பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 23, 2013

பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி?


பெண்கள் ஓரளவு கவனமாக இருந்தால் இந்த 
ரகசிய கேமிராக்களை கண்டு 

பிடித்துலாம். - புதிய இடங்களிலோ, ஓட்டல் அறைகளிலோ உடை மாற்ற 

வேண்டிய நிலை ஏற்படும் போது முதலில் அந்த இடத்தை சுற்றிலும் 

போலீஸ் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பாருங்கள். வழக்கமாக அந்த 

அறையில் இருக்கும் பொருட்கள்தானே என்று நினைத்து 

விடவேண்டாம்.


அந்த வழக்கமான பொருளோடு இணைத்துதான் கேமிராக்கள் 

பொருத்தப்பட்டிருக்கும் என்பதை உணருங்கள். அறையின் வண்ணத்திற்கும், 

உள்ளறை அலங்காரத்திற்கும் பொருத்தம் இல்லாமல் சுவர் கடிகாரம், 

பொம்மை, சிறிய பெட்டி போன்ற ஏதாவது ஒன்றில் கேமிரா 

இணைக்கப்பட்டிருக்கலாம்.


மின்சார பிளக்குகள், பின்பாயிண்ட்டுகளில் கூட இருக்கலாம். சில வகை 

கேமிராக்களுக்கு மின்சாரம் அவசியமாகிறது. குளியல் அறைகளில் '0' வடிவ 

துவாரம் இருந்தாலும் கவனியுங்கள். - பெரும்பாலான குட்டி கேமிராக்களில் 

இருந்து சிவப்பு நிற எல்.ஈ.டி. வெளிச்சம் வெளிப்படும். அந்த வெளிச்சம் பகல் 

நேரத்தில் கண்ணில்படுவது சிரமம்.


அதனால் அறையின் அத்தனை கதவு, ஜன்னல்களை அடைத்து, அனைத்து 

லைட்களையும் அணைத்துவிட்டு, ஸ்கிரீன்களை இழுத்து 

இருட்டாக்கிவிட்டு, அந்த சிவப்பு நிற வெளிச்சம் எங்கிருந்தாவது 

தென்படுகிறதா என்று உற்றுப்பாருங்கள். அந்த வெளிச்சம் வந்தால், அங்கே 

கேமிரா இருப்பதாக அர்த்தம்.


நீங்கள் பிரபலமான பெண்ணாக இருந்து, உங்களை ரகசிய கேமிராக்கள் 

பின்தொடர்வதாக அறிந்தால், 'ஸ்பை கேமிரா டிக்டக்ஷன் டிவைஸ்' வாங்க 

முன்வாருங்கள். குட்டி கேமிராக்களை விற்கும் இணையதள ஷாப்பிங்கிலே, 

அதை கண்டறியும் கருவியும் விற்கப்படுகிறது. ஒளி மூலமும், ஒலி 

மூலமும் அவைகளை கண்டறிய முடியும்.

கேமிரா போன்று சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதையாவது 

கண்டுபிடித்தால் நெருக்கமானவர்களை செல்போனில் அழையுங்கள். 

அப்போது சரியாக பேச முடியாமல், விட்டுவிட்டு பேச்சு ஒலித்தால், நீங்கள் 

கண்டுபிடித்த பொருளில் இருந்து காந்த அலைகள் வெளியேறுகிறது என்று 

தெரிந்துகொள்ளலாம்.


நீங்கள் சந்தேகப்படும் அந்த பொருள், காட்சியை படம் பிடிக்கும் 

கேமிராவாகவோ அல்லது உங்கள் பேச்சை பதிவு செய்யும் கருவியாகவோ 

இருக்கலாம். அது கேமிராதான் என்பதை கண்டறிந்தால் 

சம்பந்தப்பட்டவருக்கு உடனே தகவல் கொடுங்கள். புகார் செய்ய 

தயங்காதீர்கள்.

No comments: