பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


February 16, 2013

இஸ்லாமிய மருத்துவம் -- மருத்துவ டிப்ஸ்


1. பேரிச்சம்பழம்


செய்வினை – விஷம் குணமாக! 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: 

அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது. 


வாய்வுத் தொல்லை நீங்க! 
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம். 



2. ஜைத்தூன்


ஷைத்தான் நெருங்காதிருக்க 
“அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள். 


வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க 
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும். 


3. பேரிக்காய்

இதயம் வலுவடைய 
“அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 


அழகான குழந்தை பிறக்க 
“கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். இதய அழுத்தம், இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்கு செயல்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 


4. கருஞ்சீரகம்

நினைவாற்றல் பெருகிட 
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும். 
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது. 


சர்க்கரை வியாதி நீங்கிட 
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும். 


5. கோதுமை

இதய பலத்திற்கு 
இதயமும், மூளையும் வலுவடைவதற்கும், வயிற்றுக் கிருமிகள் மற்றும் வயிற்றிலுள்ள கசடுகள் எல்லாம் நீங்கி இரைப்பை சுத்தமாக இருப்பதற்கும் தப்னியா (அதாவது கோதுமை மாவில் பால் ஊற்றி பாயாசமாகக் காய்ச்சி இறக்கிய பின்பு தேவையான இனிப்புக்கு தேன் கலந்த உணவை) உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். 


சத்தான உணவு 
தொலிக் கோதுமை ரொட்டித்துண்டை எடுத்து, அதில் பேரீச்சம்பழம் வைத்து, இதுவே சிறந்த சாலன்: இதுவே சிறந்த சாலன் என்று இரண்டு தடவை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள் என்று யூசுப்பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: கோதுமையுடன் பேரீச்சம்பழம் சேர்த்த உணவை “எல்லா சத்துக்களும் நிறைந்த பரிபூரணமான உணவு” என்று மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


6. உப்பு

பைத்தியம் ஏற்படாதிருக்க 
கொஞ்சம் உப்பை உண்டு உணவை உண்ணத் தொடங்குங்கள். அவ்வாறே உண்டு முடிந்த உடனும் கொஞ்சம் உப்பை உண்ணுங்கள். அதனால் பைத்தியம், குஷ்டம், குடல் வியாதி, மற்றும் பல்வலி போன்ற எழுபது வியாதிகள் உங்களை அண்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 


குளுமை குறைந்திட 
வெள்ளரிக்காயை உப்பில் தொட்டுத் தின்பார்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். அதனால் வயிற்றுக் குளுமை குறைந்து விடும் என்பார்கள்.. இவ்வாறு தின்பதால் மார்புச்சளி, பித்தம் வெளியேறிவிடும். உண்ணும உணவு ஜீரனமாகவும் செய்யும் என்று திப்புன்னபவியில் குறிப்பிடுகிறார்கள். 


7. இறைச்சி

உடல் அழகு பெற 
இறைச்சி இவ்வுலக மக்களுக்கும், நாளைய சொர்க்கவாசிகளுக்கும் சிறந்த உணவாகும் என்றும், இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் வளர்ச்சியடைந்து அழகு பெரும். மேலும், மேனியின் நிறமும் மினுமினுப்பாகவும் இருக்கும் என்றும், இதை உண்ணுவதால் உள்ளத்திற்கு ஆனந்தமேற்படுகிறது என்றும்  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 


உடல் சதைபோட 
ஒருநாள் விட்டு ஒருநாள் இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் அழகுபெரும். உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியமாகும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். நாற்பது நாட்கள் இறைச்சி உண்ணாமலும் இருக்காதீர்கள். அதனால் குணம் கெட்டு விடும் என்று அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 


8. முட்டை

ஆண்மைக் குறைவு நீங்க 
யா ரசூலஅல்லாஹ்! என்னுடைய ஆண்மை போதிய வலுவில்லாமல் இருக்கிறது. என்று ஒரு ஸஹாபி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் முறையிட்டார்கள். அவருடைய ஆண்மைக் குறையை உணர்ந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “முட்டையை உண்ணுங்கள். ஆண்மை அதிகரிக்கும்” என்று ஏவினார்கள். 


தாது பலம் பெற 
எல்லாம் வல்ல இறைவா! எனக்கு தாதுபலம் மிக்க குறைவாக இருக்கிறது என்று ஒரு நபி அல்லாஹ்விடம் முறையிட்ட போது, “முட்டையை உண்ணுங்கள். தாது பலம் மிகும்” என்று அல்லாஹ் அந்த நபிக்குச் சொன்னான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 


9. தேன்


பலஹீனமே இல்லாதிருக்க 
தேனைப்பற்றிய பழைய மருத்துவக் குறிப்பு இது. அதாவது அதிகாலையிலும், இரவில் நித்திரை செய்வதற்கு முன்பாகவும் ஒரு வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சப்பழச்சாறையும், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் 

1. உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
2. ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் நீங்கிவிடும்.
3. குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி விடும். 
4. குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்து விடும். 
5. இதய பாதிப்புக்கள் நீங்கி இதயம் பலம்பெறும். 
6. புதிய இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும். 


ஜீரண சக்திக்கு 
நாம் உண்ணும உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பல சத்துக்களைத் தனித்தனியாக பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரண சத்து குறைந்திருப்பதால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்று விடும். இரைப்பையின் பணி கெட்டு விடுமானால் பின்பு உடம்பு அவ்வளவுதான். 


10. பால்

நோய்கள் வராதிருக்க 
பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். இதன் மூலம் இதயபாதிப்பு நீங்கி இதயம் பழம்பெரும். மூளை சக்திபெரும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். ஜீரண சக்தி அதிகமாகும். 


நரம்புத்தளர்ச்சி நீங்க 
பசும்பாலில் முருங்கைப்பீசினை இடித்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கம் மற்றும் நரம்புக்கோளாறுகள் எல்லாம் குணமாகும். (142) முருங்கைக்காயின் உட்பகுதிச் சதையையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து தினசரி காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் டி. பி நோய் வலிமை இழந்து நாளடைவில் குணமாகி விடும். (143) தலைவலி நீங்க மிளகைப் பசும்பாலில் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகிவிடும். 


11. தண்ணீர்

ஜீரண சக்திக்கு 
உணவில் இடையிலும், உணவு உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும் என்றும் பழங்களைத் தின்றவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது அதனால் மரணம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், குளித்தவுடன் தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் உண்டாகும் என்றும், ஐஸ் நீரை பொதுவாக அருந்தினால் பற்கள் சீக்கிரம் ஆட்டம் கண்டுவிடும் என்றும், தொண்டைக்கட்டி வலி உண்டாகும், இரைப்பையில் ஊறும் ஜீரணநீர் குறைவாகவே சுரக்கும் என்றும், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடல் பலஹீனமடைந்து இளைத்து விடும் என்றும், பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரும் கிணற்றில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் கெடுதல் தரக்கூடியவை என்றும், கிணற்றுத் தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல்நலத்தைக் கெடுத்து விடும், அவ்வாறே வெந்நீரையும், தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல் நலத்தை பாதிக்கும் என்றும் ஜாலீனுஸ், அப்கராத் அபூநயீம் போன்ற மருத்துவ மேதைகள் கூறுகிறார்கள். 


12. மழைத் தண்ணீர்

எல்லா நோய்களும் நீங்கிட 
“எனக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மருந்தை கற்றுத்தந்தார்கள். அம்மருந்து ஒன்றே போதும். வேறு எந்த மருந்தும் தேவை இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தின் மூலமே குணப்படுத்தி விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு சமயம் ஸஹாபாப் பெருமக்களிடம் கூறியபோது, அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய நாற்பெறும் ஸஹாபாக்களும் அதை தத்தமக்குக் கற்றுத்தருமாறு வேண்டினார்கள். அப்போது “வேறு எதிலும் படாத சுத்தமான மழைத் தண்ணீரில் ஃபாத்திஹா, இக்லாஸ், ஃபலக், நாஸ் ஆகிய நான்கு சூராக்களையும் எழுபது எழுபது தடவை ஓதி அதில் ஊதி வைத்துக் கொண்டு, எப்படிப்பட்ட நோயால், செய்வினை மற்றும் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களும் காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் என்னை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக் நிச்சயம் அந்த நோய் நீங்கிவிடும். மலட்டுத்தன்மை உடையவர் இவ்வாறு இதைக் குடித்து வந்தால் நிச்சயம் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பெறுவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளினார்கள். 


13. ஜம்ஜம்

நினைத்தது நிறைவேற 
“இந்த ஜம்ஜம் நீரை எந்த எண்ணத்துடன் யார் அருந்துகிறோமோ அது அவருக்கு நிறைவேறும். நான் மறு உலகில் தாகமில்லாதிருக்க இதை அருந்துகிறேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக இப்னு முபாரக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 


14. சுர்மா

கண்ணொளி பெருகிட
நீங்கள் தூங்கப்போகும் முன்பு சர்மாவை உங்களுடைய கண்களில் இட்டுக் கொள்ளுங்கள். நிச்சயமாக இது கண்களுக்கு கூடுதல் ஒளிதரும். இமை முடிகளை முளைப்பிக்கச் செய்யும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 


15. பூண்டு

புண்கள் ஆறிட 
பூண்டை பால் விட்டு அரைத்து புண்கள், வெயில் கொப்பலங்களில் வைத்தால் விரைவில் ஆறிவிடும். புண் ஆணையைக் கூட வெளியாக்கிவிடும். இன்னும் அநேக மருத்துவ குணங்கள் பூண்டிற்கு உண்டு. ஆனால் மூல வியாதியஸ்தர்கள் பூண்டை உபயோகிக்ககூடாது. 
1. பக்காவாததிற்கு நல்லது. இதை வேகவைத்து வைகொப்பளித்தால் பல்வலி நீங்கி பற்கள் உறுதிப்படும். நவாச்சாரத்துடன் கலந்து வேன்குஷ்டத்திற்கு பத்துப் போட்டால் அது குணமாகும். 
2. பல தன்நீர்களை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பூண்டு சாப்பிட்டால் போதும். அந்தத் தண்ணீரால் எந்த தீமையும் ஏற்படாது. 
3. தேள், பின்பு கடித்து விடாத்ல் பூண்டைத் தட்டி கடிவாயில் பத்துப் போட்டால் குணமாகி விடும். 


16. மருதோன்றி இலை

வயிற்றுவலி, தலைவலி நீங்க 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு தலைவலிக்குமானால் மருதொன்றியை அரைத்து தலைக்கு பத்து போடுவார்கள். மேலும் அல்லாஹ்வின் ஆணையால் இது நிச்சயம் பலன் தரும் என்றும் கூறுவார்கள். 


17. அத்திப்பழம்

உடல் அழகு பெற 
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள். 


18. அதிமதுரம்

தொண்டைவலி நீங்க 
பால்குடி பருவத்தில் குழந்தைக்கு தொண்டையில் ஒருவித அடைப்பு போன்ற வியாதி ஏற்படும். அதைப் போக்குவதற்காக தாய்மார்கள் அரபிய நாட்டில் குழந்தையின் வாயில் விரலை விட்டு அழுத்துவார்கள். (நம் நாட்டிலும் சில இடங்களில் இப்படி செய்வதுண்டு) இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இது மிகவும் தீங்கானது என்பதை உணர்ந்து “தங்களுடைய குழந்தைகளுக்கு தொண்டை வியாதி ஏற்பட்டால் விரல்விட்டு அழுத்தி வேதனை செய்யாதீர்கள். அதற்குப் பகரமாக அதிமதுரக்குச்சியை உபயோகப்படுத்துங்கள்” என்று அருளிய ஹதீஸை அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 


மாதத்தீட்டு ஒழுங்காக வர 
சில பெண்களுக்கு சரியாக மாதாமாதம் தீட்டு வராமல் கஷ்டப்படுவார்கள். அவ்வாறே சில பெண்கள் தீட்டுக்காலத்தில் வயிற்று வழியால் சிரமப்படுவார்கள். அப்போது அதிமதுரக்குச்சியைச் சாப்பிட்டு வந்தால் தீட்டு சரியாக வர ஆரம்பித்து விடும். வயிற்று வழியும் நீங்கி விடும். 


19. முள்ளங்கி

பசி உண்டாக 
முள்ளங்கியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும். 
1. தாதுபலம் மிகப்பலமாக இருக்கும்.
2. கிட்னியில் சேரும் கற்களைக் கரைத்து விடும். 
3. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு நல்ல வலுவேட்படுத்தும்.
4. முடி உதிர்வதைத் தடுத்து அது நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5. முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால் தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும். குரல் இனிமையாகும். 
6. முள்ளங்கியைத் தட்டி தேள், பாம்பின் கடிவாயில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி விடும்.
7. இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும். 
8. முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.
9. முள்ளங்கி விதையை வெயிலில் காய வைத்து நன்கு தட்டி தேன் கலந்து லேகியமாக்கி வைத்துக்கொண்டு திமமும் இரவில் தூங்கப்போகும் முன்பு கொஞ்சம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய சுகம் பெறுவதற்கு இதைவிடச் சிறந்த மருந்து இனியொன்று இல்லை. 


20. மாதுளம்பழம்

ஷைத்தான் விரண்டோட
எந்த வயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம் அவருடைய இதயம் பிகாசிக்கும்.(அதாவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்) மேலும் நாற்பது நாட்களுக்கு ஷைத்தான் அண்டுவதில்லை. விரன்டோடி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 


கண்ணோய் நீங்கிட
மாதுளை மொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும், மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில் கூறப்படுகிறது. 


இரத்தம் சுத்தமாக 
இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும். 
1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.
2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.
3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். மாதுளைப்பழத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள். 


21. சுரைக்காய்

மூளை பலத்திற்கு 
சுரைக்காய் சமைத்து விரும்பி உண்ணுங்கள். அது மூளைக்கு அதிக பலத்தைத் தரும். மேலும் அது வளர்ச்சி அடையும் ஒரு சமயம் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் “ஆயிஷா! நீ சமைப்பது எனில் சுரைக்காயை (கறியுடன் சேர்த்து) அதிகமாக சமை. அது மனக்கவலையைப் போக்கி விடுவதோடு, நெஞ்சுக்குப் பலமும் தரும்” என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். 

மூத்திரம் கோளாறுகள் நீங்க 
பல காய்கறிகள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிரியமாக உண்டிருக்கிரார்கள் என்றாலும் சுரைக்காயின் மீது தனிப்பட்ட விருப்பம் கொண்டு பிரியமாக உண்டிருக்கிறார்கள். அதிலும் இறைச்சியில் சுரைக்காயைச் சேர்த்து சமைக்கப்பட்ட சால்னாவை கோதுமை ரொட்டியில் ஊற்றிச் சாப்பிடுவதில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அலாதிப் பிரியம் இருந்தது. சுரைக்காய் சிறுநீர் நன்கு வெளிப்படுத்தும். மேலும் மூத்திரக் கோளாறுகளை நீக்கும். 


22. வெள்ளரிக்காய்

உடல் பருமனாக 
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். நான் சதைபோட வேண்டும் என்பதற்காக எனக்கு என்னுடைய தாயார் பல மருந்துகளையும் செய்து பார்த்தார்கள். பலவிதமான பொருட்களை உண்ணக்கொடுத்தார்கள். அப்போதும் எனது உடலில் சதை பிடிப்பு ஏற்படவில்லை. பின்பு பேரீச்சப்பழத்தையும், வெள்ளரிக்காயையும் சேர்த்து எனக்கு உண்ணக கொடுத்தார்கள். அதனால் சில நாட்களில் நான் பருமனாகி விட்டேன். (பொதுவாக ஒல்லியாக உள்ள பெண்கள் சதைபோட இது சிறந்த உணவாகும்) 


23. இஞ்சி, சுக்கு

ஜலதோஷம் நீங்கிட 
கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சமஅளவு கலந்து மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் பறந்து விடும். 
1. சுக்கு, வெள்ளைப்பூண்டு, குறுமிளகு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து, தட்டி பொடியாக்கி தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் மூலக்குரு நீங்கி விடும். அதன் வேர் அப்படியே அடியோடு அறுந்து விடும். 
2. சுக்கைத் தட்டி பாலில் கலந்து குடிக்க வேண்டும். அதையே மேனியில் தேய்க்கவும் செய்தால் பாம்புக்கடி விஷம் இறங்கி விடும். 
3. வாந்தி வருவது போன்று தோன்றினால் சுக்கை கொஞ்சம் வாயிலிட்டால் உடனே வாந்தி நின்று விடும். 


24. தயிர், மோர், வெண்ணை, நெய்

தாதுபுஷ்டிக்கு 
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் தாதுபுஷ்டிக்கு நிகரற்றது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். குரல் இனிமை தருவதற்கும் இது நல்ல உணவாகும். 
1. தேனும் வெண்ணையும் சேர்த்துச் சாப்பிட்டால் விழ மூட்டுக்களில் உண்டாகும் வலி நீங்கிவிடும். 
2. தயிரும், அக்ரூட்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டதாகும். இவற்றைத் தனித் தனியாகச் சாபிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். ஆனால் இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்றும் அதனால் இரண்டின் குணங்களும் சமநிலைப்பட்டு உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளிய ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 


25. காளான்

கண்ணோய் குணமாகிட 
ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு சமயம் சில ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வருகை தந்து “காளான் பூமியின் அம்மை நோய்” என்று முறையிட்டார்கள். அப்போது “காளான் (பாலைவனத்தில் பனூ இஸ்ராயீல் சமூகத்தாருக்கு அல்லாஹ் வழங்கிய மேலான உணவான) “மன்” எனும் உணவு வகையைச் சேர்ந்ததாகும். அதன் நீர் கன்னோயகளை குணப்படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். இதற்குப் பின்பு நான் நான்கு ஐந்து காளான்களை பிடுங்கி கசக்கி சாறெடுத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்திருந்தேன். எனது அடிமைப் பெண்ணுக்கு அடிக்கடி கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அப்போது கண்கள் வலிக்கவும் செய்தன. அதற்கு இந்த காளான் நீரை கண்ணுக்கு இட்டு வந்தேன். குணமாகி விட்டது னென்று அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 


26. எள்

தொண்டை வறட்சி நீங்கிட
எள் சாப்பிட்டால் வறட்சி, கரகரப்பு நீங்கி விடும். குரல் இனிமையாக இருக்கும் 
1. எள்ளுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை சுறுசுறுப்படையும்.
2. நரம்புத்தளர்ச்சி நீங்கி பலம் பெரும், மேனி மினுமினுப்பாக இருக்கும். 
3. முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர்ச்சி அடையும்.
4. நல்லெண்ணையை உணவில் ஊற்றிச் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும். உடல் உஷ்ணத்தை தனித்து விடும்.
5. கர்ப்பம் தரிக்காதிருக்க எள் கைகண்ட மருந்தாகும். உடலுறவு கொண்ட பின்பு அதிகாலையில் வெறும் வயிற்றில் எள்ளும் சர்க்கரையும் சேர்த்து (எள்ளுருண்டை) சாப்பிட்டால் கர்ப்பறையில் சேர்ந்துள்ள விந்தின் ஜீவா அணுக்களை கலைத்து விடும். அதனால் கருத்தரிக்க மாட்டாது. மேலும் உடலுறவு கொள்ளும் போது ஆண் உறுப்பில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு உறவு கொண்டாலும் கருத்தரிக்காது. 


27. திராட்சைப்பழம்

இரத்தம் சுத்தியாக
திராட்சைப்பழம் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். உடலில் பலமும் தைரியமும் ஏற்படும். உடலில் சதைப்பிடிப்பு உண்டாகும். பித்தக்கோளாறுகளைப் போக்கி விடும். ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் “திராட்சைப் பழத்தை உண்ணுங்கள். அதன் கொட்டையை வீசி எறிந்து விடுங்கள். ஏனெனில் திராட்சைப்பழம் (ஷிஃபா) நோய் நிவாரநியாகும். அதன் கொட்டை நோயாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாக அறிவிக்கிறார்கள். 

அழகான தோற்றத்திற்கு 
உலர்ந்த திராட்சை அதிகமான நோய்களை நீக்கும் சிறந்த மருந்தும் உயர்ந்த உணவுப் போருளுமாகும். ஒரு சமயம் உலர்ந்த திராட்சையை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு அது அவர்கள் முன்னால் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம் “இதைச் சாப்பிடுங்கள். இது கோபத்தைத் தனித்து விடும். கபத்தை வெளியேற்றி விடும். நல்ல நிறத்தை உண்டு பண்ணி அழகான தோற்றத்தை தரும். வாய் நாற்றத்தை போக்கும், நரம்புத் தளர்ச்சியை நீக்கி பலப்படுத்தும்” என்று கூறினார்கள் என தமீமுத்தாரமீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 


28. பழரசம்

உடல் பலத்திற்கு 
அன்னை ஆயிஷா ஸித்தீக்கா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்காக காலையில் பழங்களைப் பிழிந்து ஜூஸ் செய்து வைப்போம். அதை மாலையில் அவர்கள் சாப்பிடுவார்கள். அவ்வாறே மாலையில் ஜூஸ் செய்து வைப்போம், அதை அவர்கள் காலையில் சாப்பிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் காலையிலும், மாலையிலும் பழங்களை பிழிந்த பாத்திரத்தை அவசியம் கழுவி வைப்போம்” என்று கூரினார்கள். இம்முறைப் பிரகாரம் பழரசம் சாப்பிடுவது உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மேலும், ஒரு தடவை ஜூஸ் பிழிந்து விட்டப் பாத்திரத்தைக் கழுவிய பின்புதான் அடுத்த தடவை ஜூஸ் பிழிய வேண்டும். அதுவே சுகாதாரமாகும். கழுவாமல் வைத்திருந்தால் பழங்களிலுள்ள சர்க்கரையின் காரணம் ஈ, எறும்பு மற்றும் காற்றிலுள்ள கிருமிகள் வேகமாக அந்தப் பாத்திரத்தை தொடுகின்றன. அதனால் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு நோய் நொடிகள் விளைகின்றன. 


29. சிர்க்கா

வயிற்றுக் கோளாறுகள் நீங்க 
ஆயிரக்கணக்கான வயிற்றுக் கோளாறுகளை நீக்குவதிலும், இரைப்பையை சுத்தப்படுத்தி வலுவூட்டி, ஜீரண சக்தியை விரைவில் ஏற்படுத்துவதில் சிர்க்கா வல்லதாகும். குறிப்பாக மழைக்காலத்திலும், குளிர்க்காலத்திலும் நல்ல பலனைத்தரும். கருஞ்ஜீரகத்தை தட்டி சிர்க்காவில் கலந்து தேமல், கருந்தேமல், படர்தாமரை, ஊறல் போன்ற தொல் சம்பந்தப்பட்ட வியாதிகளில் தேய்த்து வந்தால் அவை குணமாகி விடும். 

ஆறாத புண்கள் ஆற 
சிர்க்காவை பஞ்சு அல்லது துணியில் நன்கு நனைத்து ஆறாத புண்கள் நீண்ட நாட்களாக உள்ள புண்கள், புரையோடிய புண்களில் கட்டினால் வேதனை, வலி, வீக்கம் நீங்கி விரைவில் புண்கள் ஆறிவிடும். புண்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தாள் அல்லது சிருமூக்கு உடைந்து இரத்தம் வடிந்தாலும் சிர்க்காவை தடவினால் இரத்தம் வடிவது நின்று விடும். 


30. கஸ்தூரி

மரத்த நிலை நீங்க 
சில நேரங்களில் இரத்த ஓட்டக் குறைவால் உடல் மரத்து விடும். அப்போதும் அந்த இடத்தில் கஸ்தூரியை கொஞ்சம் தேய்த்து விட்டால் மரத்துவிட்ட நிலை நீங்கி விடும். 
1. கஸ்தூரியை உபயோகிப்பது மற்றும் நுகர்வதால் நீர்த்துப்போன விந்து கட்டிப்பட்டு தாதுபலம் பெற்று நீண்ட நேர போக உகம் பெறலாம்.
2. மயக்கமுடையவருக்கு இதை நுகரச் செய்தால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார். இதயக் கோளாறுகளும் இதனால் நீங்கிவிடும். 
3. விஷ பொருட்களை உண்டுவிட்டாலோ, விஷ ஜந்துக்கள் தீண்டி விட்டாலோ கஸ்தூரியை நீரில் கலந்து கொஞ்சம் குடித்தால் கடுமை குறைந்து விஷம் இறங்கிவிடும். மேலும் இதனால் உள்ளுறுப்புகள் பழம் பெறும்.


31. ரோஜாப்பூ


குல்கந்து
நல்ல நிறமும், மலர்ந்து விரிந்த பெரிய தரமும் உள்ள ரோஜா பூக்களின் இதழ்களை ஆய்ந்து புழு பூச்சிகள் இருப்பின் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தி பின்பு ரோஜா இதழ்களின் எடையைப் போன்று மூன்று மடங்கு எடை கற்கண்டு சேர்த்து இரண்டையும் சுத்தமான கல் உறவில் கொஞ்ச கொஞ்சமாக இட்டு இடிக்க வேண்டும். நன்கு இடித்து லேகிய பக்குவமான பின்பு வாயகன்ற கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் இட்டு, அதில் மூன்றில் ஒரு பங்களவு சுத்தமான நல்ல தேன் ஊற்றி நன்றாக கிளறி விட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே குல்கந்து. கடைகளில் விற்பதை வாங்குவதை விட நாமே தயாரித்துக் கொள்ளும்போது சுத்தமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இன்னும் ருசி வேண்டுமெனில் கசகசாவை இளஞ்சூட்டில் லேசாக வறுத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் போஷாக்கிற்கு உன்னதமான டானிக்காகும் இது. இதை உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. இரத்த விருத்தி ஏற்படும். உடல் நன்கு மினுமினுப்பாகவும், தளதள என்றும் இருக்கும். 


32. அரிசி

இந்திரிய உற்பத்திக்கு 
அரிசி உணவு இந்திரியத்தை நிறைய உற்பத்தி செய்வதோடு அதை நேர தாம்பத்திய சுகத்தைத்தரும். அரிசியில் தண்ணீருக்குப் பகரமாக பாலூற்றிச் சமைத்து சர்க்கரை அல்லது கல்கண்டு சேர்த்து பாயாசமாக வைத்துச் சாப்பிட்டால் முகவீக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகிவிடும். மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும். அரிசி உணவு பரக்கத் பெற்ற உணவாகும். ஆதலால் அதை உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 


33. பருப்பு

மூளை வளர்ச்சி 
பருப்பை உண்ணுங்கள்: அது பரக்கத் பெற்ற உணவாகும். அதனால் மூளை வளர்ச்சியடையும். இதயத்திற்கு மிகவும் நல்லது என்றும் 70 நபிமார்கள் பருப்பின் மூலம் பரக்கத் பெற்றிருக்கிறார்கள் அவர்களில் கடைசி (நபி) ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களாவார்கள் என்றும் அதனால் கண்வலி வராது என்றும் பெருமை எனும் கெட்ட குணம் பருப்பால் நீங்கி விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். பருப்பை அதிகம் உண்டால் பார்வை மங்கிவிடும். பருப்பைத் தட்டி அம்மை புண்களுக்கு வைத்தால் அது ஆறிவிடும். 


34. மீன்


உடல் கொழுத்திட 
மீனை உண்டுவந்தால் உடல் கொழுத்துப் பெருத்து விடும். பொறித்த மீனை தின்று வந்தால் விந்து கெட்டிப்பட்டு தாது சக்தியை நிறைவாகப் பெறலாம். ஆனால் விரைவில் ஜீரணமேற்படாமல் தாமதமாகவே ஏற்படும். சேறும் சகதியும் உள்ள குட்டைகளிலுள்ள மீனை உன்னவது நல்லதல்ல. அதனால் உடல் கெட்டுவிடும். உப்பில்லாத நல்ல தண்ணீரிலுள்ள மீனே மிகவும் நல்லது. கருவாடு சூடானது. அதை அதிகம் உண்டால் அரிப்பும், சொறி சிரங்கும் ஏற்படும். அதிகம் முள் உள்ள மீனை உண்ணக்கூடாது. 


35. கரும்பு

கரும்பு சாப்பிடுங்கள்: அது வயிறு நிறைய உண்டவனுக்கு ஜீரணத்தை கொடுக்கும்! பசித்தவனுக்கு வயிறை நிரப்பும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 
1. கரும்பு தாம்பத்திய சுகத்திற்கு நல்லது, நெஞ்சுவலிக்கும் நல்லது. மேலும் அதனால் இருமல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். ஆனால் அதனால் சிறுநீர் அதிகம் போகும் என்று கிதாபுல் பரக்கத் எனும் நூலில் கூறுகிறார்கள். 
2. மருந்தே இல்லாதவருக்கும் திராட்சை, கரும்பு, ஓட்டகைப்பால் ஆகிய மூன்று மருந்துகள் போதும். எல்லா நோய்களையும் இவை நீக்கிவிடும் என்று இமாம் ஷாஃபி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள். 


36. குங்குமப்பூ

குங்கும நிறத்தில் குழந்தை பிறந்திட 
கருத்தரித்த நான்காவது மாதத்திலிருந்து இரவில் தூங்கப்போகும்போது ரோஜாப்பூ குல்கந்து கொஞ்சம் சாப்பிட பின்பு ஒரு டம்ளர் பசும்பாலில் நயம குங்குமப்பூ கொஞ்சம் இட்டு கலக்கி சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு உறங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான இடையூறுகளுமின்றி சுகப்பிரசவம்

இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...





















பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வை திறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...

•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.

•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.

•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

•இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.

•முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.

•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

•எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.

நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.

•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.

காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

இஸ்லாம் வழங்கும் இனிய பொன்மொழிகள்.--அமுத மொழிகள்


நமது நன்மைக்காக இஸ்லாம் வழங்கும் இனிய 
பொன்மொழிகளைக் கேளுங்கள்.
* நாணமும் இறைநம்பிக்கையும் இணைந்தே உள்ளது. அதில் ஒன்று கெட்டுவிட்டால் இன்னொன்றும் கெட்டுவிடும்.

* உங்களில் எவர் ஒரு தீய செயலைக் காண்கிறாரோ, அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை அவர் தம் மனதால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்.

* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குஉரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ, அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும் பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கு ஏற்ப பங்கு உண்டு. இருப்பினும் இறைவனிடம் அவனுடைய அருளைக் கோரிய வண்ணம் இருங்கள்.

* செல்வ வளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.

ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி!---உபயோகமான தகவல்கள்,


ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி!


வேலை கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட  ஒரு காரணம், தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் ரெஸ்யூமே (Resume) எந்த வகையிலும் கவராமல் போவதே. எந்த நிறுவனமாக இருந்தாலும் நாம் தரும் ரெஸ்யூமே சரியாக இருந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். அதனால்தான் வேலை தரும் மந்திரச் சாவி என்று அதனை சொல்கிறார்கள்.
இந்த ரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டும்? இதை எப்படி தயாரிப்பது? என்று சொல்கிறார் ஐசால்வ் நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவின் உதவி மேலாளர் ந.பத்மலட்சுமி.
'நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்று உச்சரிக்கிறார்கள். இது தவறு. 'ரெஸ்யூமே’ என்று  உச்சரிப்பதே சரி! தவிர, பயோ டேட்டா (Bio Data), கரிகுலம் விட்டே (Curriculum Vitae), ரெஸ்யூமே ஆகிய மூன்றும் ஒன்று என்று நினைக்கிறார்கள் பலர். பயோ டேட்டா என்பது ஒருவருடைய உயரம், எடை, முழுவிவரம் அடங்கிய திரட்டு. இதை காவலர் வேலைக்கு ஆள் எடுக்கும்போதும், திருமணம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். கரிகுலம் விட்டே என்பது உயர்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவது. ஆனால், ரெஸ்யூமே என்பதுதான் வேலை தேடுபவர்கள் நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க பயன்படுத்துவது.

மூன்று வகைகள்!

ரெஸ்யூமேக்களில் மூன்று வகைகள் உள்ளன.

1. ரிவர்ஸ் குரோனாலாஜிக்கல் ரெஸ்யூமே (Reverse Chronological resume):
வேலைகளில் முன்அனுபவமுள்ளவர்கள் இது மாதிரியான ரெஸ்யூமேக்களை பயன்படுத்துவது நல்லது. இந்த ரெஸ்யூமேயில் தற்போது செய்யும் வேலை விவரங்களுடன் ஆரம்பித்து, மற்ற விவரங்களை அடுத்தடுத்து சொல்லலாம்.

2. ஃபங்ஷனல் ரெஸ்யூமே (Functional resume):
முதலில் ஸ்கில் ஏரியாக்களை (கல்வி அனுபவங்களை) குறிப்பிட்டு, பின்னர் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்தீர்கள் மற்றும் அது சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்து தெரியப்படுத்தலாம்.

3. ஹைபிரிட் ரெஸ்யூமே (Hybrid resume):
மேலே சொன்ன இரண்டு வகையான ரெஸ்யூமேயின் கலவையாக இருப்பதுதான் ஹைபிரிட் ரெஸ்யூமே.

எப்படி இருக்க வேண்டும்?

ரெஸ்யூமேயின் மிக முக்கியமான நோக்கம், ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதுதான். ஒரு ரெஸ்யூமேயை ஈர்க்கும்படியாக தயார் செய்தாலே போதும், அது தன் கடமையை கச்சிதமாகச் செய்துவிடும்.
ரெஸ்யூமேயில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் உண்மையானதாக இருக்கவேண்டும். மற்றவர்களை கவர எந்த பொய்யும் சொல்லக்கூடாது. உங்களைப் பற்றிய முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டலாம். வித்தியாசப்படுத்திக்காட்ட தடித்த (Bold) எழுத்துகளில் எழுதலாம். 
முதல்முறை வேலைக்கு விண்ணப்பிப்பவர் எனில், உங்கள் கல்வி சார்ந்த விவரங்களையும், ஏற்கெனவே வேலை செய்தவராக இருந்தால் ஏற்கெனவே பார்த்த வேலை விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது இடைப்பட்ட காலத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தால் அதையும் ரெஸ்யூமேயில் குறிப்பிட வேண்டியது அவசியம். நாம் குறிப்பிடாவிட்டால் ஹெச்.ஆர். அதுபற்றி கேட்டு, அதற்கு பதில் சொல்லவேண்டிய நிலை ஏற்படும்.
இப்போது சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள, ஏற்கெனவே வேலை செய்த அலுவலகங்களுக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக விவரங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றன.
ஒரு நிறுவனம் ரெஸ்யூமேயை எந்த ஃபார்மெட் வழியாக (இ-மெயில், ஃபேக்ஸ், போஸ்ட் போன்றவை) அனுப்பவேண்டும் என்கிறதோ, அதன்படி அனுப்புவதே நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் அனுப்பிய ரெஸ்யூமே நிறுவனத்தின் பார்வைக்குச் செல்ல தாமதமாகலாம்.

வேலைக்கு ஏற்ற மாதிரி..!

நாம் எந்த வேலைக்குச் செல்கிறோமோ, அந்த வேலைக்கு ஏற்ற மாதிரி நம் ரெஸ்யூமே இருப்பது அவசியம். ஒரே ஃபார்மெட் கொண்ட ரெஸ்யூமேயை அனைத்து வேலைக்கும் பயன்படுத்துவது நல்லதல்ல. உதாரணத்திற்கு, ஏற்கெனவே ஒரு நிறுவனத்தின் சேல்ஸ் பிரிவில் வேலை செய்த ஒருவர் மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்காக தன் ரெஸ்யூமேயை அளிக்கிறார் எனில், அதில் ஏற்கெனவே வேலை செய்த விவரங்களை, அந்த நிறுவனம் உங்களால் அடைந்த லாபங்களை எண்களை கொண்டு குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி குறிப்பிடும்போது செய்வினை (Active) சொற்களை பயன்படுத்துவது நல்லது. 

எத்தனை பக்கம்..?

ஒரு ரெஸ்யூமே அதிகபட்சமே இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும். அதற்குள் அனைத்து விவரங்களையும் அப்டுடேட்டாக அடக்கிவிடுவது நல்லது. நம் ரெஸ்யூமேயைப் படிப்பவர் அதற்கு 20 - 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார். எனவே, இரண்டு பக்கத்திற்குள் அனைத்து தகவல்களையும் தெளிவாக அடக்குவது நல்லது.''
இனி ரெஸ்யூமேயை தயாரிக்கும்போது மேற்சொன்ன விஷயங்களை கவனியுங்கள்!

நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்--அமுத மொழிகள்,



நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:


* பணியாட்களின் சக்திக்கு மிஞ்சிய வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்த வேண்டாம். அவ்வாறு சுமத்த 
நேரிட்டால், அந்த வேலையில் அவர்களுக்கு நீங்கள் துணைபுரியுங்கள். 

* பணியாளர்களை உபசரியுங்கள். நீங்கள் உண்பதில் இருந்து அவர்களுக்கும் உணவு அளியுங்கள்.

* உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! 
உங்களுக்குக் கீழிருந்தவர்கள் குறித்து உங்கள்  ஒவ்வொருவரிடமும் வினவப்படும். பணியாட்கள் தன் எஜமானனின் பொருட்களுக்கு பாதுகாவலன் ஆவான். அவர்களின் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவார்கள். 

* நாம் பொறுப்பில் அமர்த்தி உள்ள ஒருவர்  நம்மிடமிருந்து ஓர் ஊசியை மறைத்தாலும் அல்லது அதைவிடச் சிறியதொரு பொருளை மறைத்தாலும் அதனை அவர்கள் அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். மறுமை நாளில் அதனைச் சுமந்த வண்ணம் வருவார். 

* ஒருவன் தன் கையால் உழைப்பதும் மோசடி  செய்யாமல், பொய் பேசாமல் ஒருவன் நடத்தும் வாணிபமும் தான் யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம். 

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவரா நீங்கள்?




வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பலரும், கடைசிநேர நெருக்கடிகளுக்குள்ளாகி, வாய்ப்பை கோட்டைவிடும் நிலை வரை செல்வது பாஸ்போர்ட் விஷயத்தில்தான். ஏனெனில், பல மாணவர்கள், தங்களின் பாஸ்போர்ட் என்ன நிலையில் இருக்கிறது, அதன் செல்லத்தக்க காலம் எவ்வளவு? என்பன போன்ற விஷயங்களை கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
செல்லத்தக்க காலம் முடிந்துபோதல், பாஸ்போர்ட் மோசமாக சேதமடைந்திருத்தல் உள்ளிட்ட பல காரணங்களால், அவர்களுக்கு கிடைத்த பல அரிய வாய்ப்புகள் நழுவி விடுகின்றன. பாஸ்போர்ட் விஷயத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், அதிலிருக்கும் புகைப்படம். பல வருடங்களுக்கு முன்பாக அது எடுக்கப்பட்டிருந்தால், கட்டாயம் மாறுதல் தேவை. ஏனெனில் அதில் நீங்கள் சிறுவனாகவோ அல்லது சிறுமியாகவோ இருப்பீர்கள். இப்போது, உங்களின் தோற்றம் மிகவும் மாறுபட்டிருக்கும்.

பாஸ்போர்ட் மற்றும் விசா விஷயத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, உங்களின் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். பல நாடுகளில் இதுதான் நடைமுறை.
தேர்வு முடிவுகள் வெளியாகி, சேர்க்கைக் கிடைப்பது 100% உறுதியான பிறகுதான், விசா நடைமுறைப் பணிகளைத் துவங்க வேண்டும் என்று பல மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது தவறு. பல நாடுகள், அவற்றின் மாணவர் விசாவுக்காக விண்ணப்பித்தலை, குறைந்தபட்சம், படிப்பு தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக அனுமதிக்கின்றன. வெளிநாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பாகவே துவங்க வேண்டும். அதன்மூலம், உங்களின் விசாவுக்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள முடியும்.

அப்படியே நம்பிவிட வேண்டாம்

மாணவர் விசா விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை சரியான முறையில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். விசா விதிமுறைகள் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும். எனவே, சில வருடங்களுக்கு முன்பாக அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாக வெளிநாட்டிற்கு படிக்க சென்ற உங்களின் நண்பர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிட வேண்டாம். ஏனெனில், அவர்கள் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும் விதிமுறைகள் பற்றி முழுமையாக அறிந்திருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை.
எனவே, ஒரு சிறந்த வழிமுறை என்னவெனில், நீங்கள் எந்த நாட்டிற்கு கல்வி கற்பதற்காக செல்ல விரும்புகின்றீர்களோ, அந்த நாட்டின் குடியேற்ற மற்றும் கல்வி தொடர்பான இணையதளத்திற்கு சென்று, விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சமீபத்திய மாற்றங்கள் பற்றி அறிந்துகொள்ளவும்.

எந்த ஆலோசகரை நாடலாம்?

வெளிநாட்டு கல்வி தொடர்பாக ஆலோசனை வழங்க, ஏராளமான ஆலோசகர்கள் கடைவிரித்து காத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால், யாரை நம்புவது? யார், வாங்கும் கட்டணத்திற்கு முறையாக சேவை செய்கிறார்கள் என்பதை எப்படி அறிவது? ஒரு ஆலோசகர் நல்லவரா என்பதை, அவரால் ஏற்கனவே பயன்பெற்ற நபர்கள் சொல்வதை வைத்தும், அவரின் தொழில்ரீதியிலான சாதனை மற்றும் அனுபவத்தை வைத்தும் நம்பலாம்.
மேலும், நீங்கள் படிக்கச்செல்லும் கல்வி நிறுவனத்தின் இணையதளம் சென்றால், அதிலேயே, அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஆலோசகர்களின் விபரங்கள் இருக்கும். அதன்மூலம் பயன்பெறலாம். தொலைக்காட்சியில் பேட்டி வருகிறது என்பதற்காகவோ, அதிகளவில் விளம்பரங்கள் தருகிறார்கள் என்பதற்கோ, யாரையும் நம்பிவிட வேண்டாம்.

நீங்களே பொறுப்பு

வெளிநாட்டுக் கல்விக்கென்று நீங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் கூறப்படும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முற்றிலும் நீங்களே பொறுப்பு. அதில் எந்த சிறு தவறு நேர்ந்தாலும், உங்களின் பொன்னான வாய்ப்பு பறிபோய்விடும்.
எனவே, அந்த செயலை மேற்கொள்ளும் முன்பாக, சரியான நபர்களிடம் ஆலோசனைக் கேட்டு, நுணுக்கமாகவும், சிறப்பாகவும் செய்து முடித்தல் வேண்டும். இதற்கு நீங்களே 100% பொறுப்பு.

விசா விபரங்கள்

பல நாடுகளில், மாணவர் விசா என்பது, ஒரு குறிப்பிட்ட பல்கலையில், குறிப்பிட்ட படிப்பிற்காக வழங்கப்படுகிறது. உங்களது பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்ட மாணவர் விசாவில், நீங்கள் அந்நாட்டில் நுழையும் தேதி குறிப்பிடப்படும்.

சரி பார்க்கவும்

விசாவைப் பெற்றவுடன், அதில் ஏதேனும் பிழைகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். பதிவுக்காக, அதை ஸ்கேன் செய்து நகலெடுக்கவும். ஏதேனும் ஒரு காரணத்திற்காக, நீங்கள் பல்கலையை மாற்ற விரும்பினால், தூதரகத்திடம் அது தொடர்பாக தெரிவித்து, முறையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
பல நாடுகள் multiple - entry student விசாவை வழங்குகின்றன. இதன்மூலம், ஒரு மாணவர், தான் படிக்கும் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த நாட்டிற்குள் சென்று வரலாம். ஆனால் சில நாடுகள், single - entry விசாவை வழங்குகின்றன. எனவே, தேவைப்படும்போது அதைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

போர்ட் ஆப் என்ட்ரி

நீங்கள் முதன்முதலில் ஒரு நாட்டிற்கு படிக்கச் செல்கையில், அந்நாட்டில் எந்த விமான நிலையத்தில் முதலில் தரையிறங்குகிறீர்களோ, அந்த இடம்தான் Port of entry எனப்படும். அந்த இடத்தில்தான் immigration மற்றும் customs நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

விசா விண்ணப்பத்திற்கு தேவையானவை

பல்கலையிடமிருந்து, பொருத்தமான அசல் சேர்க்கை ஆவணங்கள்
அசல் கல்விச் சான்றிதழ்கள்(அது ஆங்கிலத்தில் இல்லையெனில், மொழிபெயர்ப்பு தேவை)
அசல் தேர்வு முடிவுகள்
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெறப்பட்ட நிதி ஆவணங்கள்
வங்கிக் கடன்
தங்குமிடம்
அட்வான்ஸ் ட்யூஷன் டெபாசிட் சான்று
உதவித்தொகை கடிதம்
புகைப்படங்கள்

விசா கட்டணங்கள்

ஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா?


 உடற்பயிற்சி,


மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஆனால் வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. தொப்பை குறைய வேண்டுமா? 

கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் சற்றே வளைத்துப் பின் அவற்றை மெல்லக் கீழே கொண்டுவந்து இரண்டு கைகளாலும் இரண்டு கால்கட்டை விரல்களைத் தொடவும். இவ்வாறு குனியும்போது மூச்சை மெல்ல வெளியேற்ற வேண்டும். 

பின் பழைய நிலைக்கு மெல்ல இரு கைகளையும் உயர்த்தவும். இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு தொடக்கத்தில் பத்து முறை செய்யலாம். போகப்போக, எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்கையில், உடலை மிகவும் தளர்வாகவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அளவுக்கு மீறிய இறுக்கத்திலும் வைத்துக்கொள்ளக் கூடாது. நடுநிலையான இறுக்கத்துடன் உடல் இருக்க வேண்டும்.  

இதேபோல் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, அதன் பின் குதிகால்களை உயர்த்திக்கொண்டு முன்னங்கால்களால் நின்று, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு குதிகால்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தவாறே, மூச்சை வெளியேற்றி, கைகளை அவை இணையாக இருக்கும்படி முன்புறமாக நீட்ட வேண்டும். மீண்டும் பக்கவாட்டில் மூச்சிழுத்து நிறுத்திப் பின் முன் சொன்ன பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். 

இவ்வாறு படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள வேண்டும். இடக் காது முனையை வலக்கையாலும், வலக் காது முனையை இடக் கையாலும் பற்றியபடி - இவ்வாறு இரு காது முனைகளையும் பிடித்துக்கொண்டே - உட்கார்ந்து எழ வேண்டும். இதையும் கொஞ்சங் கொஞ்சமாய் அதிகமாக்கலாம். இந்த உடற்பயிற்சி இடை, தொடை, கால் தசைகள், கைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும். 

இவற்றையெல்லாம் செய்வதற்குப் பதினைந்து நிமிடங்கள் போதும். இவற்றைச் செய்ய முடியாத முதியோர்க்கு மட்டுமே நடைப்பயிற்சி சிறந்ததாகும். முடிந்த அளவுக்கு விரைந்த நடை நல்லது. "ஜாகிங்' எனப்படும் நெளிந்த நடை யாருக்குமே உகந்ததன்று என்பதைக் கொஞ்ச நாள்களுக்கு முன்னால் அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். 

சில மருத்துவமனைகளில், முதுகுவலி, இடுப்பு வலி, சுளுக்கு ஆகியவற்றுக்கு ஆளானவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றிக் கேட்டறிந்த மருத்துவர்கள் அவர்களில் 90 விழுக்காட்டினர் 'ஜாகிங்' செய்பவர்கள் என்பதைக் குறித்துக்கொண்டு பிறகு இவ்வாறு அறிவித்துள்ளனர்.  காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், 5 அல்லது 6 கோப்பைத் தண்ணீர் பருகினால், உடனுக்குடனாக வயிறு காலியாகிவிடும். 

இப்போது கண்டவர்களெல்லாம் ஜிம்மை நடத்துவதால் ஆபத்துகள் அதிகம் என்று சொல்லலாயிற்றே ஒழிய, ஜிம்மை ஒட்டுமொத்தமாய்க் குறைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். எந்த ஜிம்மிலும் டாக்டர் ஒருவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஜிம்மால் நமக்கு ஆகும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவை நம் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் வாயிலாக மிச்சப்படுத்தலாம்.

பழைய கார் வாங்குவது எப்படி? -- உபயோகமான தகவல்கள்,



 
னக்கென ஒரு புதிய கார் வாங்கி,  அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கினால், மாதா மாதம் கணிசமான இ.எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பாலான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல்லாம் சரியான தீர்வு, 'யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்’ எனச் சொல்லப்படும் 'பழைய கார்’ நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக இருந்தால், வாங்கும் பழைய காரிலும் புத்தம் புதிய காரின் ஃபீல் கிடைக்கும்!

பிளானிங் முக்கியம்! 
புத்தம் புதிய கார் வாங்க ஷோ ரூம் போனால், அங்கு நீங்கள்தான் ராஜா. உங்களுக்கு காரைப் பற்றி எடுத்துச் சொல்ல சேல்ஸ் ஆபீஸர் இருப்பார். உங்கள் வீடு தேடி டெஸ்ட் டிரைவ் கார் வரும். ஆனால், பழைய கார் விஷயத்தில் அப்படிக் கிடையாது. நீங்கள்தான் அலைந்து திரிந்து தகவல்களைப் பெற வேண்டும். அதிலும், நீங்கள் உடனடியாக முடிவு எடுத்துவிட முடியாது. நல்ல கண்டிஷனலில் இருக்கும் காரா? ஆக்ஸிடென்ட் ஆகாத காரா? இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன் எல்லாம் சரியாக இருக்குமா என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதைக் குடையும். அதனால், கார் வாங்கச் செல்வதற்கு முன்பு, தெளிவாக முடிவு எடுக்க வேண்டும்.


பட்ஜெட் மற்றும் செக்மென்ட்! 

பழைய கார் விஷயத்தில், முதலில் நீங்கள் திட்டமிட வேண்டியது பட்ஜெட்தான். 'கார் என் கைக்கு வருவதற்கு முன் இந்தத் தொகைதான் என்னால் செலவு செய்ய முடியும். இதற்கு மேல் செலவு வைக்கும் என்றால், அந்த கார் எனக்கு வேண்டாம்’ என்று திட்டவட்டமாக முடிவெடுங்கள். பட்ஜெட் விஷயத்தில் சரியாகத் திட்டமிடவில்லை என்றால் என்ன ஆகும்? ஒரு பழைய கார் ஐந்து லட்சத்துக்கு விற்பனைக்கு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 'சார், ஒரு 75,000 எக்ஸ்ட்ரா போட்டா, அதைவிட நல்ல கார் ஒண்ணு இருக்கு. அதைப் பார்க்கலாமா?’ என்பார்கள்.
லட்சங்களில் டீல் செய்யும்போது, 75,000 ரூபாய் உங்களுக்குப் பெரிதாகத் தெரியாது. அந்த காரையும் பார்க்கிறேன் என கடைசி வரை கார்களைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். கடைசியாகப் பார்த்த காரின் விலை 8 லட்சத்தில் வந்து நிற்கும். மதில் மேல் பூனை போல, எந்த காரையும் வாங்க மனமில்லாமல் குழம்பிக்கொண்டே இருப்பீர்கள். அதனால், பட்ஜெட் விஷயத்தில் கறாராக இருப்பதே நல்லது! பட்ஜட்டைப் பொருத்து காரின் செக்மென்டைத் தேர்வு செய்யலாம். செக்மென்டைப் பொருத்தும் பட்ஜெட்டைத் தீர்மானிக்கலாம். எம்யூவி, எஸ்யூவி, செடான், ஹேட்ச்பேக், சின்ன கார் என ஐந்து செக்மென்ட் கார் வகைகள் இருக்கின்றன!

ஓனரா, டீலரா? 
பழைய கார் சந்தை, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அல்ல! அரசு இதைக் கண்காணிப்பதும் இல்லை. டீலருக்கு இது தொழில். உங்களுக்கு இது கனவு. டீலர் உங்களை ஒரு வாடிக்கையாளராகத்தான் அணுகுவார். ஆனால், அவருடைய நடத்தை ஒரு நண்பனைப் போல இருக்கும். டீலரிடம் பழைய கார் வாங்கச் செல்லும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா வியாபாரத்தைப் போல, இதிலும் ஏமாற்றுப் பேர்வழிகள் இருப்பார்கள். விபத்துக்குள்ளான காரைச் சரி செய்து, பெயின்ட் அடித்து புதிய கார் போல் மாற்றி விற்பவர்களும் உண்டு. உங்களால் இது விபத்தான கார் எனப் மேலோட்டமாகப் பார்த்தால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால், உங்களுடன் ஒரு தேர்ந்த மெக்கானிக் அல்லது ஆட்டோமொபைல் விஷயங்கள் அறிந்த நண்பரை அழைத்துச் செல்வது நல்லது. அரிதான சமயங்களில், பழைய கார் டீலர்களிடம் சிறந்த விலைக்கு நல்ல காரும் வாங்கலாம்! 


பழைய கார் டீலர்களில் இன்னொரு வகையினர் உண்டு. கார் நிறுவனங்களே பழைய கார் டீலர்களாகச் செயல்படுகிறார்கள். டொயோட்டா - யு-டிரஸ்ட், ஹூண்டாய் - அட்வான்டேஜ், ஹோண்டா - ஆட்டோ டெரஸ், டாடா - அஷ்யூர், மஹிந்திரா - எக்ஸ் மார்ட், ஃபர்ஸ்ட் சாய்ஸ், செவர்லே - ஓகே, மாருதி - ட்ரூ வேல்யூ போன்ற நிறுவனங்கள் இப்படிப் பட்ட அமைப்புகள். இவர்களிடம் கார் வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. இவர்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போவதை விரும்ப மாட்டார்கள். எனவே, உங்களுக்கு இங்கே நல்ல கார் கிடைக்கும். மேலும் வாரன்டி, சர்வீஸ் போன்றவையும் கிடைக்கும். ஆனால், விலை கொஞ்சம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

ஓனர்! 
டீலர் வேண்டாம்; அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மூலமாகவோ கார் வாங்க விரும்பினால், முதலில் ஓனரின் வீட்டுக்கு விருந்தாளி போலச் சென்று காரைப் பார்த்து வரலாம். அறிமுகமானவர்களுக்குள் நடக்கும் விற்பனை என்பதால், இரு தரப்பினரும் விலையில் விட்டுக் கொடுத்துப் போவார்கள். திருப்தி ஏற்படும் பட்சத்தில், கார் வாங்கும் படலம் இரு தரப்பினருக்கும் நல்ல அனுபவமாக அமையும். சில சமயங்களில், தெரிந்த நபர் மூலம் தெரியாத யாராவது கார் விற்க இருக்கும் தகவல் வரலாம். அவரிடம் நீங்கள் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், கார் வாங்கும்போது நீங்கள் குறைந்த விலைக்கு நல்ல காரை வாங்கலாம்.


பெட்ரோலா, டீசலா? 

இப்போது இருக்கும் விலை நிலவரத்துக்கு, இதுதான் எல்லோருக்கும் பெரிய கேள்வி. 'காரை அடிக்கடி ஓட்டுவீங்க, ஒரு நாளைக்கே குறைந்தது ஐம்பது கி.மீட்டருக்கு மேலே சுற்றுவேன்... அப்படீன்னா, டீசல் எடுத்துக்குங்க சார். ஆனா, காரையே எப்பவாவதுதான் ஓட்டுவேன். அதுவும் லாங் ட்ரிப்புக்குத்தான்னா பெட்ரோல்தான் உங்களுக்கு சரியா இருக்கும் சார்’ - காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் இந்த வசனம் ஓரளவுக்கு உண்மை என்றாலும், இது கொஞ்சம் பழைய கார்களுக்குத்தான் சரி! டீசல் கார் என்றாலே மெயின்டெனன்ஸ் அதிகம், சத்தம் அதிகம், அடிக்கடி செலவு வைக்கும் என்பார்கள். ஆனால், இப்போது இருக்கும் லேட்டஸ்ட் டீசல் இன்ஜின்கள் ஸ்மூத்தாகவும், சத்தம் குறைவாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. பெட்ரோல் இன்ஜினுக்கும், டீசல் இன்ஜினுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகளைத் தவிர, இரண்டும் இப்போது கிட்டத்தட்ட ஒரே தரத்துக்கு வந்து விட்டன.
எனவே, டீசல் கார்தான் வேண்டும் என்றால், முடிந்தவரை குறைந்த கிலோ மீட்டர்களே இயங்கிய லேட்டஸ்ட் மாடலாக எடுப்பது நல்லது. பெட்ரோல் கார் என்றால், சர்வீஸ் இன்டர்வெல் சரியாக உள்ள காராகத் தேர்ந்தெடுங்கள்.

டெஸ்ட் டிரைவ் 
மறக்காமல் டெஸ்ட் டிரைவ் செய்துவிடுங்கள். இது காரினுள் இருக்கும் பல பிரச்னைகளைக் கண்டுபிடிக்க உதவும். காரில் ஏதாவது அப்-நார்மல் சத்தம் வருகிறதா எனக் கவனியுங்கள். நீங்களேகூட சில விஷயங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம். மேடு- பள்ளங்களில் ஓட்டிப் பாருங்கள். இது சஸ்பென்ஷன் நல்ல நிலைமையில் உள்ளதா என அறிய உதவும். பிரேக், கிளட்ச் போன்றவற்றை நன்றாகச் சோதியுங்கள். வேகமாக ஓட்டிப் பார்த்து, கார் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்றும் பாருங்கள்!

வரலாறு! 
கார் ஓனரிடம் சர்வீஸ் ரெக்கார்டுகளை வாங்கிப் பாருங்கள். இது, கார் சரியாகப் பராமரிக்கப்பட்டு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள உதவும். மேலும், எதற்காவது இன்ஷூரன்ஸ் கிளைம் செய்திருக்கிறார்களா என்று விசாரியுங்கள். சர்வீஸ் வரலாறைப் பார்த்தால், முக்கியமான பாகம் இதற்கு முன்பு பழுதாகி உள்ளதா எனக் கண்டு பிடிக்கலாம்.

கார் வாங்கியாச்சு... அடுத்து?
 

கார் வாங்கியவுடன் பலரும் வேலை முடிந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் நிஜம் அப்படி இல்லை. கல்யாணத்தில் தாலி கட்டிய பிறகும் எப்படி எண்ணற்ற சடங்குகள் இருக்கிறதோ, அது போல கார் வாங்கிய பிறகும் சில சடங்குகள் உண்டு. முதலில் என்.ஓ.சி, இன்ஷூரன்ஸ், டெலிவரி நோட், ஓனர்ஸ் மேனுவல், ஆர்.சி போன்ற சமாச்சாரங்களை எல்லாம் கைப்பற்றுங்கள். தாமதம் செய்யாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் சென்று, காரை உங்கள் பெயருக்கு மாற்றிப் பதிவு செய்யுங்கள். அதன் பின்பு, இன்ஷூரன்ஸ் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண் டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு சென்று, முழுமையாக செக்-அப் செய்து விடுங்கள்.
அப்புறம் என்ன..? ஆசைதான் நிறைவேறியாச்சே... காரில் பயணிப்பதை குடும்பத்துடன் ரசித்து அனுபவியுங்கள்!

