாகவும் பாதிக்கப்படுகிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது. 
 
தற்போது விவாகரத்தானது எளிதில் ஏற்படுகிறது. இதற்கு காரணம் ஒருவரின் குணங்கள் தான். அத்தகைய குணங்கள் இன்றைய மக்களது மனதில் அதிகம் உள்ளது. எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம்.
 
நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை. இத்தகைய குணங்கள் 
 
தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும். எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள்.
 
அகங்காரம்
 
எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி. முதலில் அனைவருமே "திருமணம் என்பது ஆர்வமுள்ள ஒரு விளையாட்டு. இத்தகைய விளையாட்டில் இருவருமே நன்கு விளையாடி, இருவருமே வெற்றி பெற வேண்டும்" என்று நினைக்க வேண்டும்
 
சந்தேகம்
 
சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் துணை மீது நம்பிக்கை வேண்டும்.
 
 
நேரம்
 
இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும். எனவே எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும், துணையுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும்.
 
விமர்சனம்
 
இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும்.
 
 
கெட்ட நடத்தை
 
துணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
 
குடும்ப பிரச்சனை
 
இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும்.
 

கலாச்சார பிரச்சனை
 
சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போது, வேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால், அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும். எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. இது ஒருவரது மனம் மற்றும் புரிதலை பொறுத்தது. ஆகவே அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும்
 
 
கோபம்
 
அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் அதுவே தொடர்ந்தால், பின் பிரிவை சந்திக்க நேரிடும்.