பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 6, 2013

ஏலக்காயின் மருத்துவ குணம் பற்றிய தகவல்



பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.
ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.
வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.
சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும். 4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும். ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விளகும்.
வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.
ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…
1) குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.
2) ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.
3) மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
4) நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.
5) வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.
6) விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
7) வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு




இப்போது பழைய மாடல் TV வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.இந்த வகையில் LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.


ஸ்கிரீன் அளவு: 

முதலில் நாம் வாங்க இருக்கும் டிவி யின் அளவை அதன் திரை அளவை வைத்துத்தான் கூ றுகிறார்கள். பணம் உள்ளது என்பதற்காக மிகப் பெரிய திரை உள்ளதை வாங்கக்கூடாது. அல்லது பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்பத ற்காக மிகச்சிறிய திரை உள்ளதை வாங்கக்கூடாது.






சரியான திரை அளவு என்பது டிவியை வைத்துப் பார்க்க இருக்கும் அறையின் விஸ்தீரணத்தைப் பொறுத்தது. நாம் எவ்வளவு தூரத்தில் வைத்து வாங்க இருக்கும் டிவியை இயக்கிப் பார்க்கப் போகிறோம் என்பதே, அந்த டிவி யின் திரை அளவினை நிர்ணயம் செய்திடும். திரையின் அளவை (அங்குலத்தில்) 1.8 ஆல் பெருக்கினால், உங்கள் டிவியைக் கண்டு ரசிக்க நீங்கள் எவ்வளவு தூர த்தில் அமரலாம் என்பது தெரிய வரும். எடுத்துக் காட்டாக 32 அங்குல டிவி எனில், அதனைப் பார்க்க அமரும் தூரம் 5 அடியாகும். பெரிய அறையில் சிறிய அளவிலான டிவியையும், சிறிய அளவிலான அறையில் பெரிய டிவியையும் வைத்துப் பார்ப்பது கூடாது.
LCD, LED, PLASMA

அனைத்து நாடுகளிலும் இது குறித்து பட்டிமன்றம் நடக்காத குறையாக கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் ஒரு தொழில் நுட்பத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்பதற்கான வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.
பொதுவாக 42 அங்குல அகலத்திரை வரை எல்.சி.டி. டிவி மற்றதைக் காட்டிலும் சிறந்தது என்றும் , அதைக் காட்டிலும் பெரிய அளவிலான டிவிக்குச் செல்கையில் பிளாஸ்மா டிவி சரியானது என்றும் சொல்கின்றனர். இது தொழில் நுட்பத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட பழைய தகவல்கள். இப்போது தொடர்ந்து இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் மாறி வருவதனால், இந்த கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. இதில் இரண்டு நிரூபிக்கப்பட்ட தகவல்களை மனதில் கொள்ள வேண்டும். நன்றாக வெளிச்சம் கொண்ட அறைகளில் எல்.சி.டி. டிவி சிறப்பாகச் செயல்படும். பிளாஸ்மா டிவிக்கள் ஸ்போர்ட்ஸ் போன்ற வேகமான இமேஜஸ் கொண்ட காட்சிகளைச் சிறப்பாகக் காட்டும். இரண்டு வகை டிவிக்களும் பயன்படும் வாழ்நாள் ஒரே அளவுதான். இந்த போட்டியில் புதிதாக வந்துள்ளது எல்.இ.டி. டிவி. இது ஒரு எல்.சி.டி. டிவி, ஆனால் இதற்கான பேக் லைட்டிங் எல்.இ.டி.யால் வழங்கப்படுகிறது. இந்த எல்.இ.டி க்களுக்கெல்லாம் கூடுதலாகச் செலவழித்துக் கொண்டிருக்க வேண்டாம். எனவே மீதமிருக்கும் இரண்டில் எது வாங்கலாம்? இரண்டு வகையையும் பல்வேறு வெளிச்சங்களில் போட்டுப் பார்த்து உங்களுக்குப் பிடித்ததனை வாங்கலாம்.

அடுத்து இன்னொரு தகவலையும் சொல்கின்றனர். அது எச்.டி. ரெடி டிவி (HD Ready TV) மற்றும் புல் எச்.டி. டிவி (Full HD) நம்மை அதிகம் குழப்புவது இந்த வகைகள் தான். எச்.டி. ரெடி டிவிக்களின் திரை ரெசல்யூசன் 1366 x 768 அல்லது 1366 x 768 பிக்ஸெல்கள் இருக்கும். Full HD டிவியில் 1920 x 1080 பிக்ஸெல்கள் இருக்கும். நீங்கள் எச்.டி. வீடியோ வகை படங்கள் எக்ஸ் பாக்ஸ் 360, புளு–ரே, பி.எஸ்.3, உயர்வகை மீடியா பிளேயர்கள், எச்.டி. சாடலைட் பாக்ஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால் Full HD டிவி வாங்கவும்.
இவ்வாறு இல்லாமல், உங்கள் நோக்கம் சாடலைட் டிவி இணைப்பில் பொழுது போக்கு நிக ழ்வுகள் மற்றும் சினிமா பார்ப்பதாக இருந்தால் HD Ready TV போதும். நம் ஊரில் இயங்கும் டி.டி. எச். ஆப்ப ரேட்டர்கள் நேரடியாகத் தரும் டிவி நிகழ்ச்சிகள் இணைப்பு அனைத்தும், சாதாரண பிக்ஸெல் திறன் கொண்ட திரைகளில் நன்றாகவே தெரியும். வழக்கமான டிவிக்களைக் காட்டிலும் எல்.சி.டி. டிவிக்கள் சற்று விலை கூடுதல்தான். எனவே கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை, நல்ல சாதனங்களில் முதலீடு செய்திடுங்கள். பிரபலமான நிறுவனங்கள்வழங்கும் டிவிக்களையே வாங்கவும். டிவி பேனலின் தன்மை, விற்பனைக்குப் பின் பராமரிப்பு சேவை ஆகிய வற்றை நல்ல நிறுவனங்களே தர முடியும். எனவே மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் டிவிக்கள் மற்றும் சொற்ப அளவிலே பெயர் பெற்ற டிவிக்களை, அவை எவ்வளவு டிஸ்கவுண்ட் தந்தாலும், வாங்க வேண்டாம். அதிக அளவில் டிஸ்கவுண்ட் தரும் எந்த டிவியையும், சற்று சந்தேகத்துடனே பார்க்கவும். குறிப்பாக வாரண்டிக்கான சரியான வழி காட்டாத டிவிக்களை அறவே ஒதுக்கவும்.

காண்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் ரெஸ்பான்ஸ் டைம்
காண்ட்ராஸ்ட் ரேஷியோ இதில் அதிகம்; அதனால் விலை கூடுதல் என்றெல்லாம் சொல்வதை டிவி விற்பனை மையங்களில் கேட்கலாம். இந்த விகிதங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வித்தியாசத்தினை ஏற்படுத்தாது. இதனை ஒவ்வொரு நிறுவனமும் ஒரு முறையில் அளந்து தெரிவிக்கின்றன. ஒவ்வொரு டிவிக்கும் அதனைப் பார்க்கும் சூழ்நிலை வேறு படுவதால்,காண்ட்ராஸ்ட் ரேஷியோவினை ஒரு பெரிய அடிப்படை விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஆனால் ரெஸ்பான்ஸ் டைம் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு பிக்ஸெல் முழு கருப்பிலிருந்து முழு வெள்ளை நிறத்திற்கு மாறும் நேரமே ரெஸ்பான்ஸ் டைம் ஆகும். பிளாஸ்மா டிவிக்களில் இந்தரெஸ்பான்ஸ் டைம் மிக வேகமாக இருக்கும். ஆனால் எல்.சி.டி. டிவிக்களில் அவை 8 மில்லி செகண்டுகளுக்கும் குறைவாக இருந்தால் நல்லது. (ஆனால் இந்த வித்தியாசத்தை நம் கண்களால் கண்டறிய முடியாது). வேகமான விளையாட்டுகள், வேகமான நிகழ்வுகளைக் கொண்ட திரைப்படங் களைப் பார்க்கும்போதும், கன்ஸோல் வழியாக விளையாடு கையிலும் இந்த வேறுபாடு தெரிய வரலாம்.

சுவருடனா? டேபிளிலா?

இந்த வகை டிவிக்கள் அனைத்துமே சுவர்களில் இணைத்துப் பார்க்கும் வகையில் வெளிவருகின்றன. இவற்றை டேபிளில் வைத்துப் பார்க்கவும் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. இதற்கான சரியான வால் மவுண்ட் ஸ்டாண்ட் கொண்டு, அதற்கான பயிற்சி பெற்றவரைக் கொண்டு சுவற்றில் மாட்டுவதற்கான சிறிய ஸ்டாண்ட் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால் நீங்கள் டிவியை அப்படி, இப்படி சிறிது தூரம் நகர்த்தி வைத்துப் பார்ப்பவர் என்றால், பாதுகாப்பான டேபிளில், உரிய ஸ்டாண்டில் வைத்து இணைத்துப் பயன்படுத்துவது நல்லது. இப்படி வைக்கும் போது 20% திருப்பிக் கொள்ளலாம்.



இணைப்புகள்:

இன்றைக்கு வீடியோ இணைப்புகள் நிறைய வகைகளில் கிடைக்கின்றன. HDMI, Component, Composite, PC எனப்பலவகை இணைப்புகளை டிவிக்களில் பயன்படுத்தலாம். பெர்சனல் கம்ப்யூட்டர்களையும் இணைக்கலாம். இப்போது வரும் டிவிக்களில்குறைந்தது 10 வீடியோ இணைப்புகள் உள்ளன.
இவற்றிற்கான சரியான கேபிள்களை தேர்ந்தெடுத்து, அதற்கான ஸ்லாட்டுகளில் பயன்படுத்துவது சிறப்பான வெளிப்பாட்டினைத் தரும். புதிய வசதியாக யு.எஸ்.பி. போர்ட்களும் இந்த டிவிக்களில் தரப்படுகின்றன. யு.எஸ்.பி. டிரைவ்களில் இருந்து பாடல்கள் மற்றும் வீடியோக்களை இயக்கலாம் இந்த இணைப்புகளில் பெரும்பாலானவை டிவிக்களின் பின்புறம் தரப்பட்டுள்ளன. எனவே சுவர்களில் மவுண்ட் செய்யப்படும் டிவிக்களில், மாட்டிய பின்னர் இணைப்புகளைச் செருகுவது சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது.
சுவரில் பொருத்தும் முன்பே, சரியான நீள முள்ள கேபிள்களை இணைத்து வை த்துக்கொள்ள வேண்டும். அல்லது எப்படி கவனமாகச் சேதம் ஏற்படாமல் டிவியைக் கழட்டி பொருத்துவது என்று தெரிந்து கொள்ள வெண்டும். டிவிக்களை வாங்கு முன் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று மேலே சொல்லப்பட்ட தொழில் நுட்பவசதிகள் நீங்கள் வாங்க இருக்கும் டிவி யில் எந்த அளவில் உள்ளது என்று பார்க்கவும். இது மற்ற டிவிக்களுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும். கடைகளில் விற்பனையாளர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பிளாக் ஸ்ட்ரெட்ச்: 

டிவி திரையில் தோன்றும் காட்சிகளைச் செம்மைப்படுத்த டிவிக்களில் பலவித தொழில் நுட்பங்கள் கையாளப்படுகி ன்றன. கருப்பு சிக்னல்களைத் திறன் ஏற்றி காட்சிகளைச் சீராக்குவது பிளாக் ஸ்ட்ரெட்ச் என அழைக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளை மற்றும் கருப்பு சிக்னல்கள் அடுத்தடு த்து அமையும் போது கருப்பு அதன் தன்மையிலிருந்து சிறிது குறை வாகக் காட்டப்படும். காட்சி இதனால் சற்று வெளிறித் தெரியலாம். இந்தக் குறையை பிளாக் ஸ்ட்ரெட்ச் நீக்குகிறது.

பி.ஐ.பி.: 

பிக்சர் இன் பிக்சர் என்பதன் சுருக்கம் இது. இதில் டிவி ட்யூனர்கள் கூடுதலாக இருக்கும். ஒரு சேனலைப் பார்க்கயில் அதே திரையில் சிறிய கட்டத்தில் இன்னொரு சேனலையும் பார்க்கலாம். சிறிய கட்டத்தில் உள்ளதைப் பார்க்க விரும்பினால் அதனைப் பெரிதாக்கி பெரிய அளவில் தோன்றியதனைச் சிறிய திரையாக மாற்றலாம். சில டிவிக்கள் 9 சிறிய கட்டங்களை ஒரே திரையில் கொண்டு வரும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன.

ஷார்ப்னெஸ் கண்ட்ரோல்: 

படக் காட்சியின் தெளிவு மற்றும் கூர்மையினை இதன் மூலம்பெறலாம். ரிமோட் கண்ட்ரோலிலும் இந்த வசதி உண்டு. இரவு இருட்டில் டிவி பார்க்கையில் படக்காட்சி அதிக ஒளியுடனும் ஷார்ப்பாகவும் தோன்றி கண்க ளை எரிச்சல் அடையச்செய்யலாம். தேவையான லைட் வெளிச்சம் உள்ள அறையில் காட்சிகள் இன்னும் ஷார்ப்பாக இருக்கலாமே என்று தோன்றும். இதற்கான மாற்றத்தை ஷார்ப் னெஸ் கண்ட்ரோல் மூலம் மேற்கொள்ளலாம்.

பிரைட்னெஸ் சென்சார்: 

அறையில் உள்ள ஒளிக்கேற்ற வகையில் டிவி தன் திரைக் காட்சியின் ஒளி அளவை மாற்றி கண்ணுக்கு இதமான காட்சியைத் தருவதே பிரைட் சென்சார் வசதி.

காண்ட்ராஸ்ட் ரேஷியோ: 

பிரைட் மற்றும் டார்க் கலர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டு விகிதத்தினை இது குறிக்கிறது.


ரெசல்யூசன்:

திரையில் காட்சிகளைக் காட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையை இது தருகிறது. எவ்வளவு கூடுதலாக இந்த புள்ளிகள் உள்ளனவோ அந்த அளவிற்கு காட்சிகளின் ஆழம் மற்றும் தெளிவு இருக்கும். பின்வருமாறு: வி.ஜி.ஏ. (Video Graphics Array) 640 x 480, சூப்பர் விஜிஏ 800 x 600, எக்ஸ் ஜி.ஏ. (எக்ஸெடெண்டட்) 1024 x 768, சூப்பர் எக்ஸ்.ஜி.ஏ. 1280 x 1024, டபிள்யூ எக்ஸ்.ஜி.ஏ. (வைட் எக்ஸெடெண்டட்) 1366 x 768 மற்றும் இறுதியாக ட்ரூ எச்.டி. ரெசல்யூசன் 1980 x1080.


ஆஸ்பெக்ட் ரேஷியா: 

காட்டப்படும் தோற்றத்தின் அகலம் மற்றும் உயரம் குறித்த விகிதம். வழக்கமான டிவிக்களில் இது 4:3 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது 4 பங்கு அகலம், 3 பங்கு உயரம். அகல த்திரையின் இந்த விகிதம் 16:9 என்று உள்ளது.

கோம்ப் பில்டர்: 

வண்ணங்களையும் ஒளியையும் பிரித்து சரியான ரெசல்யூசனைத் தரும் தொழில் நுட்பம். படக் காட்சி திரித்துக் காட்டப்படுதல், இடையே புள்ளிகள் தோன்றுதல், நடுங்குவது போல் காட்சி அளித்தல் போன்றவற்றை இது நீக்கும்.

பி.எம்.பி.ஓ: 

பீக் மியூசிக் பவர் அவுட்புட்: (Peak Music Power Output) ஒரு டெலிவிஷன் எந்த அளவிற்குக் கூடுதலாக ஒலி அளவைத் தர முடியும் என்பதனை இது குறிக்கிறது. சிறிய அறையில் தெளிவாக ஒலியைக் கேட்டு மகிழ 30 வாட்ஸ் போதுமானது.

ஸ்டீரியோ பிளே பேக்: 

டிவியிலிருந்து சவுண்ட் சிக்னல்களை ஆடியோ சிஸ்டத்திற்கு மாற்றுவதனை மேற்கொள்ளும் தொழில் நுட்பம். இதனால் தெளிவான டைனமிக் ஸ்டீரியோ ஒலியை தனி ஸ்பீக்கர்களில் கேட்டு மகிழலாம்.

ரெஸ்பான்ஸ் டைம்:

டிவியின் திரை ஒரு கட்ட ளையை ஏற்றுச் செயல்படுத்தும் கால அவகாசம். பொதுவாக லட்சத் தில் ஒரு பகுதி நேரம் என்று இதனைச் சொல்வார்கள். ஒரு பிக்ஸெல் கருப்பிலிருந்து வெள்ளைக்கும் பின் மீண்டும் கருப்புக்கும் மாறும் கால அவகாசம் இது. இந்த தொழில் நுட்பம் எல்.சி.டி.,டிவியை வாங்குகையில் அதிகம் கவனிக்க வேண்டிய ஒன்று. ரெஸ்பான்ஸ் டைம் திறன் கொண்டது இல்லை என்றால் காட்சி சிதறும்.

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!


பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்டஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.



இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம். அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.

முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். அல்-குர்ஆன் 24;31

பெண் அடிமைத்தனம் என்று கூப்பாடு போடுபவர்களே....
மனித வாழ்க்கைக்கு அல்-குர்ஆன் நல்ல அறிவுரைகளை மட்டுமே வழங்கிய ஒரு அற்புதம் என்பது மீண்டும் நிரூபனம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....

March 5, 2013

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!




'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?


பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம்.


மனதில் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த கற்பனை கோட்டைகளை எழுப்பிவிட்டு இந்தியர்கள் வளைகுடா நாடுகளை நோக்கி பறக்கின்றனர். சூட்டினால் தகிக்கும் பாலைவன மண்ணில் ஒரு பூலோக சுவர்க்கத்தை தங்களது வாழ்க்கையில் கட்டலாம் என்ற நம்பிக்கையில் தாயகத்தை துறந்து அந்நிய தேசத்திற்கு செல்லுகின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தாம் சந்திக்கவிருக்கும் நெருக்கடிகள் ஒவ்வொன்றாக தென்பட துவங்குகிறது.

வானமும், பூமியும் கைவிட்ட உலகம். நதிகளும், வயல் வரப்புகளும், மரங்களும், கிளிகளும் இல்லாத நாடு. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்தால் மண்டையை பிளக்கும் சூடு. இதனை விட சொந்த ஊரையும், குடும்பத்தையும் பிரிந்த வேதனை. மேலும் அவர்களது பாதுகாப்புக் குறித்த கவலை.

ஒரு மரத்தைப் பறித்து இன்னொரு நாட்டில் கொண்டு போய் நட்டால் ஏற்படும் அதே நிலைமைதான் வளைகுடா வாழ் இந்தியர்களின் நிலைமையும்.

மாறிய காலச்சூழலுடன் ஒத்துப்போகாத உடல்நிலை அவர்களது முக்கிய பிரச்சனையாக மாறுகிறது. காற்று, நீர், உணவு இவற்றில் ஏற்படும் திடீர் மாற்றம் செடி கொடிகளைப் போலவே அவர்களது மனமும் வாடிப்போகிறது. இந்த வாட்டத்தை  எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்து போவோரும் உண்டு.

கவலைகளுக்கும்,நெருக்கடிகளுக்கும் மத்தியில் அவர்கள் தங்களது சொந்த ஆரோக்கியத்தைக் குறித்து மறந்து போகின்றார்கள். முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கை முறை வளைகுடா வாழ் இந்தியர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.


சிண்ட்ரோம் எக்ஸ்


வளைகுடா வாழ் இந்தியர்களை காத்திருக்கும் நோய்களின் கூட்டுப் பெயர் தாம் சிண்டோம் எக்ஸ். இதனை செல்லப் பெயர் என நீங்கள் கருதினாலும் தவறில்லை.

நீரழிவு(சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய நோய்கள் அடங்கியதுதான் சிண்ட்ரோம் எக்ஸ். இவையெல்லாம் வாழ்க்கை முறை மாறுவதால் உருவாகும் நோய்களாகும். மிக விரைவில் வளைகுடா வாசிகள் இந்த நோய்களின் பிடியில் சிக்கிவிடுகின்றார்கள்.

வாழ்க்கை முறை ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை இதில் இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.
வளைகுடா வாசிகளின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் உடலின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாக பாதிக்கும் வேளையில்தான் நோய்களும் ஒவ்வொன்றாக குடிக்கொள்கிறது.

சொந்த உடல்நிலைக் குறித்து அவர்களில் பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை. இவ்வாறு சிண்ட்ரோம் எக்ஸ் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை கழிக்கின்றார்கள் வளைகுடா வாசிகள்.


வளைகுடா வாசிகளை(வளைகுடா வாழ் இந்தியர்களை) நோயில் தள்ளும் காரணிகள்


மனச்சோர்வு(depression) நோய்களை உருவாக்கும் மனோரீதியான பிரச்சனைகள்

நாட்டையும், வீட்டையும் துறந்து செல்லும் இந்தியர்களை முதலில் பாதிப்பது நெருக்கடிகளாகும். குடும்பத்தைக் குறித்த கடுமையான கவலை, புதிய இட சூழலுடன் பொருந்திப் போவதில் ஏற்படும் சிரமம், பணி இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகள், பணிச் சுமை, வேலையில் அதிருப்தி, தனிமை ஆகியன மனநெருக்கடிகளை உருவாக்குபவையாகும்.
ஓய்வு, உல்லாசம், நிம்மதியான உறக்கம், உடற்பயிற்சி, நட்புறவுகள் இவற்றையெல்லாம் புதிதாக வளைகுடா செல்லும் நபர் இழக்கவேண்டிய நிலைமை உருவாகிறது.

மன நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிலர் நிம்மதியை தேடுவதாக கூறி புகை, மதுபானம் போன்ற தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகிப் போகின்றனர். உள்ளத்திற்கும், உடலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் மன நெருக்கடிகளின் பலன் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.


மனோரீதியான நெருக்கடிகள் காரணமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் நோய்கள் ஒவ்வொன்றாக வளைகுடா வாசிகளை பாதிக்கத் துவங்கின்றன.

வளைகுடா வாழ் இந்தியர்களில் ஒரு குறிப்பிட சதவீதம் பேர் மனச்சோர்வால்(depression) பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் இத்தகைய மனச்சோர்வுக்கு உரிய சிகிட்சையை பெற முயலுவதில்லை.

மன ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும் வேளையில் குடும்பத்தினரின் ஆதரவும், ஆறுதலும் கிடைக்காமல் போகும் பொழுது அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்பாலும் இதன் இறுதி முடிவு தற்கொலையில் சென்று முடிவடைகிறது.

வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்வோரில் 43 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர் என புள்ளிவிபரம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:

1.மோசமான பணி சூழல்
2.மோசமான வாழ்க்கை சூழல்
3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை
4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு
5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில் சந்திக்கும் பிரச்சனைகள்
6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்
7.குடும்பத்தினரின் பிரிவு
8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆகியனவாகும்.

சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள் ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.
எதற்கும் தீர்வு காணமுடியாத சூழல் உருவாகும் பொழுது தற்கொலையில் அபயம் தேடுகின்றார்கள். மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து முன்னரே அறிந்திருந்தால், அவற்றை கையாளும் பக்குவமும், பொறுமையும் இருந்தால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். தற்கொலை எந்தப்பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்ற புரிந்துணர்வு வேண்டும். இத்தகைய நபர்கள் மட்டுமே கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிப்பது சிறந்தது. அவ்வாறு இல்லையெனில், சொந்த நாட்டிலேயே தொழில் புரிந்து கிடைக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான் உசித்தம்.


உணவு பழக்க வழக்கம்

சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது என்பதுதான் சரியான காரணம்.

இட்லி-சாம்பார், தோசை-சட்னி, இவையெல்லாம் வளைகுடாவாசிகளில் பெரும்பாலோருக்கு கனவாக மாறிவிடுகிறது. காய்கறிகள் இங்கே கிடைக்காமலா உள்ளது? ஆனால், வேலை முடிந்து சோர்வாக வரும் பொழுது காய்கறிகளை நறுக்கி, தேங்காயை துருவி உணவு சமைக்க அலுப்புத் தோன்றும். ஆகவே குக்கரில் சாதம் தயாரித்து, ஏதேனும் ஒரு குழம்புடன் முடித்துக்கொள்ளும் போக்கே பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது சிக்கன் கறியாகும். தயாரிப்பதற்கு எளிது என்பதாலும், விலை மலிவு என்பது சிக்கனை தேர்வுச்செய்ய காரணமாகும். இதனை 2,3 நாட்கள் உபயோகிப்போரும் உண்டு. இவ்வாறு சிக்கன் அன்றாட வாழ்க்கையின் உணவாக மாறுகையில் கொலஸ்ட்ரோல் சிண்ட்ரோம் உடலை ஆளத்துவங்கும்.

வளைகுடாவாசியின் உடல் எடைபோட்டு க்ளாமர் முகத்தில் தெரிந்தாலே புரிந்துகொள்ளலாம் இது சிக்கனின் கொழுப்பு என்பதை. அதிக வருமானம் உடையோர் மீன் வகைகளை உண்பார்கள். இதுவும் கொலஸ்ட்ரோலை கை நீட்டி அழைக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. காரணம் மாமிச உணவின் கொழுப்பை குறைக்க நார்ச்சத்துள்ள காய்கறிகளை இவர்கள் உபயோகிப்பதில்லை. இவ்வாறு பெரும்பாலோர் அதிக உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர்.

சிக்கன் உணவின் அளவுக்கதிகமான உபயோகத்தால் மூல நோயால் அவதியுறுவோரும் உண்டு. மேலும் சுத்தமான குடிநீரை தேவைக்கேற்ப அருந்தாதும் இப்பிரச்சனையை உருவாக்குகிறது. கோடை காலங்களில் சூட்டையும், தாகத்தையும் தாங்கமுடியாமல் கிடைத்த பானங்களை வாங்கி அருந்துவதால் சிறுநீரக கல்லும், மஞ்சள் காமாலை நோயும் உருவாக காரணமாகிறது.


உணவும், உறக்கமும் முறை தவறும் பொழுது

10-18 மணிநேரம் தொடர்ச்சியாக பணியாற்றும் சூழல் ஏற்படும் இவர்களுக்கு குறிப்பிட நேரத்தில் உணவு சாப்பிடவோ, தூங்கவோ முடியாது. ஸ்நாக்சும், ஏதேனும் கோலாக்கள் மூலமாக தற்காலிக பசியை அடக்குவோரும் உண்டு. ஏதேனும் ஒரு வேளையில் இவர்கள் வயிறு முட்ட சாப்பிடுவார்கள். இது உடல் நலனுக்கு கேடானது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இன்னும் சிலர் உண்டு. அவர்களுக்கு காலை உணவே கிடையாது. பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்போர் காசை மிச்சம் பிடிக்கவே இந்த வழியை கையாளுகின்றனர். இரவு தாமதமாக உணவை உண்டு, காலையில் தாமதித்து எழுந்து மதிய உணவை சாப்பிட்டால் காலை உணவை தவிர்க்கலாம் என்ற கொள்கையை சிலர் வகுத்து வைத்துள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை ஏறுமுகமாக இருக்கும் சூழலில் சிலர் காசை சேமிப்பதற்காக தங்களது உடல் ஆரோக்கியத்தை பலி கொடுக்கின்றனர்.


உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைதான் வளைகுடா வாசிகளுக்கு சொந்தம். நேரமின்மையே அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டைப்போல வளைகுடா நாடுகளில் வேலைக்கு மட்டம் போட முடியாது. ஒரு நாள் லீவு கிடைக்கவே பெரும் பாடுதான். இந்நிலையில் அன்றாட வேலையை முடித்து விட்டு, உணவு தயாரித்து, துணிகளை கழுகி, வீட்டிற்கு போன் செய்யவே நேரம் சரியாக இருக்கும். இந்நிலையில் உடற்பயிற்சியைக் குறித்து சிந்திக்க முடியுமா? ஆகவே ரேசன் போல் கிடைக்கும் நேரத்தில் அனைவரும் தவிர்க்க விரும்புவது உடற் பயிற்சியாகும்.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையும், கொழுப்பான உணவு வகைகளைக் கொண்ட வாழ்க்கை முறையும் இணையும் பொழுது இயல்பாகவே உடல் நோய்களின் இருப்பிடமாக மாறிவிடும்.நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி)போன்ற வாழ்க் கை முறையினால் உருவாகும் நோய்கள் ஏற்பட உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே காரணமாகும்.


ஓய்வில்லாத பணி!

பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம் ஆகும்.அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள் உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.

முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன் உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.
நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை சொந்தமாக்கலாம்.


ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!

பாலைவன மண்ணை வீசியடிக்கும் காற்றில் பறந்து வரும் மண் துகள்கள் மூச்சுக் குழாய்க்குள் செல்கிறது. தாமதமில்லாமல் இவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிப்படைகின்றனர். மேலும் பாலைவனப் பகுதிகளில் உருவாகும் மணல் காற்றும், புகையும் வெளியிடங்களில் வேலை பார்ப்போருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் bronchitis என அழைக்கப்படும் மூச்சுக்குழாய் அழற்சி நோய் ஏற்படுகிறது.


கடுமையான வெப்பம்

வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.

கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ் டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால் வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.

பெனடால் என்ற உற்றத்தோழன்


வளைகுடா வாசிகளுக்கு பெனடால் என பெயர் சூட்டிய பாரசிட்டாமோல் மாத்திரைதான் அவர்களின் பெரியதொரு பாதுகாவலன். தலைவலியா? காய்ச்சலா? ஜலதோஷமா? ஒரு பெனடாலில் அவர்கள் ஆறுதலை தேடிக்கொள்வார்கள்.

வளைகுடாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு காலநிலையில் ஏற்படும் மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கம். தலைவலியும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் உண்டு. இதற்கெல்லாம் மருத்துவமனைக்கு சென்று காண்பிக்கும் வழக்கம் இல்லை. காராணம், சாதாரண நபர்களால் வளைகுடா நாடுகளில் சிகிட்சை செலவை தாங்கமுடியாது. வேலைச்செய்து கிடைக்கும் சம்பாத்தியம் முழுவதும் ஒரேயடியாக செலவழிந்து விடுமே என அஞ்சி இவர்கள் எந்த நோய் வந்தாலும் உடனே பெனடாலை விழுங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பெனடால் வளைகுடா வாசிகளின் உற்றத் தோழனாக மாறிவிட்டது. இதன் எதிர்விளைவுகளை குறித்து சிந்திக்கவும் அவர்களுக்கு நேரமில்லை.


பல வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய பிறகே பெனடாலின் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு தெரியவருகிறது. பெனடாலை வழக்கமாக உபயோகிக்கும் பழக்கமுடையவர்களுக்கு சிறுநீரகத்தையும், இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய பாரசிட்டாமோல் மாத்திரையைத்தான் தாம் இதுவரை உற்றத் தோழனாக கருதினோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.


தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள் வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச் சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில் பிடியில் சிக்கவைக்கிறது.


இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியபடி 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம்.

உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் நாம் கவனம் செலுத்தினால் சம்பாதித்த பணத்துடன் தாயகம் திரும்பி சந்தோஷமாக வாழலாம். வளைகுடா வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொண்டிருப்போம்.


இந்திய தூதரகமும், வளைகுடா நாடுகளில் இயங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நல அமைப்புகளும் இப்பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். பணத்தை மட்டும் சேமித்தால் போதாது அதனை அனுபவிக்க கூடிய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வளைகுடா வாழ் இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் வேகத்தில் ஆரோக்கியத்தை தொலைத்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்போம்!

March 4, 2013

இனிப்பைத் தவிர்த்தாலும் நீரிழிவு வருமாம்!


இனிப்பைத் தவிர்த்தாலும் நீரிழிவு வருமாம்!!!
===================================
உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் சொல்ல முடியாத அளவில், உலகிலேயே அதிகமானோர் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உங்களுக்காக கொடுத்துள்ளோம். சரி, இப்போது சர்க்கரை நோயைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!!! 

உண்மை - 1
"சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது" என்று நினைப்பது. உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் செய்துவிடும்.

உண்மை - 2
"இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்" என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.

உண்மை - 3
"நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே கூடாது" என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.  

உண்மை - 4
"நீரிழிவு இருக்கும் போது இனிப்புள்ள காய்கறிகளை சாப்பிட்டால், நீரிழிவு அதிகரிக்கும்" என்று நினைப்பது. நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் காய்கறிகளான பூசணிக்காயில், கிளைசீமிக் இன்டெக்ஸானது இல்லை. சொல்லப்போனால், இது உடலில் இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.  

உண்மை - 5
"நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு இனிப்புகளையும் உணவில் சேர்க்க கூடாது" என்று எண்ணுவது. உண்மையில் இந்நோய் உள்ளவர்கள் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எனவே இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியான அளவில் சாப்பிட்டால், அவை புற்றுநோயை உண்டாக்கும்,  

உண்மை - 6
"என் குடும்பத்தில் யாரக்கும் நீரிழிவு இல்லை. எனவே எனக்கும் நீரிழிவு வராது "என்று நினைப்பது. நீரிழிவு பெரும்பாலும் ஒரு பரம்பரை நோயாக இருக்கலாம். ஆனால், இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. அதாவது போதிய உடற்பயிற்சி, டென்சனான வாழ்க்கை போன்றவையும் நீரிழிவை உண்டாக்கும்.  

உண்மை - 7
"குண்டாக இல்லாவிட்டால், நீரிழிவு நோய் வராது" என்று இருப்பது. உண்மையில் அதிகப்படியான உடல் எடை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் தான். அதே சமயம், நீரிழிவு உடலுக்கு வேண்டிய எடை இல்லாவிட்டாலும், ஏற்படும். எனவே உடல் எடை குறையும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  

உண்மை - 8
"குழந்தைகளுக்கு டைப்-2 நீரிழிவு வராது" என்பது. பொதுவாக அனைவரும் குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் அதிகப்படியான ஜங்க் உணவுகளை சாப்பிட்டாலும் டைப்-2 நீரிழிவானது ஏற்படும்.  

உண்மை - 9
"கர்ப்பகால நீரிழிவானது தற்காலிகமானது" என்று நினைப்பது. உண்மை தான், கர்ப்பகால நீரிழிவு பிரசவத்திற்கு பின் போய்விடும். ஆனால் அந்த நீரிழிவு முற்றிய நிலையில், பிற்காலத்தில் அது டைப்-2 நீரிழிவாக வந்துவிடும்  

உண்மை - 10
"நான் இன்சுலின் எடுக்கிறேன். ஆகவே நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்" என்பது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு, டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் வேண்டும். எனவே இன்சுலின் எடுத்தால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இருந்தால், பின் நீரிழிவானது முற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
















===================================
உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் 
உள்ளனர்.
 இந்தியாவில் சொல்ல முடியாத அளவில், உலகிலேயே 
அதிகமானோர் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் 
வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் 
பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான 
கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் 
சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், 
மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் 
வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை 
நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் 
வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, 
அதனை உங்களுக்காக கொடுத்துள்ளோம். சரி, இப்போது சர்க்கரை நோயைப் 
பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று 
பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!!! 

உண்மை - 1

சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது" என்று நினைப்பது. 
உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் 
ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் 
வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், 
கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் 
செய்துவிடும்.

உண்மை - 2
"இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது 
முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்" 
என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு 
நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் 
உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு 
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.


உண்மை - 3
"நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே 
கூடாது" என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். 
அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். 
எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், 
அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய 
மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட 
கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள 
கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

உண்மை - 4
"நீரிழிவு இருக்கும் போது இனிப்புள்ள காய்கறிகளை சாப்பிட்டால், நீரிழிவு 
அதிகரிக்கும்" என்று நினைப்பது. நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக கிளைசீமிக் 
இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் 
அளவானது அதிகரிக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் காய்கறிகளான 
பூசணிக்காயில், கிளைசீமிக் இன்டெக்ஸானது இல்லை. சொல்லப்போனால், 
இது உடலில் இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களை எதிர்த்துப் 
போராடுவதில் சிறந்தது. 

உண்மை - 5
"நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு இனிப்புகளையும் உணவில் சேர்க்க கூடாது" 
என்று எண்ணுவது. உண்மையில் இந்நோய் உள்ளவர்கள் இனிப்புகளை 
முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எனவே இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் 
பழங்களை சாப்பிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் 
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியான அளவில் சாப்பிட்டால், அவை 
புற்றுநோயை உண்டாக்கும்,

உண்மை - 6
"என் குடும்பத்தில் யாரக்கும் நீரிழிவு இல்லை. எனவே எனக்கும் நீரிழிவு 
வராது "என்று நினைப்பது. நீரிழிவு பெரும்பாலும் ஒரு பரம்பரை நோயாக 
இருக்கலாம். ஆனால், இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் 
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. அதாவது போதிய உடற்பயிற்சி, 
டென்சனான வாழ்க்கை போன்றவையும் நீரிழிவை உண்டாக்கும்.

உண்மை - 7
"குண்டாக இல்லாவிட்டால், நீரிழிவு நோய் வராது" என்று இருப்பது. 
உண்மையில் அதிகப்படியான உடல் எடை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை 
அதிகரிக்கும் தான். அதே சமயம், நீரிழிவு உடலுக்கு வேண்டிய எடை 
இல்லாவிட்டாலும், ஏற்படும். எனவே உடல் எடை குறையும் போது, மிகவும் 
கவனமாக இருக்க வேண்டும்.

உண்மை - 8
"குழந்தைகளுக்கு டைப்-2 நீரிழிவு வராது" என்பது. பொதுவாக அனைவரும் 
குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். 
ஆனால் குழந்தைகள் அதிகப்படியான ஜங்க் உணவுகளை சாப்பிட்டாலும் 
டைப்-2 நீரிழிவானது ஏற்படும்.

உண்மை - 9
"கர்ப்பகால நீரிழிவானது தற்காலிகமானது" என்று நினைப்பது. உண்மை தான், 
கர்ப்பகால நீரிழிவு பிரசவத்திற்கு பின் போய்விடும். ஆனால் அந்த நீரிழிவு 
முற்றிய நிலையில், பிற்காலத்தில் அது டைப்-2 நீரிழிவாக வந்துவிடும்

உண்மை - 10
"நான் இன்சுலின் எடுக்கிறேன். ஆகவே நான் எதை வேண்டுமானாலும் 
சாப்பிடலாம்" என்பது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு, டயட் மற்றும் 
வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் வேண்டும். எனவே இன்சுலின் 
எடுத்தால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இருந்தால், பின் 
நீரிழிவானது முற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

March 3, 2013

அதிகமான முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? இதோ உங்களுக்கான சில ஆறுதல்கள்!



அதிகமான முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? இதோ உங்களுக்கான சில ஆறுதல்கள்!

சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதே காரணம். இயற்கை முறையில், வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் ஒருசில செயல்கள் மூலம் சருமப் பிரச்சனை சரிசெய்யலாம். சரி, இப்போது ஆண்களின் முகத்தில் இருக்கும் பிம்பிள் மற்றும் முகப்பருக்களை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

கிளின்சிங்:

பொதுவாக பருக்கள் மற்றும் பிம்பிளைப் போக்க மைல்டு கிளின்சரைப் பயன்படுத்தி, முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் கிளின்சிங் செய்வதால், இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும். மேலும் முகப்பரு மற்றும் பிம்பிள் உடைந்து, பரவாமல் தடுக்கலாம். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்வது நல்ல பலனைத் தரும். இது ஆண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு முறை. எனவே ஆண்கள் இதனை குறைந்தது வாரத்திற்கு 2-4 முறை செய்வது நல்லது.


