பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


May 2, 2013

100 நாட்கள் துவைக்காமல் அயர்ன் பண்ணாமல் போடக் கூடிய சட்டை! -வீடியோ இணைப்பு


அமெரிக்க நிறுவனமொன்று 100 நாட்களுக்கு மேல் துவைக்காமலும் அயர்ன் செய்யாமலும் பயன்படுத்தக் கூடிய சட்டையை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேல் இந்த சட்டையை அணிந்திருந்தாலும் இது கொஞ்சமும் அழுக்கடையாமல் அதே பளிச்-சில் இருக்கும் என வூல் அன்ட் பிரின்ஸ் எனும் சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறுகிறது. அதாவது சுருங்காத தன்மையுடைய நூலினால் இந்த ச்ட்டை தயாரிக்கப்பட்டுள்ளதால் அதை நீண்ட நாட்கள் அயர்ன் செய்யத் தேவையே இல்லையாம்.கடினமான உடற்பயிற்சிக்குப் பிறகு கூட இந்தச் சட்டை தூய்மையாக,அதே நறுமணத்தோடு இருக்குமாம்.


2 m - 100 days shirt
அந்தீஸ் மலையேறிகள் முதல் நியூயார்க் இரவு விடுதிகளில் நடனமாடுபவர்கள் வரை பல்வேறு தரப்பினரிடம் இந்த ச்ட்டை சேம்பிள் ஒன்றை கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டதாகவும் அப்படி சட்டையை சோதிப்பதற்காக தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள், சட்டையைப் பற்றி கூறும் போது, ‘சட்டை எப்போதும் ட்ரைகிளீனரில் இருந்து எடுக்கப்பட்டது போல் புத்துணர்ச்சியோடு இருக்கிறது’ என புகழ்ந்து தள்ளியுள்ளதாகவும் கூறியுள்ளார்களாம்..
கம்பளியினாலான இந்த ச்ட்டை பருத்தி ஆடைகளை விட 6 மடங்கு அதிக காலம் பயன்படுத்தக்கூடியது.தற்போது மேற்படி நிறுவனத்தின் ஆய்வாளர்களுக்கு மட்டும் 100 டாலர்(ஐயாயிரம் ரூபாய்) விலைக்கு இந் ச்ட்டை விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் மார்கெட் விற்பனை செய்யப்படவுள்ள சட்டைகளின் விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லையாம்.

No comments: