பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


April 13, 2013

ஒருவரைக் கடுப்பேத்துவது எப்புடி......?




நீங்க எல்லாரும் தினந்தினம் எத்தனையோ பேரை கடுப்பேத்தியிருப்பீங்க இல்லா எத்தனையோ பேரால நீங்க கடுப்பாயிருப்பீங்க.அப்போ உங்க நிலைமையையும் அவங்க நிலைமையையும் ஒருக்கா நினைச்சு பாருங்க.உங்களில ஒரு சிலர் மற்றவங்கள எப்பிடி கடுப்பேத்தலாமெண்டு ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க.ஒருத்தரை கடுப்பேத்துறதென்பது ஒன்றும் பெரிய கஷ்டமான வேலையில்ல.அதுக்காக நீங்க நேரமெல்லாம் செலவழிக்க தேவையில்ல.ரொம்ப சுலபம்.இதெல்லாம் எனக்கெப்பிடி தெரியும்னு நினைக்கிறீங்களா?எல்லாம் ஒரு அனுபவம்தான்.வேணுமென்றால் நீங்க கூட முயற்சி பண்ணி பார்க்கலாம்.

என்னோட அனுபவத்தில கொஞ்சம் சொல்றேன்.உங்களுக்கும் ஏதாச்சும் புது ஐடியா இருந்தா பகிர்ந்து கொள்ளுங்க . 

  • வீதியில கண்டால் தெரியாத மாதிரி போயிடுங்க.கேட்டால் நான் வேற யோசனையில போட்டன் கவனிக்கல எண்டு சொல்லிடுங்க.
  • வேறு ஒருத்தருக்கு நீங்க அனுப்பிய மெசேஜ்சினை அவருக்கு அனுப்பலாம்.கேட்டால் மாறி அனுப்பீற்றன் என்று சொல்லலாம்.
  • ஒருத்தர் call பண்ணினா நான் பிஸியா இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்லிற்று cut பண்ணிக்கலாம்.ஆனா கடைசி வரைக்கும் call பண்ணக்கூடாது.
  • மறுபடி மறுபடி call பண்ணினாங்கன்ன அவங்க நம்பர்களை call block பண்ணி விட்டுக்கலாம்.
  • அவங்க call மட்டும் தவிர்த்திட்டு நாம வேற call பேசிற்று இருந்தோம்னா call waiting cancel பண்ணிக்கலாம்.
  • மெசேஜ் அனுப்பினாங்கன்னா பதில் அனுப்பக் கூடாது.கேட்டா மெசேஜ் வந்ததை கவனிக்கல பிஸியா இருந்தேன்னு சொல்லிக்கலாம்.
  •  போனை off பண்ணி வச்சுக்கலாம்.அப்புறம் கேட்டால் current இல்லை charge இல்லைன்னு சொல்லிக்கலாம்.
  • மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பீற்றிருந்தால் wait a minute என்று சொல்லிற்று கடுப்பாகிற வரைக்கும் அவங்கள wait பண்ண வைக்கலாம்.
  •  e-மெயில் அனுப்பினாங்கன்னா reply பண்ணாதீங்க.கேட்டால் இன்டர்நெட் வேலை செய்யலன்னு சொல்லிக்கலாம்.
  • Skype இல call பண்ண சொன்னாங்கன்னா headphone சரியில்ல headphone  மாத்தணும்னு சொல்லுங்க.
  • Facebook இல அவங்களை பற்றி status போட்டுக்கலாம்.
  • இது எல்லாத்தையும் விட சிறந்த ஐடியா.ஏன் இப்பிடி அவங்கள பற்றி ஒரு பதிவு போட்டே கடுப்பேத்தலாமே.

கடைசியில அவரோட நிலைமை இப்பிடித்தானே இருக்கும் ?ஹ ஹ ஹ ஹா.....
அப்போ பதிவு போட்டவங்க நிலைமை இதுதானே ?

தண்ணீரின் மருத்துவ குணங்கள்




தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்கு, தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம்மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை: 

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 4 X 160 மிலி டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடைய முடியும். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம்முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது. எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

உங்களுக்கு அதிகமா கோபம் வருமா அப்ப படிங்க




உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ,
அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.
  • கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
  • கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.
  • எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.
  • உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.
  • சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
  • எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.
  • பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

பல் வலியை குணமாக்க எளிய சமையலறை வைத்தியங்கள்




குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர். அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர். மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள்.
சொல்லப்போனால், அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர். இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள்.

ஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம். இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம். அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.

இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.

பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.

தேவையில்லாமல் மருத்துவரை அணுக வேண்டாம். மிகவும் மோசமான நிலையில், பல்லை நீக்கினால் மட்டுமே நல்லது என்ற முடிவு வரும் போது ஒரு நல்ல மருத்துவரை அணுகலாம். தேவையில்லாமல் பல்லை நீக்கினால் அது பல வித பிரச்சனைகளில் கொண்டு விட்டு விடும். பல்லை நீக்கியவுடன் எதுவும் தெரியாது. காலம் போகப் போக பல்வலியுடன் தலைவலியும் சேர்ந்து வந்துவிடும். அதனால் இவ்விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவும்.

தம் அடிப்பவரா நீங்கள் - அப்ப?




புகைப்பழக்கத்தை இன்றுடன் விட்டுவிடலாம், சரி நாளை, நாளை மறு நாள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஈரல், நுரையீரல் பாதிப்படைந்துவிடுகிறது. நாளடைவில் அவை பழுதடைந்து உடல் நலத்தை முழுவதுமாக பாதிக்கிறது. சரி புகைப் பழக்கத்தால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்கள் அத்திப்பழத்தை உண்பது சிறந்தது. 

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.

தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

மலச்சிக்கல் மற்றும் சூட்டை தனிக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம், அத்தியில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. ஆகையால் இதனை பொதுவாக தினசரி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

சரும பிரச்சனைக்கு அத்திப்பழத்தை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம்.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழம் சாப்பிடுவதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

உங்களது நண்பர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா ? வாங்க வாழ்த்து தெரிவிக்கலாம் .




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic0D9cQbVOdfI8nUVJQSmsWqy3IpKlaBYVv7G_MofBTo9RCJzKlqwi8kvTKErxKHxylX4SQXAwFEZvHblMYL2MhT0onx3TzoqyBiIwaxH8QIi6tEY4ZjHcPuS7-gUXf787itM87KriNtM/s400/indian-wedding.jpg

எமக்கு எல்லோருக்கும் நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் இருக்கிறார்கள் . அவர்களுக்கு திருமணம் நடக்கின்றது என்றால் நாம் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்போம் . அல்லது வாழ்த்து மடல் அனுப்புவோம் . அல்லது செய்தி அனுப்புவோம் . 

நாம் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் வாழ்த்து செய்தியை அவர்களுக்கு அனுப்புவோம் . அந்த வாழ்த்தை அனுப்ப நமக்கு உபயோகம் தரும் தளங்கள் உள்ளன. அந்த தளங்களை உங்களுக்கு தருகிறேன் . உங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு நீங்கள் வாழ்த்து அனுப்ப இந்த தளம் போய் உங்களுக்கு பிடித்த வாழ்த்தை கொப்பி செய்து அனுப்புங்கள் .
திருமணத் தம்பதியினரை வாழ்த்தி வாழ்த்து தெரிவிக்க : 


http://www.articleswave.com/weddings/best-wishes-for-weddings.html




April 6, 2013

தினம் ஒரு முட்டை அவசியம்!

egg3


*தினம் ஒரு முட்டையினை சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு நல்லது.குறைந்த செலவில், அதிக சத்துகள் நிறைபிய ஒரு உணவு முட்டை.
*காலை நேரத்தில் சிற்றுண்டியாக, 2 முட்டையினை சாப்பிடுவதால், நம்முடைய உடலிற்கு 14 கிராம் அதிக சத்துகள் நிரம்பிய புரோட்டின் , 12 கிராம் கொழுப்பு ,1 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 13 விதமான மினரல் & விட்டமின்ஸ் கிடைக்கின்றது.
*பொதுவாக ஒரு பெரிய முட்டையில் 80 கலோரிஸ் இருக்கின்றது, இதில் 60 கலோரிஸ் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கின்றது. மீது 20 கலோரிகள் தான் வெள்ளை கருவில் இருக்கின்றது. அதனால் உடல் பருமனாக இருப்பவர்கள், வயதனவர்கள் வெள்ளை கருவினை மட்டும் சாப்பிடுவது உடலிற்கு நல்லது.
*முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருக்கின்றது. ஆனாலும் இந்த கொலஸ்ட்ரால் நம்முடைய கொலஸ்ட்ரால் அளவினை அதிகப்படுத்துவதில்லை. ஆனாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது.
*ஒரு நாளைக்கு நமக்கு 300 கொலஸ்ட்ரால்  நம்முடைய உடலிற்கு தேவைப்படுகின்றது. ஒரு முட்டையின மஞ்சள் கருவில் சுமார் 275 இருக்கின்றது. தினமும் முட்டையினை சாப்பிடுவதால் இதய நோய் வருவதற்கான வாய்புகள் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
*தினமும் காலை நேர உணவாக, இரண்டு முட்டை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் உடல் இயங்கும்..(முட்டையில் அதிக சத்துகள் இருப்பதால்.) இப்படி தினமும் 2 முட்டையினை சாப்பிடுவதால் உடல் இளைக்கவும் தவுகின்றது.முட்டையினை சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்,
*முட்டையினை கடையில் இருந்து வாங்கி வந்துவுடன், அதனை ப்ரிஜில் வைப்பது மிகவும் நல்லது.வாங்கிபொழுதோ அல்லது சமைக்கும் முன்போ(எப்படியும் சமைக்கும் பொழுது உடைக்கதான் போகிறோம்-இது அதற்கும் முன்பு-)முட்டை உடைந்து காணபட்டால் அதனை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.
*வேகவைத்த முட்டையினை ஒரு வாரம் வரை ப்ரிஜில் வைத்து சாப்பிடலாம்.முட்டையின் வெள்ளை கருவினை 8 10 நாட்கள் வரை ப்ரிஜில் வைத்து உபயோகிக்கலாம். மஞ்சள் கருவினை, தண்ணீர் ஊற்றி காற்று புகாத டப்பாகளில் வைத்து ப்ரிஜில் வைத்து 2 3 நாட்களுக்குள் உபயோகிக்கலாம்.
*முட்டையினை வேகவைத்த பின், உடனடியாக அதனை குளிர்ந்த தண்ணீருக்கு மாற்றிவிட வேண்டியது மிகவும் நல்லது. மஞ்சள் கருவில் உள்ள சல்பர் சத்து, முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் சல்பருடன் சேர்த்து முட்டையின மஞ்சள் கருவினை ஒருவித பச்சைநிறத்திற்கு மாற்றிவிடுகின்றது. (‘அது நல்லது அல்ல’)
*முட்டையினை வேகவைக்கும் பொழுது கவனிக்கவேண்டியது: எக்ஸ்பிரி டேட்டடிற்குயிற்கு ஒரு வாரம் முன்னதாக சமைத்தால், தோல் நீக்குவது மிகவும் சுலபமாக இருக்கும். எக்ஸ்பிரி டேட்டடிற்குயிற்கு 2 &3 வாரம் முன்னதாக சமைத்தால் வேகவைத்த முட்டையில் தோலினை நீக்கிவதில் சிறிது சிரமம் எடுக்கும்.
*முட்டையினை அனைத்து வித சமையலுக்கும் உபயோகிக்கலாம்.
*முட்டையை பொறிப்பதற்காக எடுத்து உடைக்கும் முன்பு அதனை கழுவுதல் நலம். கண்டிப்பாக இப்படி செய்வது நல்லது.

March 31, 2013

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா? 

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?


நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். 

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் 

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !





நாமெல்லாம் பல தடவை விமானத்தில் 
பயணித்திருப்போம் ஆனால் பயணிகள் இருக்கை 
மற்றும் மலசலகூடம் இதை விட்டால் வேறு ஒரு 
இடமும் நகர முடியாது.
எப்படியாவது கொஞ்சம் விமானியின் அறையை 
பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் அது 
நடக்காது.இதுவரைக்கும் விமானத்தில் 
பயணிக்காதவருக்கும் மற்றும் 
பயணித்தவருக்கும் கண்ணுக்கு விருந்தாய் 
அமைகிறது இந்த வினோதமான இணையத்தளம் .
இங்கே சொடுக்கி சுற்றி சுற்றி பெரிதாக்கி ஓட 
விட்டு பார்த்து மகிழவும்.

உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி ?




முதலாவதாக கீழே நான் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள்.

பிறகு இங்கு மேலே உள்ள தட்டு ஓப்பன் ஆகும் இதில் உங்கள் போட்டோவை தேர்ந்தெடுத்துவிட்டு ஓப்பன் என்ற பட்டனை அழுத்துங்கள்,

ஒப்பன் செய்ததும் இங்கு மேலே உள்ள படத்தில் காண்பதுபோல் உங்கள் போட்டோ உள்ளே வந்துவிடும். அடுத்து இங்கு குறிப்பிட்டதுபோல் இரண்டாவதாக உள்ள பட்டனை கிளிக் செய்துவிட்டு உங்கள் போட்டோவின் கீழ் பகுதியில் சென்று பாருங்கள் தண்ணீர் உங்கள் போட்டோ தெரிவதுபோல் அனிமேசன் வந்திருக்கும்.

அப்படி அனிமேசன் வந்த பிறகு இங்கு மேலே குறிப்பிட்டுள்ள மூன்றாவது பட்டனை அழுத்தி அடுத்து வரும் டிஸ்பிளேயில் Animation GIF என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு ஓகே பட்டனை அழுத்துங்கள்.


உடனே இங்கு காண்பதுபோல உங்களுக்கு ஒரு பட்டன் ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் அனிமேசன் போட்டோவை எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டு Save என்ற பட்டனை அழுத்துங்கள்.

இனி நீங்கள் சேமித்த இடத்துக்கு சென்று உங்கள் போட்டோவை ஓப்பன் செய்து பாருங்கள் உங்கள் போட்டோவின் கீழே தண்ணீர் ஓடுவதுபோல அனிமேசன் ஓடிக்கொண்டிருக்கும்.
முயற்ச்சி செய்துபாருங்கள் வெற்றி நிச்சயம்.

கணினியில் அழித்த பைல்களை மீண்டும் பெறுவது எப்படி?





     
தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி? தாங்கள் அழித்த பைல்Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை மீட்பது அதாவது மீண்டும் பெறுவது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.
    
 நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட சூழ்நிலையை கையாள மிக அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது . அதன் பெயர் Recuva.
  
   இதன் மூலம் தங்கள் கணினியில் அழிந்த எந்த வகையான பைல்களையும் மீண்டும் பெறலாம்...அனைத்து டிரைவுகளிலும், மேலும் Removable டிரைவுகளான பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் அழித்த பைல்களை கூட மீண்டும் பெறலாம்...இதில் மிக சந்தோசமான செய்தி என்வென்றால் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே!


    
 நான் தற்போது தாங்களுக்கு இந்த மென்பொருள் எப்படி பயன்படுத்துவது என விளக்குகிறேன்...முதலில் இந்த மென்பொருளை தங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். பின்னர் இதை இயக்குங்கள்...தற்போது தாங்களுக்கு பைலின் வகை படுத்த ஓர் விண்டோ தோன்றும். இதில் தாங்கள் தேடயிருக்கும் பைலின் வகையை தேர்வு செய்யவும்..

பின்னர் NEXT என்பதை அழுத்தவும்...தற்போது தாங்கள் தேட இருக்கும் பைலின் இருப்பிடத்தை தேர்வுசெய்யவு. உதரணமாக நான் எனது பென்டிரைபில் அழிந்த பைல்களை தேட எண்ணுகிறேன் என்றால். On my video card or ipod என்பதை தேர்வு செய்ய வேண்டும்...இல்லை எனக்கு அனைத்து டிரைவுகளிலும் தேட வேண்டும் என்றால் I'am not sure என்பதை தேர்வு செய்யவும்...
   
  பின்னர் Next என்பதை தேர்வு செய்ய வேண்டும்...தற்போது தோன்றும் திரையில் கீழே Enable Deep Scan என இருக்கிறதா! இது எதற்கு என்றால் நன்கு ஆழமாக தேட வேண்டும் என்றால் இதன் அருகில் இருக்கும் பெட்டியில் டிக் குறியீட்டை இடவும்...

     பின்னர் Start என்பதை அழுத்துங்கள். சிறிது நேரம் காத்துயிருக்கவும்...தற்போது தேடப்பட்ட பைல்கள் அனைத்தும் காட்டப்படும்...
இதில் தாங்களுக்கு தேவைப்படும் படங்கள் தேர்வு செய்து. பின்னர் கடைசியாக  Recover என்பதை தரவும்....அவ்வளவு தான்...வேலை முடிந்தது...

மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்:
Download this Software Click Down:
Download Link(1)
Download Link (2)
Download Link(3)

March 29, 2013

சவூதியிலிருந்து 3 மில்லியன் வெளிநாட்டவ​ர் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்!




















சவூதி அரேபியாவின் தொழிலாளர் நல 
அமைச்சகம், வெளிநாட்டவர்கள் சவுதி 
அரேபியாவின் மக்கள் தொகையில் 20 
விழுக்காடு தான் இருக்கவேண்டும் என்ற 
உச்சவரம்பை நிர்ணயித்துள்ளதால், அடுத்த 
ஒருசில வருடங்களில் சவுதி அரேபியா 3 
மில்லியன் வெளிநாட்டவர்களை படிப்படியாக 
திருப்பி அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.
தற்போது சவுதி அரேபியாவில் 8.42 மில்லியன் 
வெளிநாட்டவர்கள் வேலை செய்து 
கொண்டிருக்கிறார்கள். இது சவுதியின் மக்கள் 
தொகையை கணக்கிடும்போது (18.7 M) 31 
விழுக்காடாகும். இந்த 31 விழுக்காடு, 20 
விழுக்காடாக குறைக்கப்படும்போது 2.9 M 
வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம் 
உள்ளது.

தகுதியுள்ள வளைகுடா 
நாட்டைச்சேர்ந்தவர்களை, 
கம்பெனிகள் வேலைக்கு அமர்த்துவதற்கு 
நீண்ட கால திட்டங்களை 
செயல்படுத்தவேண்டும் என்ற 
GCC மாநாட்டில் தொழில் அமைச்சகர்களின் 
கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சமீபத்தில் சவுதியின் தொழிலாளர் நல 
அமைச்சர் ஆதில் ஃபகீஹ் அவர்கள், Nitaqat 
என்ற புதிய திட்டத்தை உருவாக்கி சவுதியைச் 
சேர்ந்தவர்களுக்கு அதிகமான வெலை 
வாய்புகளை உருவாக்கி அதிலே ஓரளவு 
வெற்றியும் கண்டுள்ளார்கள் என்பது 
குற்ப்பிடத்தக்கது.

கொண்டவர்களும், புதிதாக வளைகுடா 
நாடுகளுக்கு சென்று வேலை 
செய்யப்போகிறவர்களும் இதை கவனத்தில் 
கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..


prayer2

மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்..

படைத்த இறைவனுக்கு நன்றியை 
செலுத்திடுங்கள்..
குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..
இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்..
எல்லாத் தொழுகைகளையும் பேணி தொழுதிடுங்கள்..
போர்க்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்திடுங்கள்..
தொழுகையினால் ஏற்படும் பயன்களை அறிந்திடுங்கள்..
உள்ளச்சத்துடன் உரியநேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..
தொழுகையை பேணினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்..
ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் நிரந்தரமாக தங்க முடியும்..
மறுமையில் முதல் விசாரணை தொழுகையை பற்றியதே..
தொழுகை நம் ஈமானை மேலும் உறுதியாக்குகிறதே..
தொழுகை பாவக் கறைகளை போக்கிடுமே..
மானக்கேடானவற்றிலிருந்து நமை காத்திடுமே..
தொழுகை தீய காரியங்களை களைந்திடுமே..
இறைவனின் மன்னிப்பை பெற்று தந்திடுமே..
இறுதி தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமைந்திடுமே..
நமை எல்லாம் மார்க்கச் சகோதரர்கள் ஆக்கிடுமே..
தொழுகையை விடுவது இணைவைப்போரில் ஒருவராய் நமை ஆக்கிவிடும்..
ஸகர் நரகத்தில் நமை நுழையச் செய்துவிடும்..
தொழுகையை விடுவோர் இறைநிராகரிப்பாளாராக ஆகிவிடுவர்..
மறுமையில் ஃபிர்அவ்ன், ஹாமான் போன்றோரோடு எழுப்பப்படுவர்..
தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எண்ணாதீர்..
அறிவில்லாத மக்களில் ஒருவராக நீங்கள் ஆகிவிடாதீர்..
தொழுகையை விடுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்திடுங்கள்..
மனம்வருந்தி ஏகஇறையிடம் பாவமன்னிப்பு தேடிடுங்கள்..
தொழுகை இறைநம்பிக்கையாளருக்கு கடமையாகும்..
அல்லாஹ்விற்கு இது மிக விருப்பமான செயலாகும்..
வாருங்கள் சகோதரர்களே.. தொழுதிடுவோம்..
மார்க்க கடமையினைப் பேணி நடந்திடுவோம்..
நமக்கு தொழுகை நடக்கும் முன் நாம் தொழுதிடுவோம்..
ஸகர் நரகத்திலிருந்து நம்மை காத்திடுவோம்..