ஷேவிங் முறை:

பருக்கள் இருக்கும் ஆண்கள் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு பருக்கள் வருவதற்கு ஷேவிங் முறையும் ஒரு காரணம். எனவே ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக, நல்ல கூர்மையான பிளேடுகளை பயன்படுத்தி, பிம்பிள் உள்ள இடத்தில் அதிக அழுத்தம் கொடுக்காமல் ஷேவிங் செய்ய வேண்டும். இல்லையெனில் அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.

ஐஸ் கட்டி:

பருக்களை போக்கும் சிறந்த பொருட்களுள் ஐஸ் கட்டியும் ஒன்று. அதற்கு ஐஸ் கட்டியை பிம்பிள் உள்ள இடத்தின் மேல் வைக்க வேண்டும். வேண்டுமெனில் மூல்தானி மெட்டி, எலுமிச்சை மற்றும் சந்தனப் பவுடரை கலந்து, அதனையும் பிம்பிள் மேல் வைத்து, காய வைத்து, பின் ஐஸ் கட்டியை வைத்து தேய்க்க வேண்டும். இதனால் அந்த குளிர்ச்சியினால், பிம்பிள் உடைந்து பரவாமல் எளிதில் போய்விடும்.

சந்தன பவுடர்:

இது பருக்களை போக்கும் ஒரு பாரம்பரிய வீட்டு மருந்துகளுள் ஒன்று. அதற்கு சந்தன பவுடரை, ரோஸ் வாட்டரில் கலந்து, பிம்பிள் மேல் வைத்து, காய வைத்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், பிம்பிள் விரைவில் போய்விடும்.

எலுமிச்சை மசாஜ்:

பிம்பிளைப் போக்குவதில் எலுமிச்சை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த பொருள் இருபாலருக்குமே நல்ல பலனைத் தரும். அதற்கு எலுமிச்சை துண்டு அல்லது சாற்றை பருக்கள் உள்ள இடத்தில் தடவி தேய்த்து வந்தால், பருக்கள் மறைந்துவிடும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். மேலும் இவ்வாறு செய்த பின், மறக்காமல் மாய்ச்சுரைசரை தடவ வேண்டும்.

இவையே ஆண்களின் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் பிம்பிளை போக்க செய்யப்படும் இயற்கை முறைகள். வேறு ஏதாவது முறைகள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதே காரணம். இயற்கை முறையில், வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் ஒருசில செயல்கள் மூலம் சருமப் பிரச்சனை சரிசெய்யலாம். சரி, இப்போது ஆண்களின் முகத்தில் இருக்கும் பிம்பிள் மற்றும் முகப்பருக்களை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

கிளின்சிங்:

பொதுவாக பருக்கள் மற்றும் பிம்பிளைப் போக்க மைல்டு கிளின்சரைப் பயன்படுத்தி, முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் கிளின்சிங் செய்வதால், இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும். மேலும் முகப்பரு மற்றும் பிம்பிள் உடைந்து, பரவாமல் தடுக்கலாம். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்வது நல்ல பலனைத் தரும். இது ஆண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு முறை. எனவே ஆண்கள் இதனை குறைந்தது வாரத்திற்கு 2-4 முறை செய்வது நல்லது.


ஷேவிங் முறை:

பருக்கள் இருக்கும் ஆண்கள் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு பருக்கள் வருவதற்கு ஷேவிங் முறையும் ஒரு காரணம். எனவே ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக, நல்ல கூர்மையான பிளேடுகளை பயன்படுத்தி, பிம்பிள் உள்ள இடத்தில் அதிக அழுத்தம் கொடுக்காமல் ஷேவிங் செய்ய வேண்டும். இல்லையெனில் அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.

ஐஸ் கட்டி:

பருக்களை போக்கும் சிறந்த பொருட்களுள் ஐஸ் கட்டியும் ஒன்று. அதற்கு ஐஸ் கட்டியை பிம்பிள் உள்ள இடத்தின் மேல் வைக்க வேண்டும். வேண்டுமெனில் மூல்தானி மெட்டி, எலுமிச்சை மற்றும் சந்தனப் பவுடரை கலந்து, அதனையும் பிம்பிள் மேல் வைத்து, காய வைத்து, பின் ஐஸ் கட்டியை வைத்து தேய்க்க வேண்டும். இதனால் அந்த குளிர்ச்சியினால், பிம்பிள் உடைந்து பரவாமல் எளிதில் போய்விடும்.

சந்தன பவுடர்:

இது பருக்களை போக்கும் ஒரு பாரம்பரிய வீட்டு மருந்துகளுள் ஒன்று. அதற்கு சந்தன பவுடரை, ரோஸ் வாட்டரில் கலந்து, பிம்பிள் மேல் வைத்து, காய வைத்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், பிம்பிள் விரைவில் போய்விடும்.

எலுமிச்சை மசாஜ்:

பிம்பிளைப் போக்குவதில் எலுமிச்சை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த பொருள் இருபாலருக்குமே நல்ல பலனைத் தரும். அதற்கு எலுமிச்சை துண்டு அல்லது சாற்றை பருக்கள் உள்ள இடத்தில் தடவி தேய்த்து வந்தால், பருக்கள் மறைந்துவிடும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். மேலும் இவ்வாறு செய்த பின், மறக்காமல் மாய்ச்சுரைசரை தடவ வேண்டும்.

இவையே ஆண்களின் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் பிம்பிளை போக்க செய்யப்படும் இயற்கை முறைகள். வேறு ஏதாவது முறைகள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.