டீன் ஏஜ் Vs பெற்றோர்






டீன் ஏஜில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது 'காதல்'.
நல்லது கெட்டது என்ன என்று உணர்ந்து கொள்ள இயலாத இந்த பருவத்தில், இனக்கவர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் உணர்வை 'காதல்' என்று அர்த்தம் கொண்டு, தங்களது படிப்பு, எதிர்காலம் என அனைத்தையும் சிதைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், இந்த பதின்ம வயதில் இருப்பவர்களுக்கு இது புரிவதும் இல்லை, அறியுரை கூறினாலும் விரும்புவதில்லை. ஏதாவது ஒரு வகையில் இந்த காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு வந்து நிற்பார்கள்.

எதிர்த்த வீட்டு பெண்ணிற்கு காதல் கடிதம் கொடுத்து பையன் மாட்டிக்குவான் வீட்ல, அல்லது டீன் ஏஜ் பெண்ணிற்கு அடிக்கடி குறிப்பிட்ட நேரத்தில் ஃபோன் கால் வந்து வீட்டில் மாட்டிக்கொள்வாள், அந்நேரத்தில் பெற்றோர்களும் வீட்டில் உள்ளவர்களும் அவர்களை எப்படி கையாள வேண்டும்??

டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்லும் உயிர்கொல்லியான இந்த பதின்ம வயது காதலில் சிக்கிவிடாமல் டீன் ஏஜ்ஜில் இருப்பவர்களை எப்படி தடுப்பது??


பெற்றோருடன் சில வார்த்தைகள்.........!

* மகன் - மகளின் காதல் விவகாரம் தெரிந்து விட்டால், விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அவர்களை அடித்து உதைக்காமல், பக்குவமாக எடுத்துக்கூறுங்கள். வாழ வேண்டிய பொற்காலம் காத்திருக்க, அதனை மறந்து 'காதல்' போன்ற விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல், படிப்பில் கவனம் செலுத்த அன்போடு அறிவுரை கூறுங்கள்.

*அறிவுரை கூறுகிறேன் பேர்விழி என்று, நண்பர்கள் உறவினர்களிடம் விஷயத்தை கூறி அறிவுரை கூற வைக்காதீர்கள். அவ்விதம் நீங்கள் விஷயத்தை பரப்பினால், குற்றயுணர்வினால் கூனி குறுகி போய்விடுவார்கள் உங்கள் பிள்ளைகள்.

*வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் செய்த தவறினை மிகப்பெரிய விஷயமாக்கி, அவர்களை தனிமை படுத்திவிடாதிருங்கள்.

* பதின்ம வயது காதலினால் எடுத்த அவசர முடிவுகள் சிலரது வாழ்க்கையை எப்படி தடம்புரள செய்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, நடைமுறை வாழ்க்கையின் எதார்த்ததை எடுத்து கூறலாம்.

* கண்கொத்தி பாம்பாக எப்போதும் அவர்களை பின் தொடர்ந்து கண்கானிப்பதை தவிர்த்து விடுங்கள். சந்தேக கண்ணோட தன்னை இன்னமும் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதிலுள்ள குற்றயுணர்வை அதிகப்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் இழக்க செய்துவிடும்.
சந்தேகப்படுவதை நிறுத்தி, ஸ்நேகிதமாய் அவர்களிடம் பழகி எச்சரிக்க வேண்டியதை எச்சரியுங்கள்

* அவர்களுக்கு அதிகம் பிடித்த பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த உற்சாகப்படுத்துங்கள். குடும்பமாக சுற்றுலா செல்லலாம், அது அவர்களது மன இறுக்கத்தை மாற்றும்.

*ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை மறைந்திருக்கும், அதனை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.அவர்களது திறமையை மனதார பாட்டுங்கள்.

* செய்த தவறை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி, காயப்படுத்தாதிருங்கள்!


டீன் ஏஜ்-இல் இருப்பவர்களுடன் சில வார்த்தைகள்........!

*டீன் ஏஜ் பருவம், உங்கள் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டிய வயது.வாழ்க்கையில் முக்கியமானதும் வாழ்க்கையே தடம் புரளும் காலமும் இந்த டீன் ஏஜ் தான்.

*வாழ வேண்டிய எதிர்காலம் காத்திருக்க......டீன் ஏஜ் காதலால் கல்லறை பயணம் மேற்கொண்டு விடாதிருங்கள்.

*இன்றைய டீன் ஏஜ் ஆண்கள்/பெண்கள் கேர்ள்ஃப்ரண்ட்/பாய் ஃபிரண்ட் வைத்துக்கொள்வது ஒரு ஃபேஷன் என்று எண்ணுகிறார்கள். சக நண்பர்களின் வற்புறுத்தல் சில சமயம் உங்களை கஷ்டத்துக்கு ஆளாக்கலாம்.
மற்றவர்கள் வைத்திருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட்/கேர்ள்ஃப்ரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம்.

*'டீன் ஏஜ்'என்பது வசந்தகாலம் போன்றது. உடல் வளர்ச்சியடையும் அதே காலகட்டத்தில், எதிர்பாலினர் மீது ஈர்ப்பு வருவது இயற்கை. அந்த இனக் கவர்ச்சி காதல் என்று பெயர் சூட்டுவதும், தேவையற்ற நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும் அறியாமை.

"டீன் ஏஜ் காதல் தொடருமா? தொடராதா??".....நிச்சயமான பதிலளிக்க இயலாது.
ஆனால் பெரும்பாலும் அனைவரையும் இந்த வயதில் காதல் தொட்டு விட்டாவது போய்விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த காதலே வாழ்க்கையின் இறுதியையும் தீர்மானிக்கிறது.
எனவே திருமணம் போன்ற முக்கியமாக முடிவெடுக்க மனதளவிலும், உடலளிவிலும், பொருளாத ரீதியிலும் தயாராக இல்லாத இந்த தருணத்தில், பொறுமையும், நிதானமும் மிக மிக அவசியம்.

* பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கூறுங்கள்.

* பெற்றோருக்கும் உங்களுக்கும் நடுவில் திரை விழாமல், நட்புறவு இருந்தால்.......வெளியுலகில் எதிர்பால் நட்பு கிடைக்கும்போது, அது பாசமா? வேஷமா? என்று தெரியாமல், அதில் மூழ்கி உங்களை இழந்து விடாமல், தடுமாறாமல் இருக்க உதவும்.



உடன்பிறந்தவர்கள்/நண்பர்களிடம் சில வார்த்தைகள்.........!

*உங்கள் நண்பன் உடன் படிக்கும் பெண்ணிற்கு லவ் லெட்டர் கொடுத்து, அதை அந்த பெண் வகுப்பு ஆசிரியரிடமோ, அல்லது தன் அண்ணன்/அப்பாவிடமோ கொடுத்து, அந்த பையனை மாட்டிவிட்டால், அவனிடம்.....

"என்ன மச்சி அட்டு ஃபிகருக்கு கூட உன்னை பிடிக்கல.........இப்படி மாட்டி விட்டு டின் கட்டிடுச்சு" அப்படின்னு கிண்டல் அடிக்காமல்,

"இந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலையா, விட்டு தள்ளு...........ஆத்துல வேற மீனா இல்ல??? ஆனா வலை விரிக்க இது நேரமில்லடா மாப்பி, டீன் ஏஜ் ல ஜாலியா ஃப்ரண்ட்ஸோட கிரிக்கட் விளையாடினோமா, அரட்டை அடிச்சோமா, மீதி இருக்கிற டைம்ல கொஞ்சம் படிச்சோமான்னு இருக்கிறதை விட்டுட்டு , இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்துறது, லவ்ஸ் பண்றதெல்லாம் வேஸ்ட்டா"

என்று சகஜமாக பேசி உற்சாகமூட்டுங்கள்.

*வீட்டில் உங்கள் தம்பியோ தங்கையோ காதல் விஷயத்தில் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டு டோஸ் வாங்கினால், நீங்களும் கூட சேர்ந்து தூபம் போட்டு ஏத்தி விடாமல், அவர்களை கொலை குற்றவாளியை பார்ப்பது போல் பார்க்காமல்...........எப்போதும் போல் சகஜமாக பேசி, படிப்பிலோ விளையாட்டிலோ ஈடுபடுத்திக்கொள்ள உதவுங்கள்.